Saturday, June 5, 2010

புதிய பார்வையில்....

புதிய பார்வைக்காக 'இலக்கிய காதலர்கள்' என்ற பொதுத் தலைப்பில் என்னிடமும் ஷைலஜாவிடமும் எங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா என கேட்டார்கள்.
நீண்ட தயக்கத்திற்குபிறகே சம்மதித்தோம். ஆனால் பேச ஆரம்பித்த போது மிகுந்த மனத்தடைகள் ஏற்பட்டது. மீடியாவுக்காக கான்ஷியசாக இருக்க முடியவில்லை.
புத்தகம் வந்ததும் படித்தால் அந்த கார்காலத்தின் எந்த ஈரமும் இக்கட்டுரையில் பதிவாகவில்லை.
நிகழ்காலத்தில் உட்கார்ந்து பழையவைகளை மீட்டுக் கொண்டு வருவது எவ்வளவு சிரமமானது என்பது புரிந்தது.
இக்கட்டுரைக்கான புகைப்படங்கள் எம்.ஆர். விவேகானந்தன், பினு பாஸ்கர், காஞ்சனை சீனிவாசன் ஆகிய மூன்று முக்கிய புகைப்பட கலைஞர்களால் மூன்று வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்டவைகள்.






6 comments:

  1. உங்கள் இருவரிடமும் கேட்க நினைத்து கேட்காமல் போன விஷயங்கள் இவை. இலக்கியக்காதல் என்ற சொல்லின் அர்த்தம் உங்கள் இருவரைப் பார்த்தபின்பே ”இதுபோலல்லாம் நடக்குது போல” என்று தோன்றியது அதற்கு முன் எழுத்தில்தான் படித்திருக்கிறேன். கண்டிப்பாக இந்த மூன்று பக்கங்களில் அடக்க முடியாததுதான் என்றாகிலும் நீங்கள் இருவரும் இணைந்து உங்கள் காதலை புத்தகமாக எழுதலாம். படிக்க நாங்கள் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. பவா இது உங்க காதல் கதை மாதிரி தெரியலை. கல்யாணக் கதை மாதிரி இருக்கு. உங்க நேசம் இங்க முடியற விஷயம் இல்லை. நேரில் பேசுவோம். நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயம் உள்ளவர் நீங்களும் உங்கள் காதலும். :)
    காத்திருக்கிறோம். விரைவில் சந்திப்போம்.

    ReplyDelete
  3. ஆமாம், எந்த ஈரமும் இக்கட்டுரையில் பதிவாகவில்லை. மாறி மாறி வரும் POV-தான் காரணம் என்று எண்ணூகிறேன். இந்த அளவுக்கு நயமற்ற காதலைக் கேள்விப்பட்டது கூட இல்லை. நீங்களே எழுதிக் கொடுத்து இருக்கலாம்.

    ReplyDelete
  4. உங்களுக்கான வாழ்க்கையை இனிமையாகவும்.அற்புதமாகவும், பொருள் பொதிந்த வகையிலும் உருவாக்கிக் கொண்டுள்ளீர்கள், இருவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

    ReplyDelete