Wednesday, August 21, 2013

நட்பின் ஒளியைப் பரவச் செய்பவன்

மலையாளம் மூலம் : டி.ஆர். ஸ்ரீஹர்ஷன்
தமிழில் : கே.வி.ஷைலஜா

‘‘என் வீட்டின் கதவைத் திறந்து யாரும் எப்போதும் உள்ளே வரலாம்’’ வைக்கம் முகமது பஷீர் இதை அடிக்கடி சொல்லியிருக்கிறார். அப்படி நுழையும் அனைவருக்கும் அளவிடமுடியாத பிரியமும், பஷீரின் வார்த்தையிலேயே சொல்வதென்றால் அவரால் செல்லமாக எடீ என அழைக்கப்படும் அவர் மனைவி செய்த பிரியாணியும், மாமர நிழலில் நிகழும் இலக்கிய உரையாடலும் எப்போதும் கிடைத்தது. தன்னைத்தேடி வருபவர்களுக்கு அன்பையும், உணவையும் மட்டுமல்லாது உலக விஷயங்களையும் பரிமாறியிருக்கிறார் பஷீர்.
அதனால்தான் பஷீரை நினைக்காமல் தமிழ் எழுத்தாளன் பவாசெல்லதுரையை யாராலும் வாசிக்க முடியாது. திருவண்ணாமலையில் பவாவின் வீடு வேலிகளும், படல்களும், தடுப்புகளுமின்றி எப்போதும் திறந்திருந்து நண்பர்களை அப்படியே உள்வாங்கத் தயாராக உள்ளது.
ஒரு விசாலமான மாந்தோப்பினிடையே சப்போட்டா, கொய்யா, மாதுளை என விரியும் அதன் நிலப்பரப்பில் ஒரு மீன்குளமும், குளக்கரையின் எல்லாக் கரைகளிலும் உயர்ந்து நிற்கும் மரங்களும், செடிகளுமாக நம்மை வசீகரிக்கிறது.
இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட நெல்வயல், முயல்கள், வாத்துகள், மாடுகள், கோழிகள், மகளுக்காக வளர்க்கப்படும் ஒரு குதிரையென சுதந்திரமாய்ச் சுற்றித் திரியும் இவற்றினூடேதான் பவாவின் எளிய மண்வீடு.
விலங்குகளும், பறவைகளும், மரங்களும், மனிதர்களும் கலந்து சங்கமித்து வளரும் இந்த வசிப்பிடத்தில்தான் பவாவின் நிபந்தகளோ, எல்லைகளோ இல்லாத நட்பின் பெருமரங்கள் வளர்ந்து நிற்கின்றன.
மனைவியும், ‘வம்சிபுக்ஸ்’ பதிப்பாளருமான ஷைலஜாவும், மகன் வம்சியும், மகள் மானசியும் இவரின் நெடும் பயணத்தில் ஒரு நதி போல உடன் கலக்கிறார்கள்.
‘‘எல்லா நாளும் கார்த்திகை’’ என்ற இப்புத்தகம் பவாவின் வாழ்வின் சிலத் துளிகள்தான். நட்பை இதயத்தின் கனலாய் பொத்திப் பாதுகாக்கும் பவாவின் வாழ்வின் பல அடுக்குகளில் அவருடன் வரும் நண்பர்கள் பற்றியும், அவர்களுக்குள் இழையோடும் நட்பைப் பற்றியும், அதி மனோகரமான மொழியில், ஆற்றொழுக்கான நடையில் சொல்கிறது இப்புத்தகம்.
மம்முட்டி, சக்காரியா, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, பாலுமகேந்திரா, நாசர், பாரதிராஜா, ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, திலகவதி ஐ.பி.எஸ், பாலா, சா. கந்தசாமி, என நீளும் இருபத்திநான்கு நண்பர்களின் வாழ்வில் பரிணமிக்கும் ஆபூர்வ நிமிடங்களின் பதிவு இது.
மனிதன் என்ற நிலைபாட்டில் எந்த மலையாளியும் இதுவரை பார்க்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாத மம்முட்டியைத்தான் பவா இந்த புத்தகத்தில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். மம்முட்டி என்ற மனிதனின் இதய ஆழத்திற்குப் போய், அவருக்கும் பவாவுக்குமான நட்பின் விசாலத்தை நமக்கும் கடத்துகிறது ஒரு அத்தியாயம்.


பாலச்சந்திரன்சுள்ளிக்காட்டின் மகன் திருமணத்திற்காக கொச்சினில் போய் இறங்கியதும், அங்கே எதிர்பாராமல் மீண்டும் மம்முட்டியைப் பார்த்ததும், பால் சக்கரியா ஒரு இரவு பவா வீட்டில் தங்கியதையும் ஒரு ஓவியம் மாதிரி பவாவால் தீட்டமுடிகிறது இந்தத் தொகுப்பில்.
எழுத்தாளர் திலகவதி ஐ.பி.எஸ்.க்கும் தன் குடும்பத்துக்குமான ஆத்மார்த்தமான அன்பைப் பற்றிய உரைநடை வாசிக்கும் எவரையும் அதிசயிக்க வைக்கும்.
நட்பைக் கூட சொந்த விஷயங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என யோசிக்கவைக்கும் இக்காலத்தில் அதிலிருந்து முற்றிலும் விலகி, சில நினைவுகளை, ஞாபகப்படுத்துதல்களை மட்டும் நமக்கு நேராக உயர்த்திப் பிடிக்கிறது இப்புத்தகம்.
‘எல்லா நாளும் கார்த்திகை’ தேசாபிமானி வார இதழில் தொடராக வெளிவந்து, இப்போது கோழிக்கோட்டிலிருந்து இயங்கும் ‘ராஸ்பெரி புக்ஸ்’ மூலம் மிக நேர்த்தியான தொகுப்பாக வெளிவந்துள்ளது. பவாவின் கவித்துவம் மிக்க வார்த்தைகளை கொஞ்சமும் சிந்திவிடமால் தமிழை மலையாளத்திற்கு கடத்தியிருக்கிறார் டாக்டர். டி.எம்.ரகுராம்.


Raspberry Books
Manuelsons Towers
Muthalakkulam,
Calicut – 673 001
Ph - +91 - 495 - 4050559

e-mail : info.raspberry@gmail.com

Wednesday, August 14, 2013


என் ’வலி’ சிறுகதை ((உயிர் எழுத்தில் வெளியானது) மலையாளத்தில் மொழி பெயர்க்கப்படடு இந்த இதழ் தேசாபிமாணியில் வெளியாகியுள்ளது. என் மலையாள வாசகர்களிடமிருந்து தொடர்ந்து தொலை பேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது. சந்தோஷம் அளிக்கிறது. இக்கதை திரு.ராம்கோபால் அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு இந்தியன் லிட்ரேச்சர் இதழில் வெளியாக உள்ளது. மேலும் மகிழ்சி அளிக்கிறது. 








Wednesday, August 7, 2013

எழுத்தாளர். ஜெயமோகனின் புதிய சிறுகதைகளின் தொகுப்பான வெண்கடல் வெளியீட்டு விழா



இன்று மாலை ஈரோடு புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்கடல் சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழா.

அறம் வரிசை சிறுகதைகளின் தொடர்ச்சியாக அதே அலை வரிசையில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு வெண்கடல்.

வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து ஜெயமோகன் வம்சி ஸ்டாலில் (அரங்கு எண். 114) வாசகர்களுக்கு கையொப்பமிட்டு கொடுக்கிறார். உடன் வாசகர்களோடு கலந்துரையாடலிலும் பங்கெடுக்கிறார்.

அனைவரும் வருக. 


சுமித்ரா: புதுமையான கோணத்தில் ஒரு புதினம்


கல்பட்டா நாராயணன் எழுதி தமிழில் கே.வி. ஷைலஜா மொழிபெயர்த்த  சுமித்ரா என்ற நாவலை முன்வைத்து தோழர் டி. லட்சுமணன் எழுதிய நூல் மதிப்புரை

மலையாள கவிஞர் கல்பட்டா நாராயணன் எழுதிய இத்ர மாத்திரம் என்ற நாவலை கே.வி.ஷைலஜா 'சுமித்ரா' என்று பெயரிட்டு தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
மொழிப்பெயர்ப்பாளர் ஷைலஜா, ஏற்கனவே கேரளாவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவ ரான பாலச்சந்திரனின் கள்ளிக்காடின் சிதம் பரம் நினைவுகள் என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். மேலும் ஒரு சில சிறந்த மலையாள நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சுமித்ரா எனும் அந்த சிறிய நாவலில் கல்பட்டா நாராயணன் கையாண் டிருக்கும் சாதுரியம், அந்தப்புதுமை என்னை வசீகரித்தது.
சுமித்ரா இறந்து கிடக்கிறாள். வழக்கப்படி கணவன், மகன், மகள், அண்ணன்,தம்பி, தாய், தந்தை இப்படிப் பலர் வந்து துக்கிப்பது, அழுவது, மலர் மாலை வைத்து வணங்குவது -இவையெல்லாம் சகஜம்தான். ஆனால் கல் பட்டா நாராயணன் ஒரு புதிய பாணியை கையாளுகிறார். கணவனாக இருந்தாலும், மகளாக இருந்தாலும், மற்ற உறவினர்களாக இருந்தாலும், சுமித்ராவோடு அவர்களுக்கு இருந்த உறவு, நெருக்கம், ரகசியம்-இவைகளை அவரவர் வழியிலே சிந்தனை ஓட்டங்களாக கதை ஆசிரியர் பாய்ச்சுகிறார். அது இந்த நாவலின்  புதுமை.
நாவலின் ஆரம்பத்தில்   சுமித்ரா  இறந்து பட்டதாகக் காட்டப்பட்டாலும், கதை முழுவ தும் அவள்தான் உயிரோடு நடமாடுகிறாள். அவளைச் சார்ந்த மக்களின் எண்ண ஓட்டத் தில் அவள் வாழ்கிறாள்.அந்தச் சாதாரணப் பெண் வாசுதேவன் என்ற சாதாரணமான வனுக்கு மனைவியாக வாழ்ந்தவள்தான், அனுசுயா என்ற பெண்ணுக்குத் தாயாக ஆன வளும்தான், ஆனாலும், அந்தச் சாதாரணப் பெண்ணின் வாழ்க்கையை நூல் ஆசிரியர் கல்பட்டா நாராயணன் பல கோணங்களில் சொல்லிச் செல்லும் விதம் உயிர் பெற்று நிற் கிறது. அவளோடு இணைந்த மக்களின் வாழ் வையும், அதேபோல் ஒளிவு மறைவின்றி அம் பலப்படுத்தி, நம்மை ஆச்சரியப்பட வைக் கிறார்...  எல்லாம் சுமித்ராவின் மரணத்தைச் சுற்றியேதான்.  மிகவும் பிரியத்துடன் எப்போதும் தன்னைத்தானே இறுக்கிப் பிடித்தபடிதான் சுமித்ரா தூங்குவாள். இடதுகையை மார்பில் வைத்து வலதுகையை வயிற்றின் குறுக்கே வைத்து... அவள் உறக்கத்தில் முற்றிலும் ஆழ்ந்து ... பார்ப்பவர்களுக்கு உள்ளே வந்து அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம். நன்றாகத் தூங்கட்டும் என்று சொல்லத் தோன்றும். (மாறாக) அனுசூயாவிற்கோ.. அம்மாவின் இந்த சுகமான நித்திரையைப் பார்க்கிற போதெல்லாம் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டு அன்றே ஹாஸ்டலுக்குத் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் வரும்.
அனுசுயாவின் இந்த அச்சத்தை ஆசிரியர் எங்கு கொண்டு வந்து முடிச்சு போடுகிறார் பாருங்கள். இறந்து கிடந்த போதும் சுமித்ரா தூக்கத்தில் இருப்பதுபோலவே படுத்துக் கிடந்தாள். கைகளை விரித்து நீட்டி உடலோடு சேர்த்து வைக்க வேண்டுமா என யோசித்தாலும் வாசுதே வன் (கணவன்) அவளுடைய ஆழ்ந்த உறக்கத் தின் (சாவை) இயல்பைக் கெடுக்கவில்லை.


இந்த வர்ணனை சுமித்ராவோடு நின்றால் பரவாயில்லை. ஆசிரியர் என்னைப் போன்ற வாச கனையும், அசைத்து விடுகிறார். என் தந்தை தூங்கும் போது எப்பவும் இரண்டு பதினைந்து வருடங்களுக்கு முன்னால், கைகளையும் முன் னால் மடக்கியுள்ள இரண்டு தொடைகளுக்கு இடையில் சொருகிக் கொள்ளுவார், இறந்து கிடந்த போதும் அப்படியே கிடந்தார். சுமித்ரா நூல் இந்த ஞாபகத்தை எனக்கு வரச் செய்து விட்டது. சுமித்ரா வாழ்ந்த காலத்தில் அவள் மீது மனதள வில் ஆசைப்பட்டு ஏங்கியவர்களின் எண்ண ஓட் டம்., அவளின் அங்கங்களை கண்டு ரசித்தவர்க ளின் எண்ண ஓட்டம், அவளை தொட வேண்டும் என எண்ணியவர்கள், அப்படி அவளைத் தொட் டுவிட்டவரின் எண்ண ஓட்டம்.  அவளை மரியா தையுடன் நடத்தியவர்கள், அவளிடம் சில்லரை உதவிகளைப் பெற்றவர்கள், அவள் மகளின் அனுபவங்கள், கணவனின் நினைவுகள், இப் படிப் பல சம்பவங்களை நுட்பமான, வலிவான வார்த்தைகளால் கல்பட்டா நாராயணன் ஓவியம் வரைகிறார். கவிஞராக இருந்த காரணத்தால் நாவலையும், கவித்துவத்தோடு எழுதியுள்ளார்.
மகள் அனுசுயா ஹாஸ்டலிலிருந்து, இறந்து விட்ட தாயைப் பார்க்க காலம் கடந்து வர வேண் டியதாயிற்று.மூச்சு வாங்க ஓடி வந்த அவள், தாய் சுமித்ராவை கட்டிப்பிடித்து அழத் தொடங் கினாள். அங்கிருந்த மற்ற பெண்களும் இது கண்டு அடக்க முடியாத அழுகையில் ஆழ்ந்தார்களாம். இங்கே ஆசிரியர் இந்த அழுகைக்கு ஓர் அர்த்தம் சொல்லுகிறார். அழுவதில் ஆண்களை விடவும் பெண்களுக்குத் தொடர் காரணங்கள் நிறையவே இருக்கின்றனவாம்.  கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில்  பணிச்சியர் (தாழ்த்தப் பட்ட பெண்கள்) நீண்ட நேரம் குத்துக்காலிட்டு பூமியில் உட்கார்வது போல் வேறுயாராலும் உட் கார முடியாது. உட்கார்ந்துவிட்ட பிறகு எழுந்தி ருக்க மிகவும் யோசிப்பார்களாம். தங்குவதற்கு இடமில்லாததால் கிடைக்கும் இடத்தில் உட்கார வும் உடல் மறைக்க ஒரே ஒரு துண்டு மட்டுமே மார்பில் கட்டும் பழக்கமுள்ள பணிச்சியர் இப்படி உட்காருவதையே இருப்பிடமாக்கியும் பழகி இருக்கிறார்கள். இப்படி உட்கார இன்னொரு காரண மும் உண்டு. இந்தப் பணிச்சியர் உள்ளாடை கட்ட வக்கில்லாததால் குத்துக்காலிட்டு உட்காரப் பழகிக் கொண்டார்கள் என்கிறார்.
ஆசிரியரின் ஆழமான பார்வை ஒரு குறிப் பிட்ட மக்களின் பழக்கத்துக்கான காரணத்தை எவ்வளவு நுணுக்கமாக வர்ணிக்கிறார் பாருங் கள். ஒவ்வொரு நிகழ்ச்சியையும், மனித வாழ்வின் அசைவையும் , எண்ணங்களின் சபலங்களையும், துடிப்பையும் அழகுபட கூர்மையாகவும், நேர்த் தியாகவும் எடுத்துக்காட்டுகிறார். ஷைலஜாவின் மொழி பெயர்ப்பும் கூடவே சரிகட்டி ஓடுகிறது. சுமித்ராவை வேறு ஒரு கோணத்தில் ஆசிரியர் பார்க்கிறார்.
மகளுக்கும், கணவனுக்கும் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் சுமித்ரா வெண்கல பாத் திரம் விற்கும் பொதுவாள் என்கிற வியாபாரிடம் தன்னை இழந்ததை யார் அறிவார்? அந்தப் பாத் திரவியாபாரியும் இறந்துவிட்ட சுமித்ராவும் தான் அறிவார்கள். சுமித்ரா இறந்துவிட்டதைக் கேட்டு பாத்திர வியாபாரி துடிப்போடு பார்க்க வந்தவன் தான். ஆனால் அவனுக்கு கிடைத்த அந்த ஒரு சந்தர்ப்பம் பிறகு எவ்வளவு முயன்றும் பின் னாளில் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் அவ னுக்கு உண்டு. இந்த ஏக்கத்தோடுதான் இறந்து கிடக்கும் சுமித்ராவை பார்த்துக் கொண்டிருந் தான். மேலும் சுமித்ராவின் அந்தரங்கத்தைப் பாருங்கள். மாதவி என்ற பெண் பல ஆண்களோடு பழகுகின்றவள். அவளோடு சுமித்ரா தாராளமாக பழகுகின்றவள். ஒரு நாள் மாதவியிடம் இன்று இரவு உன் வீட்டுக்கு யார் வருவார்கள் என்று கேட்டு நானும் வருகிறேன் என்று சொல்லிச் சென்றாள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தால், விபத்தால் சொன்னவன் அந்த இரவு மாதவி வீட்டுக்கு வர முடியவில்லை. சுமித் ராவோ சொன்னபடி மாதவி வீட்டுக்குப் போனாள். மாதவி வீட்டுக்கு வர வேண்டியவன் விபத்தால் இறந்துவிட்டான். எனவே சுமித்ரா எதிர்ப்பார்த்து போனது கிடைக்கவில்லை.
ஒரே நபர் சிலருக்கு தெய்வமாகக் கூட தோன்றலாம். அதே நபர் வேறு சிலருக்கு மிக மிகச் சாதாரண மனிதராகவும் தோன்றலாம். பெரும் பாலோர் இப்படித்தான் பல பரிமாணங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். படைப்பாளி கல்பட்டா நாராயணன் சுமித்ரா என்ற ஒரு படைப்பை உருவாக்கி அவளின் பரிமாணங்களை அவள்  இறந்த பிறகு மற்றவர்கள் மூலம் வெளிப்படுத்து வது புதிய அணுகுமுறையே.
படைப்பாளி மனித உறவுகளின் இருப்பை உடைக்கும் கட்டத்தைப் பாருங்கள்.  வெட்டி வேர், வத்தி என எல்லாவற்றின் மணம் அடங்கின. சுமித்ரா சுவாசிக்க முடியாத துர்நாற்றமாக மாறி னாள், ஆட்கள் தனியாகவும், இரண்டிரண்டு பேராக வும் கலையத் தொடங்கினார்கள்.
முன்பெல்லாம் பிணம் எரிந்து முடிந்தது என்று உறுதி செய்த பிறகுதான் சுடுகாட்டை விட்டு திரும்பி வருவார்கள். இப்போதெல்லாம் மரணத்தின் சந்நிதியில் அதிக நேரம் நிற்ப தற்கான திராணி மனிதர்களிடம் குறைந்து கொண்டே வருகிறது. சுமித்ரா தாமதிக்கச் செய்த காரியங்கள் ஒவ் வொன்றும் சுடுகாட்டுக்கு வந்த ஒவ்வொருவ ருக்கும் ஞாபகம்வரத் தொடங்கின. அவர்கள் வீட்டுக்குச் சென்று மாடுகளை அவிழ்த்துக் கட்ட, புஞ்சை நிலத்திற்குத் தண்ணீர் திறந்து விட, மாலைநேரக் கதிரடிப்பதற்காக, மாடுகளைத் திரட்ட, காப்பிக்கொட்டை பறிக்க, மிளகை அளந்து மூட்டை பிடிக்க உடனே திரும்ப வேண் டும். அதோடு, மரணத்திலிருந்து ஒளிந்து கொள் ளவும் அவர்கள் ஆசைப்பட்டார்கள். இந்த வர்ணனையில் மனித உறவின் ஆழமான தத்துவம் மறைந்து கிடக்கிறது.