திருவண்ணாமலையில் சமூக, கலை, இலக்கிய பண்பாட்டு மையமாக Dialogue அமைப்பின் அலுவலகம் ஒன்றை நடத்த திட்டமிட்டு பல நாட்கள் ஆனது. ஏதேதோ காரணங்களினால் துவங்க முடியாத அந்த அமைப்பு வரும் டிசம்பர் 25 முதல் துவங்குகிறது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைக்கிறேன். எல்லோருமாய் சேர்ந்து இந்த அரங்கில் கூடி விவாதிப்போம்.
பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.
ReplyDeleteசீரிய முயற்சி. பாராட்டுக்கள். முதல் உரையாடல் பற்றி மேலும் பதிவிடுங்கள்.
ReplyDeleteஅன்புள்ள பவா அவர்களுக்கு,
ReplyDeleteகடந்த மூன்று வருடங்களாக நான் உங்கள் வலைப்பூவை தொடர்ந்து வருகிறேன். யார் மனதையும் கோணச்செய்யாத அந்த நடை ஒரு வியப்பு. உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று வெகு நாட்டகளாக, எண்ணிக்கொண்டிருந்தேன். முக்கால் வாசி(க்)கடிதம் எழுதிய பின் சில முறை ஷிப்ட்டி டெலிட்டியிருக்கிறேன், பல முறை கசக்கிக் கிழித்திருக்கிறேன். சமீபத்தில் வாசித்த "ஜெயஸ்ரீயின் கல்வீடு என் பங்களிப்பு" ற்கு பிறகு, (சொன்னால் தவறாக நினைக்கக்கூடாது) நானும் அதே போன்ற ஒரு கல்வீடு கட்டிக்கொண்டிருக்கின்றேன் தினமும் என் கனவில். அதே போன்று அன்பால் நிறைந்ததாய். ஆனால் நீங்கள் உங்கள் இல்லத்தின் க்ருஹப்ரவேசத்து நிகழ்வுகளை பதிவிட்டிருந்தீர்கள் சிறிது காலம் முன்பு. அதின் தொடர்புடைய பதிவுகளும் (பாலு மகேந்திரா ஸார், பிரபஞ்சன் ஸார், மிஸ்கின், திலகவதி மேடம், ஸ்ரீராம் ஸார், எஸ்ரா ஸார் , ஜெமோ ஸார், கோனங்கி அண்ணன்,நா.முத்துக்குமார் மற்றும் பலர்,) வீட்டிற்கு வருகைபுரிந்ததைப்பற்றியும் பதிவிட்டிருந்தீர்கள். அது உண்மையில் அவ்வளவு அன்பால் நிறைந்த வீடு, சமீபத்தில் திருவண்ணாமலை வந்திருந்தேன், கிரிவலம் பொழுது வம்சி புக்ஸ் 'flex' கண்டு ஒரு நிமிடம் அங்கு நின்றிருந்தேன். மற்றபடி இப்பொழுதும் எழுதிக்கொண்டு இருக்கின்றேன், இதுவும் ஷிப்ட்டி டெலிட்டப்படுமா என்பது தெரியவில்லை. ஷைலஜா அக்காவையும் மட்ட்ரவர்களையும் குழந்தையையும் கேட்டத்தகச்சொள்ளவும். ஷைலஜா அக்காவையும் கேட்டதாகச்சொல்லவும். ஷைலஜா அக்க என்று எழ்டும் பொழுதுதான் நா.முத்துகுமார் ஞாபகம் வருகிறது, பின் சென்று நா.முத்துக்குமாரை காப்பி செய்து ஆறு வரிகள் முன் சென்று 'கோனங்கி அண்ணன்' பக்கத்தில் பேஸ்ட் செய்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்னால் மதுரையிலிருந்து தேனீ செல்லும் பேருந்தில் உங்களைப்போலவே சாயல் கொண்ட ஒருவரைப்பர்த்தேன், (ப்ளூ ட்ஷிர்ட் + ப்ளூ ஜீன்ஸ்), அது நீங்கள் தானா என்று தெரியவில்லை.. எல்லோர்க்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
19 டி .எம்.சாரோன் நினைவுகளுடன்.
S பாலசங்கர்.
(P.S)
I don't know your Mail ID, So I could not able to mail u personally. treat this as a mail and while moderation don't publish this as a comment. balasankar.s [at] hotmail.com