சனிக்கிழமை
நான் படித்த திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரிக்கு ஒரு கருத்தரங்கில் சிறுகதைகள் பற்றி
பேசப் போயிருந்தேன். பேசத் துவங்கி முப்பது நிமிடத்திற்கு பின் அநியாயத்திற்கு உணர்வு
வயப்பட்டேன். அம்பை, நாகராஜன் கதைகளைப் பற்றி முழுமையாக பேச முடியாமல் ஏதோ அடைத்தது.
எதிரில்
இருந்த கிராமத்து மாணவிகளைப் பார்த்தபோது பால் சக்காரியாவின் கதைகள் நினைவுக்கு வந்தன.
எத்தனை முறை எப்போது வாசித்தாலும் என்னை இயங்க விடாமல் செய்யும் ‘ஒரு நாளைக்கான வேலை’
‘இரண்டாம் குடியேற்றம்’ கதைகளை அவர்களின் கனத்த மௌனத்திற்கிடையே விதைத்தேன்.
மனதில்
பதமான ஈரமிருந்தது. எங்கெங்கோ முளைக்கும்.
No comments:
Post a Comment