அன்பிற்குரிய பவா அவர்களுக்கு,
என் பெயர் தினேஷ் நல்லசிவம், தற்போது பெங்களூரில் பணி செய்து வருகிறேன்.ஆறு மாதத்திற்கு முன்பு திருவண்ணாமலை வந்தபோது வம்சி புத்தக நிலையத்தை இணையம் வழியே கேள்விப்பட்டு சென்று பார்த்தேன், ஒரு புத்தகத்தின் பின்னட்டையை பார்த்தபொழுது மிக வாஞ்சையான சிரிப்புடன் பின்னே விளக்கொளியில் ஒரு கரிய மனிதர் சிரித்து கொண்டு இருந்தார் . அட! இந்த மனுஷன் சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்கே!, என்று கையில் வைத்து சில கணம் பார்த்து கொண்டு இருந்தேன், அதற்க்கு கீழே நான் மதிக்கும் இரு முக்கிய ஆளுமைகள் இதனால்தாண்டா தினேஷ், அவ்வளவு அழகு அந்த சிரிப்புக்கு என்று சொல்வது மாதிரி அவரை பற்றி சில வரிகள் எழுதி இருந்தார்கள் . ஆம் பவா,
அந்த தூய்மையுடன் தான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். வாசிப்பதற்கும் ஒரு கணம் தேவைபடுகிறது நேற்று தான் , எல்லா நாளும் கார்த்திகை புத்தகத்தை படிக்க தொடங்கினேன் ,
எழுதணும் என்கிற கமிட்மென்ட் உடன் எழுத பிடிக்கவில்லை...
,நான் நண்பர்கள் அற்றவன்,என் மனதுக்கு நெருக்கமான ஒரு நண்பன் உண்டு அவன் திருவண்ணாமலை யில் இருக்கிறேன் அவன் பெயர் பவா செல்லத்துரை ...
பால் சக்கரியாவின் அற்புதமான இரு சிறுகதைகள் ...
குழந்தைகள் போல ஜெயகாந்தனும் கந்தர்வனும் பவாவிடம் ஆளுகொரு கை தோசை வாங்கி சாப்பிட்டது ..
எஸ்.ராவின் நகர் நீங்கிய காலம் சிறுகதையில் எலியை ஒரு படிமமாக பகிர்ந்த விதம் .., அதன் மூலம் லெனின் அவர்களை குறிப்பிட்டு சொல்வது...
கோணங்கி உடனான காட்டு பன்னி வேட்டை தொடர்பான அனுபவத்தை பகிரும்போது ...
உத்ராவுக்கும் சு.ராவிற்குமான மௌனமான சந்திப்பு ..,
கிரீஷ் -- உலகெங்கும் நடந்து திரிந்த அந்த கால்களை கூர்ந்து பார்க்கும் போதெல்லாம் ...,
ஐம்பது குழந்தைகளுக்கு கேமரா கற்று கொடுக்க முடியுமா சார் , அத விட என்ன புடுங்கிற வேல ....
என் மதிப்பிற்குரிய வண்ணநிலவனின் கம்பா நதியில் கோமதிக்கும் பாப்பையாவுக்குமான உரையாடலை பவா மூலம் ஒரு தடவை அழகிய கதை சொல்லலாக கேட்டது,
வண்ண நிலவன் சார், எங்க வீட்டுக்கு எப்ப வருவீங்க! என் நினைவுகளை மிச்சமில்லாமல் கொட்ட வேண்டும்...
எஸ்.ராமகிருஷ்ணன் - கோணங்கி அவர்களுக்குமான உரையாடலில் ஒரு மாதம் ஆனாலும் அங்கியே கிடக்க்கலாம்னே ...
highly elevated, எவ்வளவு சிலிர்ப்பான தருணங்கள் , உன்னதமான நெகிழ்ச்சி ஊட்டும் அனுபவங்கள்,
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் தேவராஜ் ஹென்றியை பார்த்து அவரிடம் சொல்லும் ஒரு நிகழ்வு ஞாபகம் வருகிறது , "நீங்க வந்தப்புறம் தாங்க இந்த சின்ன ஊருக்குள ஒவ்வொருத்தனும் எவ்வளவு பெரிய மனுஷன் என்று தெரிகிறது . பார்க்கிற விதத்தில தான் இருக்கு "
இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் மீடியா பிரபல்யம் மற்றும் பிரபல்யம் ஆகாத அத்துணை பேருக்கும் என் பிரியமான நன்றிகள்,உங்கள் அனைவரின் மூலமாக ஹென்றியை கண்டு கொண்டதற்கு ..
ஒளியை பற்றி சில பண்புகளை கேள்வி பட்டது உண்டு . எல்லா திசைகளிலும் ஒரே வேகத்துடன் பயணிக்கும் என்று . இந்த மனிதனின் பெரும் அன்பும் ஒளியை போல

No comments:
Post a Comment