Sunday, October 16, 2011

‘Ruins of the Night’ வெளியீட்டு விழா

அக்டோபர் 11 எங்கள் மகன் வம்சிக்கு பிறந்தநாள். பிறந்த நாளை, அவனுடைய நண்பர்களோடும், கொஞ்சம் எங்களுடைய நண்பர்களோடும் எப்போதும் கொண்டாடுவோம். அப்படியான வேலைகளில் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது பவாவின் ‘நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை’ ஆங்கிலத்தில் ‘Ruins of the Night’ என்ற பெயரில் பாரதி புத்தகாலயத்தின் ‘Indian University Press’ மூலம் வெளிவந்தது. இரண்டையும் சேர்த்து நண்பர்களோடு கொண்டாட முடிவு செய்தோம். எங்கள் நண்பர் ஜார்ஷ்வா பீட்டர் அந்நிகழ்வின் பகிர்தலை தன்னுடைய ‘Inter dialogue Center’ ல் நடத்த முடிவு செய்து, அழைப்பிதழும் தயாரித்து கொடுக்க ஆரம்பித்து விட்டார். அழைப்பிதழோடு நண்பர் கருணாவை பார்க்கப் போனபோது ‘இதை எப்படி மிகக் குறைந்த நண்பர்களோடு நடத்துவீர்கள். என்னுடைய கல்லூரிப் புல் வெளியில் இன்னும் கூடுதலான நண்பர்களோடு மிகச் சிறப்பாக நடத்தலாம். நானே இந்த முழு நிகழ்ச்சிக்கும் பொறுப்பேற்கிறேன். யாரும் இதைத் தடுக்கக் கூடாது’ என்ற அன்பு கட்டளையோடு மொத்த நிகழ்வையும் தன் கையில் எடுத்துக் கொண்டார்.

400 பேர் வந்திருந்த அந்த ரம்மியமான விழாவில் வம்சி அவனுடைய, சேலம் மணி பெரியப்பா அங்கிருந்து அனுப்பிய கேக்கினை வெட்டி அனைவருக்கும் கொடுத்தான். அது அமுத சுரபி போல வெட்ட வெட்ட அந்த நானூறு பேருக்கும் வந்தது இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது.

‘Ruins of the Night’ ன் ஆங்கில பதிப்பை கே.எஸ்.சுப்ரமணியன் தலைமையில் மா.ராஜேந்திரன் வெளியிட S.K.P. கருணா பெற்றுக் கொண்டார். ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் செயலாளர் ஏசுடையான் வாழ்த்திப் பேச ரவிக்குமார் புத்தகம் குறித்தும் பொதுவான மொழி பெயர்ப்பு குறித்தும் பேசினார்.
நண்பர் ஜார்ஷ்வா பீட்டரும், ஷைலஜாவும் தொகுத்து வழங்கிய நிகழ்வின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.




மேலும் புகைப்படங்களைக் காண:

2 comments:

  1. வம்சிக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.கேக்கின் இனிப்பும் புத்தக வெளியீட்டு விழாவின் இனிப்பும் ஒரே சமயத்தில்/

    ReplyDelete
  2. Greetings to Vamsi. Dear Mr. Bhava I am totally impressed your writing. Your life is wonderful with good writers.

    Kamalakannan
    Sharjah

    ReplyDelete