Thursday, October 6, 2016

சாம்பலில் பூக்கும் நட்புகள்

கேரள தலமைச் செயலாக ஊழியர்கள் சார்பில் நடத்தப்படும் மாத இதழின் ஓணப்பதிப்பில் எனக்கும் ஓணத்திற்குமான தொடர்பு பற்றிய க்ட்டுரை வந்திருந்தது. அதை எடுத்துக் கொண்டு திருவந்தபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்.
என்னுடன் அதிகபட்சம் இரண்டுமணி நேரமிருத்திருப்பார். அதைப் பற்றி அவர் மலையளத்தில் எழுதியிருந்த உரை நடை கவிதைக்கும் சற்று மேலே
அதை மலையாளத்திலும் தமிழிலும் உங்களுக்காக பகிர்கிறேன்.













சாம்பலில் பூக்கும் நட்புகள்
மலையாள மூலம் : ஜோதி சங்கர்
தமிழில் : கே.வி.ஜெயஸ்ரீ
2016, செப்டம்பர் 16
இன்று நீயில்லாமல் நான் மட்டும் ஆரல்வாய் மொழியை தனியேக் கடக்கிறேன். பரந்த என் நெஞ்சில் பட்ட வெயில் உள் நரம்புகளில் ரத்தத்தை சூடாக்கிப் பாய்ச்சுகிறது. இப்போதும் அதே சுங்கப் பாதைகள் என் வழியில் குறுக்கிடுகின்றன.
  உன் பிரியத்தை வேட்டையாட வேண்டி பாறை ஓவியங்களில் என் ப்ரியம் கோர்த்து ஆரல்வாய்மொழியையும், காவேரியையும், கூவகத்தையும் கடந்து இதற்குமுன் நான் பல முறை தனியேப் பயணித்திருக்கிறேன். நெளிந்து, நெளிந்து மண்ணுள் புதைய விரும்பிய சுடுமண் பாதைகளும் ஒன்பது மலைக் கோவிலில் நின்றெரியும் மாலை விளக்குகளும் பாலுமகேந்திராவின்யாத்ராவின் இறுதிக் காட்சிகளை நினைவிலேற்றுகிறது.
வால்நட்சத்திரங்கள் இதயத்தைச் சேர்த்து ஆக்ர்ஷிக்கும் தமிழ் மொழியில் தேர்ந்தெடுத்து வாசிக்கும் முயற்சியின் தொடர்ச்சியாகவே தமிழ் இலக்கியமும் என்னை தன்பக்கம் அழைக்கத் துவங்கியது.
நம் வாழ்நாளின் இறுதி இதுதான் என அச்சமூட்டிய பிரளயம் சென்னையை ஆக்ரமித்தபோது உன் நிறைமாத கர்ப்பத்தின் துயர்போக்க, அந்த அடர் இருளில் நடக்க திராணியற்று சாலையோர நடைபாதையில் அமர்ந்த அக்கணத்தில்தான் நான் முதன்முதலில் பவாவை உனக்காக வரைய ஆரம்பித்தேன்.
கொண்டாட்டங்களின் குதூகலம் முடிந்து தெளிவடையும் ஆகாயத்தைப் பற்றி நீ சொன்ன வர்ணனைகளின் கோடுகளினூடே நான் பவாவின்  ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறைஎன்ற அக்கதையை உனக்காகச் சொல்ல ஆரம்பிக்கிறேன்.
அக்கதையில் வரும் துர்சகுனங்களையெல்லாம் கற்பவதியான உனக்காக நான் மாற்றிப் படித்து சுபமுடிவோடு அக்கதையை உனக்காக சொல்லி முடித்தேன்.
ரயில் கடந்து கடந்து உண்டான தண்டவாளங்களின் காயங்களை மட்டுமே பார்த்துக் கொண்டு வாழ்வை, பிரிவின் துயரில் நகர்த்திய உன் முகத்தில் அக்கதை நீர் தெளித்தது.
நட்சத்திரக் கூட்டங்களைக்கூட, தாள்களில் எழுதுவதற்கான அனுபவங்களை, நட்பை அடைகாத்து வைத்திருக்கும் பவா தன் ஒவ்வொரு நட்பைப் பற்றியும் தன் எழுத்தால் நமக்கு ஒவ்வொரு நாளும் ஒரு கதை சொல்லத் தொடங்கினார்.
என் முயற்சி வெற்றி பெறுமென்ற எந்த நம்பிக்கையுமற்று, எங்கள் மலருக்கான ஒரு கட்டுரைக் கேட்டு பவாவைத் தொடர்பு கொண்டேன். இன்னும் மிச்சமிருக்கும் கார்த்திகை தீப நாட்களில் ஒரு துளியையேனும் கேரள மண்ணுக்கு கொண்டு வந்துவிடவேண்டுமென்ற பிடிவாதமது.
ஆனால் ஆவணியில் பூக்கும் ஓண நினைவுகளை அவர் எனக்காக எழுதித் தந்தார். மொழியாக்கத்தின் செடியில், அச்செடியின் சுகந்தத்தில் அவர் எழுத்து மொட்டவிழ்ந்தபோது அலைவுறும் ஓவியன் ரஞ்சியின் கிரயான் பட்டாம்பூச்சிகளை பியூப்பாவிலிருந்து வெளியேற்றின.
திருவனந்தபுரம் கோட்டைகுள்ளிருந்த மணீஸ் மெஸ்ஸில் மதிய உணவிற்காய் சென்றபோது அவன் மனதால் சுவீகரித்திருந்த தமிழ்நாட்டு வீடுகளின் படங்களை ரஞ்சி காகிதத்தில் ஒற்றியெடுத்தான். தமிழ்நாட்டு பயணத்தினூடே பவாவின் நட்புகளை மனதால் கோர்த்துக் கொண்டே  டப்ளின் நகரமான திருவண்ணாமலைக்குள் நுழைந்தபோது அந்நகரம் இன்னும் விழித்திருக்கவில்லை.
ஸ்ரீமதி. ஷைலஜாவின்வம்சிபுக்ஸில் சென்றமர்ந்து ஒவ்வொரு தமிழ் எழுத்துக்களாக வாசித்துக் கொண்டிருக்கையில்தான் பவா நிலத்திலிருப்பதாகச் சொன்னார்கள்.
பவாவின் வாசனையை தன் மேல் பூசியிருக்கும் பழமரங்களினூடாக நான் அம்மனிதனை எதிர்கொண்டேன்.
என் கையிலிருந்து செக்ரெட்டிரியேட் சர்வீஸ் என மலையாளத்தில் தலைப்பிட்ட இரு இலக்கிய மலர்களையும் அவர் கைகளுக்கு மாற்றினேன்.
ஒவ்வொரு பக்கமாக அவர் புரட்ட புரட்ட நான் அவரின் கண்களையே கவனித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
ஜான் பாலை மட்டும் ஏனோ கடந்துவிட்டார்.
அவர் நிலத்து வீட்டில் நட்பின் நிழல்கள் படர்ந்த இரவுகளை விவரித்தார். மம்முட்டி, ஜெயமோகன், பெருமாள் முருகனென எங்கள் உரையாடல் அந்நிலப்பரப்பில் விரிந்தன.
தேசிய விருது பெற்ற தன்தங்கமீன்கள்முதல் script-டை இக்குடிசையிலிருந்தே ராம் எழுதினார் என்ற செய்தி என்னை காட்சிபடுத்தலுக்கு அழைத்துப் போனது.
ஒட்டர்கள் வெட்டிய கிணறுகள் பவாவின் பூமியை இன்றளவும் ஈரத்திலேயே வைத்துள்ளன.
எழுத்து குறித்தும், எழுத்தாளர்கள் குறித்தும் எங்கள் உரையாடல் நங்கூரமிட்டது.
கப்பல் விசித்திரங்களின் நீர்த்தாரைகளை செதுக்கிய இந்துமேனன், சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகியை எழுத்தில் வரைந்த ட்டி.டி.ராமகிருஷ்ணன், சங்க காலத்தை மலர்களால் தொடுத்தெடுத்த மனோஜ் குரூர், வாசகர்களின் தேடலை தன் பிரியாணியில் தீர்த்த சந்தோஷ் ஏச்சிக்கானமென நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.
வி.ஜெ.ஜேம்சையும், கெ.வி.மணியையும் பவாவுக்கு நான் அறிமுகப்படுத்தினேன்.
சிறிது நேர நடைமுடியுமுன் பாலுமகேந்திரா படம் முற்றத்தில் தொங்கும் பூசாத ஒரு செங்கல் வீட்டைப் பார்க்க முடிந்தது. என் நினைவுகளின் அலையடிப்பில் பாலுமகேந்திரா மீண்டும் வந்தார்.
யாத்ராவின் எண்ணிக்கையற்ற அகல்விளக்குகளின் வெளிச்சத்தின் பிண்ணனியில் மின்னும் சோபனாவைப் பற்றி ஜான்பால் எழுதியிருப்பதை நான் நினைவுப்படுத்தினேன்.
தாங்கமுடியாத துயரத்தில் வேணு நாகவள்ளி சோபனாவை வரைந்து காட்டும் ஓ.என்.வி.யின் பாடல் வரிகளை நான் நினைத்துக் கொண்டேன்.
நஷ்ட வசத்தத்தில் சப்த ரிஸ்வாசமே
பவா இன்னும் கூர்மையாக அவ்வரிகளை உள்வாங்கினார்.
புல்தரையில் தன்னந்தனியாக ஒரே ஒரு அகல் விளக்கிருந்தது.
யாத்ராவின் நினைவுகளுக்காகவா இது?
இல்லை அதனடியில் பாலு மகேந்திராவின் உடல் சாம்பல் புதைக்கப்பட்டிருக்கிறது என்றார் பவா.
நான் என்னிலிருந்து ஒரு நிமிடம் தொலைந்து போனேன்.
 ‘யாத்திராவை ஓலங்களில் ஒற்றியெடுத்த நட்புகளில் ஒன்றான பாலுமகேந்திராவின் சாம்பல் அவ்வீட்டின் மரங்களில் பூக்களாக பூக்கின்றன.
ஆயிரத்தோரு அகல்களின் வெளிச்சத்தைவிட பிரகாசமானது ஒரே ஒரு நட்பின் வெளிச்சம்.

திருவண்ணாமலையை விட்டு கிளம்பும்போது எதேச்சையாக திரும்பி சாரோன் தோட்டத்தைப் பார்த்தேன். அவ்வீட்டின் முன் நட்பின் சாம்பல் எங்கும் சிதறிக் கிடைப்பதை கவனித்தேன்.

No comments:

Post a Comment