Tuesday, March 26, 2013

புல்லாங்குழல் இசையுடன் தமிழச்சியின் கவிதைகள்

1 comment:

  1. அன்புடன் திரு பவா அவர்களுக்கு வணக்கம்
    தங்களின்” வஞ்சம்” சிறுகதை ஆனந்த விகடன் இதழில் படித்தேன், எனது பழய பள்ளி நினைவுகளை மெல்ல மெல்ல என்னைச்சுற்றி கொண்டு வந்து விட்டதாகவே உணர்ந்தேன், கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்து ஒரு சிறைச்சாலைக்கு செல்லும் உணர்வுகளை மாணவர்களுக்குள் கொண்டு வந்த கண்டிப்புகளின் திலகங்களான ஆசிரியர்களின் அணிவகுப்பை கண்டது போல் ஒரு பிரமை. ஒரு அரசு மேல் நிலைப்பள்ளியின் முன்னால் மாணவனான எனக்கு இந்த கதை எனக்காக எழுதப்பட்டதாக ஒரு தோணல்.
    கருத்த குள்ளமான தலைமை ஆசிரியரின் வருகை, அவரின் அறையில் இருந்து தொடங்கும்போதே பல சிக்னல்கள் எல்லா திசைகளுக்கும் மாணவர்களால் அனுப்பப்படும். அப்படியும் மாட்டிக்கொள்ளும் சிலர், அவரின் கைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் குச்சியின் தாக்குதலுக்கு ஆளானதும். கண்டும் அனுபவித்தும் வாழ்ந்த அந்த நினைவுகளை மிக ஆழமாக எழுப்பி விட்டது உங்களின் வரிகள்
    இந்த கடிதத்தை எனது கணிப்பொறியில் தட்டச்சு செய்யும் போது என்னைச்சுற்றி எனது வகுப்பறையின் ஜன்னல்கள்தான் இருக்கின்றன,
    “அவர் பை, தூண்டில் மீன்களால் நிறைந்து கொண்டே இருந்தது” எவ்வளவு அழகான உவமை, இப்படி ஒரு தூண்டிலில் சிக்காமல் இருந்தால் தினசரி அவமானங்கள் நிச்சயம் என்பதை நானும் அனுபவித்திருக்கிறேன், வகுப்பில் நுழைந்ததும் அந்த ஆசிரியரின் முதலும் மோசமானதுமான கேள்வி நம்மை நோக்கித்தான் வரும் என்று தெரியாமல் பல நாட்கள் பாடாய் பட்டிருக்கிறேன், பின்னாளில் அவரின் போட்டி நிலையில் இருந்த ஒரு ஆசிரியரின் உதவியால் அப்பாவை அழைத்துப்போக வேண்டியிராமல் தப்பித்தேன்.
    சில ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளிகளுக்குள் நிரம்பிக்கிடந்த ஒரு பிற்போக்கு கலாச்சார நிலையை மிக அழகாக வரைந்துவிட்ட சித்திரம் போல் இருந்தது. தனி மனித விருப்பு வெறுப்புகளால் எப்படி பல மாணவர்கள் எதிர்காலங்களை இழந்து நிற்கிறார்கள் என்று எத்தனை பேருக்கு தெரியும், எல்லோருக்கும் இப்படி அப்பாக்கள் கிடைக்குமா என்ன.
    “அப்பா என்னை ஏறெடுத்தார்” என்ற பாராவை முழுதும் படித்து முடித்தபோது என் கண்கள் என்னை அறியாமல் நிறைந்து விட்டன, அந்த மாணவனாக என்னை மாற்றிப்போட்டது.
    இந்த கதையை படிப்பவர்கள் அத்தனைப்பேருக்கும் அந்த மாணவனாக தாங்கள் இருந்த தருணம் நினைவுக்கு வராமல் போகாது என்பது நிச்சயம்.
    இந்த கதையைப்படித்து முடித்தபோது மனதில் தோன்றிய கனம், ஒரு ஆதங்கத்தை தோற்றுவித்தது, “இந்த கதையை ஏன் பள்ளிப்பாடப்பிரிவில் சேர்க்க கூடாது” பலரின் விழிப்புணர்வுக்கு அது காரணமாக அமையுமே?
    அன்புடன்
    தவநெறிச்செல்வன்.

    ReplyDelete