Wednesday, July 17, 2013

'எல்லா நாளும் கார்த்திகை' - மலையாளத்தில்



‘மீடியா வாயஸ்சில்’ என் ‘எல்லா நாளும் கார்த்திகை’ தமிழில் பத்தியாக வந்து கொண்டிருந்தபோதே, மலையாளத்தில் தேசாபிமானியிலும் பத்தி வந்தது. நான்கு மாதங்களுக்கு முன் திருச்சூருக்கு பக்கத்தில் ஒரு குக்கிராமத்தில் ஒரு நாள் போனபோது நாலைந்து வாசகர்கள் என்னிடம் வந்து அக்கட்டுரைகளை பற்றி சிலிர்த்து பேசினார்கள். மிளகும், பாக்கும், தேங்காயும் என் வண்டியில் ஏற்றி தங்கள் அன்பைப் பகிர்ந்தார்கள்.

கேரளா முழுக்க அக்கட்டுரைகளுக்கு பெரும் வாசகர்கள் உண்டு. எம். முகுந்தன், சக்காரியா, சந்தோஷ் ஏச்சிக்கானம், இந்துமேனன் என்று அதன் வாசகர் தளம் விரிந்து கொண்டேயிருந்தது.

தற்போது ராஸ்பெரி பப்ளிகேஷன்ஸ் சார்பில் மிக அழகான வடிவமைப்பில் ஓவியர் ‘அரஸ்’சின் ஓவியங்களுடன் அது புத்தகமாக வந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் அதற்கான வெளியீட்டு விழாவை மஞ்சேரியில் நடத்த உள்ளது ராஸ்பெரி. அது என் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் டாக்டர். ரகுராமின் சொந்த ஊர். மட்டுமல்ல கேரள பேரழகிகள் நிறைந்த ஊர் எனவும் சொல்வர்கள்.

4 comments:

  1. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் !! 'அழகிய' படங்களை எதிர்பார்க்கிறோம் !!!

    ReplyDelete
  3. வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள்.

    ReplyDelete