ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே வீட்டிற்கு வந்து விட்ட அதன் இயக்குநர். குறிஞ்சி வேந்தனுக்கு என்னை எழுப்ப மனமின்றி, வம்சியை எழுப்பி பேச ஆரம்பித்துவிட்டிருக்கிறார்.
பிரகாஷ், வம்சி என அவர் மனநிலைக்கு ஏற்ற மனிதர்களிடம் அவர் காலை சாப்பாடு சாப்பிடாமல் கூட அப்பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அன்று காலையிலேயே என்னை சந்திக்க வந்திருந்த ஓவியர்கள் துரை, எழிலன், அவருடைய தாய்மாமாவும் (அவரும் ஓவியர்தான்) அவர்கள் உரையாடலுடன் சங்கமித்தார்கள்.
பாதி தூக்கமும், பாதி நடையுமாய் நான் மாலை நடைபெற உள்ள டெண்ட்கொட்டாய் நிகழ்விற்கு நண்பர்களை அழைத்துக் கொண்டிருந்தேன்.
நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேல் இரு மடங்கு பார்வையாளர்கள் எங்கள் மொட்டைமாடியை ஆக்ரமித்து தரையில் உட்கார்ந்திருந்தாகள்.
ஒரு சிறு அறிமுகத்துடன் படம் திரையிடப்பட்டது. படம் முடிந்து எப்படி ஒரு வார்த்தையும் என்னால் பேச முடியவில்லையோ அப்படியே இப்போதும் ஒரு வார்த்தையும் அதைப்பற்றி எழுதப் போவதில்லை.
ஆனால் திரையிடல் முடிந்து குறிஞ்சி வேந்தன் இங்கிலாந்து, அமெரிக்க, பிரான்ஸ் என பல நாடுகளிலும் தமிழ் நாட்டில் சென்னை, மதுரை இரு நகரங்களிளும், இப்போது திருவண்ணாமலையிலும் இப்படம் திரையிடப்படுகிறது. இந்நிகழ்வு எனக்குக் கொடுத்த மன நிலையை வேறெந்த நிகழ்விலும் நான் அடையவில்லை. என வார்த்தை தடுமாறினார். நான் பேச்சற்று போய் தாங்க முடியாத துக்கத்திலிருந்தேன். நிகழ்ச்சி முடிந்து அடுத்த ஒரு மணி நேரமாகியும் யாரும் அங்கிருந்து போகாமல் திக்பிரமைப் பிடித்து
அங்கேயே நின்றுகொண்டும், அவரோடு சொல்ல முடியாத செய்திகள் இன்னும் இருக்கிறதா? என கேட்டு கொண்டிருந்தார்கள்.
இத்தனை லட்சம் மனிதப்படுகொலைகளுக்கு உலகம் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
No comments:
Post a Comment