Saturday, November 19, 2011

மலையாளத்தில் காலம்....

நான் ஒரு எழுத்து சோம்பேறி என்பது என்னை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். என்னவோ ஒரு உந்துதலில் சமீப நாட்களில் பதினாறு தொடர் கட்டுரைகளை ஒரே மனநிலையில் எழுத முடிந்தது . இது இன்னமும் தொடரும் போலத்தான் இருக்கிறது. அது 'மீடியா வாய்ஸ்' என்கிற வார பத்திரிகையில் வெளிவந்து வாசகர்கள் தொடர்ந்து தொலைபேசியில் பேசுவது உற்சாகமளிக்கிறது.
ஒரு வாசகனாய் இதை வாசித்து இக்கட்டுரைகளில் ஈர்க்கப்பட்டு மலையாளத்தில் மொழிபெயர்தார் டாக்டர் டி.எம்.ரகுராம். கேரளாவில் மிகப்பெரிய வாசகபரப்பைக்கொண்டதும், தோழர்.இ.எம்.எஸ். ஆசிரியராய் இருந்து நடத்தியதுமான ''தேசாபிமானி''யில் இக்கட்டுரைகள் மலையாளத்தில் இந்த வாரம் முதல் வெளிவர துவங்கியுள்ளது.

கட்டுரை வெளியான இரண்டொரு நாட்களில் நூற்றுக்கனக்கான வாசகர்கள் தன்னை அழைத்து பேசியும், வாழ்த்து தெரிவித்ததாகவும் இதழ் ஆசிரியர் ரமேஷ்பாபு தொலைபேசியில் அழைத்து கூறினார்.

மிகச்சிறந்த வடிவமைப்போடு வெளியாகியுள்ள இப்பக்கங்களை என் தமிழ் வாசகர்களின் பார்வைக்கு மிகுந்த மனநெகிழ்வோடு பகிர்ந்துக்கொள்றேன்.













8 comments:

  1. வாழ்த்துக்கள் பவா! நீங்கள் பல இந்திய மொழிகளுக்குச்செல்ல வேண்டும் என்று விரும்பு கிறேன் .இந்தியில் நீங்கள் விரும்பினால் "முத்து மீனாட்சி "அவர்களை கேட்டுக்கொள்ளலாம்.சாகித்ய அகடமி அவருடைய மொழிபெயர்ப்பினை ஏற்றுக்கொண்டிருக்கிறது ---காஸ்யபன்.

    ReplyDelete
  2. மிகச்சிறந்த வடிவமைப்போடு வெளியாகியுள்ள இப்பக்கங்களை என் தமிழ் வாசகர்களின் பார்வைக்கு மிகுந்த மனநெகிழ்வோடு பகிர்ந்துக்கொள்றேன்..

    nice. Thank you sir.

    ReplyDelete
  3. \\மிகச்சிறந்த வடிவமைப்போடு வெளியாகியுள்ள இப்பக்கங்களை \\

    உண்மை!..வாழ்த்துக்கள் பவா ;-)

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சார்.........

    ReplyDelete
  5. பிற மொழிகளிலும் வெளியாக வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் . வருகிற புத்தக காட்சியில் எதிர்பார்க்கலாமா ?

    ReplyDelete
  6. மலையாளத்தில் சரியான விஷயத்திற்கு நல்ல அங்கீகாரம் இருக்கும்.உங்களுடையது அனைத்துமே அருமையான பதிவுகள்.வாழ்த்துக்கள் பவா..

    ReplyDelete
  7. அன்புத்தோழர்.பவா,
    வாழ்த்துக்கள்.

    உங்களைப்போன்றோரின் எழுத்துக்கள் மொழிகள் கடந்து பயணிக்க வேண்டும். தமிழின் தனித்துவம் குறித்து மலையாள இலக்கியம் அறிவது இப்போது நடந்திருக்கிறது.

    ReplyDelete