Monday, December 31, 2012

தினேஷ் நல்லசிவமிடம் இருந்துஅன்பிற்குரிய பவா  அவர்களுக்கு,
                                                   
 என் பெயர்  தினேஷ் நல்லசிவம், தற்போது பெங்களூரில் பணி  செய்து வருகிறேன்.ஆறு மாதத்திற்கு முன்பு  திருவண்ணாமலை வந்தபோது வம்சி புத்தக நிலையத்தை இணையம் வழியே  கேள்விப்பட்டு சென்று பார்த்தேன், ஒரு புத்தகத்தின் பின்னட்டையை பார்த்தபொழுது மிக வாஞ்சையான  சிரிப்புடன்   பின்னே விளக்கொளியில் ஒரு கரிய மனிதர் சிரித்து  கொண்டு இருந்தார் . அட! இந்த மனுஷன் சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்கே!,    என்று  கையில் வைத்து சில கணம் பார்த்து கொண்டு இருந்தேன்,  அதற்க்கு கீழே நான் மதிக்கும் இரு  முக்கிய ஆளுமைகள்  இதனால்தாண்டா தினேஷ்,  அவ்வளவு அழகு அந்த சிரிப்புக்கு என்று  சொல்வது மாதிரி அவரை பற்றி சில வரிகள் எழுதி  இருந்தார்கள் .  ஆம் பவா, 
அந்த  தூய்மையுடன் தான்  நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள்.   வாசிப்பதற்கும் ஒரு கணம்  தேவைபடுகிறது நேற்று தான் , எல்லா நாளும் கார்த்திகை  புத்தகத்தை  படிக்க தொடங்கினேன் , 

எழுதணும் என்கிற கமிட்மென்ட் உடன் எழுத பிடிக்கவில்லை...
,நான் நண்பர்கள் அற்றவன்,என் மனதுக்கு நெருக்கமான ஒரு நண்பன் உண்டு அவன்  திருவண்ணாமலை யில் இருக்கிறேன் அவன் பெயர் பவா செல்லத்துரை ...
பால் சக்கரியாவின் அற்புதமான இரு சிறுகதைகள் ...
குழந்தைகள் போல ஜெயகாந்தனும் கந்தர்வனும் பவாவிடம் ஆளுகொரு கை தோசை வாங்கி சாப்பிட்டது ..
எஸ்.ராவின் நகர்  நீங்கிய காலம் சிறுகதையில் எலியை ஒரு படிமமாக பகிர்ந்த விதம் .., அதன் மூலம் லெனின் அவர்களை குறிப்பிட்டு சொல்வது...
கோணங்கி உடனான காட்டு பன்னி   வேட்டை  தொடர்பான அனுபவத்தை பகிரும்போது ...
உத்ராவுக்கும் சு.ராவிற்குமான மௌனமான சந்திப்பு ..,
கிரீஷ் --  உலகெங்கும் நடந்து திரிந்த அந்த கால்களை கூர்ந்து பார்க்கும் போதெல்லாம் ...,
ஐம்பது குழந்தைகளுக்கு கேமரா கற்று கொடுக்க முடியுமா சார் , அத விட என்ன புடுங்கிற வேல ....
என் மதிப்பிற்குரிய வண்ணநிலவனின் கம்பா நதியில் கோமதிக்கும் பாப்பையாவுக்குமான  உரையாடலை பவா மூலம் ஒரு தடவை  அழகிய கதை சொல்லலாக கேட்டது,
வண்ண நிலவன் சார், எங்க வீட்டுக்கு எப்ப வருவீங்க! என் நினைவுகளை மிச்சமில்லாமல் கொட்ட வேண்டும்...
எஸ்.ராமகிருஷ்ணன் - கோணங்கி அவர்களுக்குமான உரையாடலில் ஒரு மாதம் ஆனாலும் அங்கியே கிடக்க்கலாம்னே ...

highly elevated, எவ்வளவு சிலிர்ப்பான தருணங்கள் , உன்னதமான நெகிழ்ச்சி ஊட்டும் அனுபவங்கள்,

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் தேவராஜ் ஹென்றியை பார்த்து அவரிடம் சொல்லும் ஒரு நிகழ்வு ஞாபகம் வருகிறது , "நீங்க வந்தப்புறம் தாங்க இந்த சின்ன ஊருக்குள ஒவ்வொருத்தனும் எவ்வளவு பெரிய மனுஷன் என்று தெரிகிறது . பார்க்கிற விதத்தில தான் இருக்கு "
இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும்  மீடியா பிரபல்யம்  மற்றும் பிரபல்யம் ஆகாத அத்துணை பேருக்கும் என் பிரியமான நன்றிகள்,உங்கள் அனைவரின் மூலமாக ஹென்றியை கண்டு கொண்டதற்கு ..
ஒளியை பற்றி சில பண்புகளை கேள்வி பட்டது உண்டு . எல்லா   திசைகளிலும்  ஒரே  வேகத்துடன் பயணிக்கும் என்று . இந்த மனிதனின் பெரும் அன்பும்  ஒளியை போல 

Saturday, December 29, 2012

சூர்ய கதிர் நேர்கானல்


சூர்ய கதிர் நேர்கானல்

சூர்யக்கதிர் என்ற பத்திரிகையின் துணையாசிரியர் என்றும், என் எழுத்தின் தீவிரவாசகன் என்றும் அறிமுக படுத்திக் கொண்டு என்னிடம் ஒரு நேர்காணல் வேண்டுமென்று சுப்ரமணி கேட்டார்.
 எப்போது வருகிறீர்கள்? என கேட்டபோது, தொலைபேசியிலேயே என்று பதில்வந்தது. நீண்ட தயக்கத்திற்கு பிறகு ஒரு  நிபந்தனையோடு ஏற்றுக்கொண்டேன்.
  நேர்காணலை type செய்து எனக்கு mail செய்யவேண்டும். நான் சரிபார்த்த பிறகே  பிரசுரிக்க வேண்டும்.
 ஆனால் எல்லா  பத்திரிகையாளர்களும் போலவே எனக்கு அனுப்பாமலேயே அது பிரசுரமானது. இதற்கு எப்படி இப்படி ஒரு தலைப்பு வைக்கமுடிந்தது என தெரியவில்லை. உள்ளே பல தவறுகள். சொன்னது, சொல்லாதது என்று வருத்தத்தோடு இதை உங்களோடு பகிர்ந் கொள்கிறேன்.Friday, December 28, 2012

எஸ். ராமகிருஷ்ணன்

2012ம் ஆண்டில் எனக்குப் பிடித்தவை - எஸ். ராமகிருஷ்ணன்.

1. சிறந்த தமிழ் நாவல் – பூமணியின் அஞ்ஞாடி. கலங்கிய நதி பி.ஏ.கிருஷ்ணன். 

2. சிறந்த புத்தகம் – ரமாவும் உமாவும் தீலிப்குமார் -சந்தியா பதிப்பகம் சென்னை 

3. சிறந்த சிறுகதையாசிரியர் – அழகிய பெரியவன், லட்சுமி சரவணகுமார். எஸ்.செந்தில்குமார், சந்திரா. 

4. சிறந்த சிறுகதை -சூனியக்காரியின் தங்கச்சி- அ.முத்துலிங்கம் 

5. சிறந்த கட்டுரை ஆசிரியர்- எஸ்.வி.ராஜதுரை / சரமாகோ படைப்புகள் குறித்த கட்டுரைகள், அ.முத்துகிருஷ்ணன் கூடங்குளம் தொடர்பான கட்டுரைகள். அபிலாஷ் கிரிக்கெட் பற்றிய கட்டுரைகள் 

6. சிறந்த பயணக்கட்டுரை – ஜெயமோகனின் அருகர்களின் பாதை 

7. சிறந்த மொழிபெயர்ப்பு புத்தகம் -கா – நாவல் ராபர்ட்டோ கலாசோ தமிழில் ஆனந்த், ரவி. அசடன்- ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, தமிழில்: எம்.ஏ. சுசீலா, ஒற்றைக்கதவு- சந்தோஷ் எச்சிக்கானம் கே.வி.ஜெயஸ்ரீ. அயல் மகரந்தச் சேர்க்கை- தமிழில்: ஜி. குப்புசாமி, 

8. சிறந்த கதைசொல்லி - பவா செல்லதுரை 

9. சிறந்த பத்தி எழுத்து -இறையன்பு எழுதும் போர்தொழில் பழகு புதியதலைமுறை. மனுஷ்யபுத்திரன் குங்குமத்தில் எழுதி வரும் நிழல்கள் நடந்த பாதைகள் 

10. சிறந்த கவிஞர் -சங்கர ராம சுப்ரமணியன் 

11. சிறந்த பெண் கவிஞர் - அனார். பஹுமாஜஹான். கார்த்திகா 

12. சிறந்த ஆய்வு புத்தகம் - சுந்தரவந்தியத்தேவன்–பிறமலை கள்ளர் வாழ்வும்வரலாறும் 


13. சிறந்த புத்தகம் – Lenin’s Kisses – Lianke Yan, The Notebook -José Saramago 


14. சிறந்த சிறுபத்திரிக்கை -வலசை. கொம்பு 


15. சிறந்த நேர்காணல் – கவிஞர் கடற்கரை எழுத்தாளர் மா அரங்கநாதனுடன் நடத்திய நேர்காணல் 

16. சிறந்த இலக்கிய நிகழ்வு – ஞானி நடத்தும் கேணி கூட்டங்கள், 


17. சிறந்த இணைய இதழ்- சொல்வனம். காம் 


18. சிறந்த இணைய தளம்- மலைகள்.காம் http://malaigal.wordpress.com/காந்தி -இன்று http://www.gandhitoday.in/

Dialogue உரையாடல் மையம் திறப்பு


Dialogue உரையாடல் மையம் திறப்பு

    
    எங்கள் பல வருட கனவு கிருஸ்துமஸ் அன்று நிறைவேறியது. தொடர்ந்து சந்திக்கவும், உரையாடவும், திரையிடவுமான ஒரு அரங்கு, வம்சி புக்ஸ் மாடியில், கடந்த 25-ல் எழுத்தாளர் கல்பட்டா நாரயணனால் திறந்து வைக்கப்பட்டது. எழுத்தாளர் ஜெயமோகன் காந்தி பற்றிய தன் உரையாடலால் முதல் விவாதத்தைத் துவங்கி வைத்தார்.
எல்லா தரப்பிலிருந்தும் எழுபது எண்பது பேர் வந்திருந்தார்கள். சரியாக ஐம்பது  இருக்கைகளே இருந்ததால் சிலர் கீழே நின்று உரையைக் கேட்டார்கள். சங்கடமாயிருந்தாலும் சந்தோஷமாயிருந்தது. ஓவியர் சீனுவாசன் எங்களுக்கு ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐந்து ஓவியங்களை பரிசளித்திருந்தார். அவைகள் கூட்ட அரங்கை வேறொன்றாய் மாற்றிக் காட்டியது.


நான் எப்போதும் அடங்காத பிடிவாதமுள்ள குழந்தையைப்போல நண்பர் கருணாவிடம் அடம்பிடிப்பேன். அவரும் அதைஒரு புன்னகையுடன் அங்கீகரிப்பார். அப்படித்தான் இதையும் அடம்பிடித்து சாதித்தேன்.
   

 அடுத்த நிகழ்வுக்கு தயாரகிறது Dialogue. இடையே வேறு யாரேனும் நிகழ்சிகள் நடத்த விரும்பினாலும் இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

ஷைலஜா - 9444867023,  கார்த்தி - 9443542842, முருகன் - 9952405818

Saturday, December 22, 2012

Dialogueதிருவண்ணாமலையில் சமூக, கலை, இலக்கிய பண்பாட்டு  மையமாக  Dialogue   அமைப்பின் அலுவலகம் ஒன்றை நடத்த திட்டமிட்டு பல நாட்கள் ஆனது. ஏதேதோ  காரணங்களினால் துவங்க முடியாத அந்த அமைப்பு வரும் டிசம்பர் 25 முதல் துவங்குகிறது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைக்கிறேன். எல்லோருமாய் சேர்ந்து இந்த அரங்கில் கூடி விவாதிப்போம்.


Wednesday, December 19, 2012

மதுபானக் கடை திரைப்படத்தின் இயக்குனர் கமலக் கண்ணன்:


பவா செல்லதுரையின் வேட்டை சிறுகதையில் வரும் ஜப்பான் கிழவன் எனக்கு அகிரா குரோசவாவின் Dersu Uzalaவை ஞாபகப்படுத்துகிறான். 

விழித்துப்பார்க்கும் போது முகத்தில் அடிக்கும் சுவற்றை, ஜப்பான் கிழவனின் கண்களின் வழியே பார்த்து, Dersu Uzala சொல்கிறான், "Capiton, how do you live in this boxes?..."

http://www.facebook.com/sukameekannan?ref=ts&fref=ts

Saturday, December 1, 2012

கேரளாவில் என் மொழிபெயர்ப்புப் புத்தக வெளியீட்டு விழாஎன்னுடைய  ”நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” புத்தகம் மலையாளத்தில் திரு.ஸ்டான்லி அவர்களால் ”நட்சத்திரங்கள் ஒளிக்குந்ந   கற்ப பாத்ரம்” என்று மொழிப்பெயர்க்கப்பட்டு கோழிக்கோடு ராஸ்பெர்ரி பப்ளிக்கேஷனால் பதிப்பித்து வெளியிடப்பட்டது.  கோழிக்கோட்டில் ஹோட்டல் அழகாபுரியில் மிக நேர்த்தியாக வெளியீட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள்.

விழாவைத் தொடர்ந்து மொழிபெயர்ப்பு குறித்த கருத்தரங்கில் பேரா. வேணுகோபாலப் பணிக்கர் தன்னுடைய மொழிபெயர்ப்பு அனுபவங்கள் குறித்தும், மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் கட்டுரை வாசித்தார். மலையாள சாகித்யம் தமிழில் என்ற தலைப்பில் ஷைலஜா கட்டுரை வாசித்தார்.

மொழிபெயர்ப்பாளர்கள் ரகுராம் மற்றும் ஸ்டான்லியின் வாழ்த்துரையைத் தொடர்ந்து என்னுடைய ஏற்புரையுடன் விழா நிறைவுற்றது.
         
இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் மிகவும் நேசிக்கும் மலையாள மண்ணில் நடந்த விழாவும் ராஸ்பெர்ரி பதிப்பக நண்பர்கள் ஷாநவாஸ், மெஹ்ஜூப், ராஜேஷ் ஆகியோரின் ப்ரியமும் என்னை நெகிழ வைத்தது.


மொழிபெயர்ப்பாளர்கள் ரகுராம்,ஸ்டான்லி,பவாசெல்லதுரை,எழுத்தாளர் இந்து மேனோன்,பேரா.ஷெரீஃப் மற்றும் ஷைலஜா.


எழுத்தாளர் இந்து மேனோன் புத்தகத்தை வெளியிட பேரா.வேணுகோபாலப் பணிக்கர் பெற்றுக் கொள்கிறார்.