Saturday, June 25, 2016

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை - குறும்படம்

இரண்டாண்டுகளுக்கு முன் என் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை சிறுகதையின் திரைக்கதையை மைக்கேல் அருண் எழுதி அனுப்பிய போது வியப்பு மேலிட்டது.

அவரே அதை இயக்க விரும்புவதாக சொன்னபோது மகிழ்ச்சியும் கூடியது.
என் நண்பனும் ஒளிப்பதிவாளனுமான பினு தன்ரெட்கேமராவோடும் மனுஷ் என்ற தன் ஆத்மார்த்த உதவியாளனோடும் அப்பணியைத் துவக்கினார்.

ஸ்நேகிதி ஆத்மி, தோழன் காளிதாஸ், அமலதாஸ், முருகன், ஷபி, கிருஷ்ணமூர்த்தி, வம்சி, மானசி என்றக் குழு அப்படப் பிடிப்பை தங்கள் அபார பங்களிப்பினால் நகர்த்தினார்கள்.

ஷபியின் முயற்சி மட்டுமே இப்படம் முழுமையடைய காரணமாக முடிந்தது.

நண்பன் அருள் குரோலியின் (பிசாசு, பசங்க 2) பாந்தமானதொரு இசை கதைக்கு அத்தனைப் பொருத்தமாக அமைந்தது. எடிட்டர் வரதராஜ் இங்கிருந்தே அதை எடிட் செய்து முடித்தார்.

பல்வேறு சிரமங்களுக்கிடையேடெண்ட் கொட்டாய்இப்படத்தை தயாரித்து முடித்தது.

இம்மகிழ்வானத் தருணத்தில் இப்படத்தை என் வாசகர்ளுக்கும் பார்வையாளர்களுக்கும் சமர்பிக்கிறோம்.


இதில் பணியாற்றி அத்தனை தோழர்களுக்கும் என் எளிமையான அன்பு.




No comments:

Post a Comment