







சில ஆண்டுகளுக்கு முன் என் முதல் கடிதத்திற்கு பதில் எழுதிய
சுந்தர ராமசாமி இந்த வருடம் வாசிக்க வேண்டிய மிக முக்கிய
புத்தகம் என்று குறிப்பிட்டது மசானபு ஃபுபேகாவின் ”ஒற்றை
வைக்கோல் புரட்சியை”.
காலத்தின் சுழற்சியில் பூவுலகின் நண்பர்களோட சேர்ந்து வம்சி
புக்ஸ் சுற்றுசூழல் வரிசையில் 16மிக முக்கிய புத்தகங்களை
கொண்டு வருவது என்றும் அதில் முதல் 8புத்தகங்களையாவது
இப்புத்தக கண்காட்சியின் நிறைவுக்குள் கொண்டு வரும் முயற்சியில்
இரவு 10மணிக்கு அதன் 8அட்டைபடங்களை நிறைவு செய்தோம்.
மதிக்கத்தக்கவனும், நேசிக்கததக்கவனுமான புகைப்பட கலைஞனும்
சூழலியல் வாதியுமான ஆர்.ஆர். சீனிவாசனும் அவர் நண்பர்
ஆர். கனேசனும் இவ்வளவு அழகான அட்டை படங்களை
வடிவமைத்து தந்தார்கள்.
நண்பர் ஆதி. வள்ளியப்பனும், நானும் கடந்த 48 மணிநேரத்தில் 48 தடவைகளாவது தொலைப்பேசியில் உரையாடி இதன் வடிவத்தையும் வார்த்தைகளையும் செழுமைப்படுத்தினோம். என் மருத்துவ விடுப்பு
முடிந்து மீண்டும் ஜனவரி இரண்டாம் தேதி அலுவலகத்திற்கு
ஒரு பொய் மருத்துவ சான்று கொடுத்து சேரவேண்டும். சேருவதா
அல்லது என் நிலத்திற்கே போய் தீவிர விவசாயியாக மாறி
மண்ணோடும், நீரோடும்,சேரோடும் மிதி படும் மகத்தான இயற்கை
வாழ்வைத் தேடி இப்புத்தகங்கள் என்னை நகர்த்துகின்றன.
அன்புத்தோழர்,
ReplyDeleteவணக்கம்.
சென்னை புத்தகக்கண்காட்சியில் வம்சியின் வெளியீடுகள் 40 என்றதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனேன். அதிலும், இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் புத்தகத் தயாரிப்புப் பணிகளுக்கு மத்தியில் உங்கள் மகிழ்ச்சியை பதிவிலும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. கை கொடுங்கள் தோழர், வாழ்த்துக்கள்.
ஒரு பதிப்பகத்தோழரிடம் வம்சியின் வெளியீடு பற்றி பகிர்ந்துகொண்ட போது " இலக்கியம்தானே தோழர், சீரியஸா செய்றதுதான் கஷ்டம்" என்றார். இலக்கியமும் சீரியஸானது என்பதையும் தாண்டி, சூழலியலில் வம்சியின் வெளியீடுகள் பெரும் வரவேற்பப்பெரும். ராக்கேல் கார்சனின் மெளன வசந்தம், புகாகோவின் ஒற்றை வைக்கோல் புரட்சி..என மிரட்டி விட்டீர்கள் தோழர். சில மாதங்களுக்கு முன்னால் ராக்கேல் கார்சனின் படைப்புகளைத்தேடி அலைந்த போது தமிழ் பதிப்புலகம் குறித்த ஆற்றாமை கூட ஏற்பட்டது. மாற்று இலக்கியம் என்பதைக் கடந்து, வம்சியின் கடமை புதிய தளங்களில் உயர்ந்து நிற்கிறது.
புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம். வம்சிக்கு வாழ்த்துக்கள்.
பூவுலகு/வம்சி வெளியீட்டில் வரும் சூழலியல் குறித்த புத்தகங்களின் அட்டைகள் அருமையாக உள்ளன. சூழலியல் புத்தகங்களுக்கு பச்சை வண்ணத்தில் அட்டையைத் தேர்ந்தெடுத்திருப்பது நல்ல விஷயம்! பூவுலகு/வம்சி வெளியீட்டில் வரும் புத்தகங்கள் பெரும் வரவேற்பைப் பெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம், வம்சி பதிப்பக ஆக்கங்களை கண்காட்சியில் கண்டேன். மிகுந்த அழகியல் உணர்வுடனும் தரமாகவும் நூற்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. பாராட்டுக்கள்.
ReplyDeleteசுற்றுச்சூழல் குறித்த புத்தகங்களுக்கு பச்சை நிற அட்டையைத் தேர்ந்தெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அட்டைப் படங்கள் சிறப்பாக உள்ளன. சுற்றுச்சூழல் குறித்து வம்சி-பூவுலகு வெளியீட்டில் வரும் இந்தப் புத்தகங்கள் பெரும் வரவேற்பைப் பெற வாழ்த்துக்கள்!
ReplyDeletewhere Can I get vamsi Books in chennai
ReplyDelete