Wednesday, March 19, 2014

எனக்குப் பிடித்தமான ஒரு கதை நமக்கு வசிக்க முந்திரித்தோப்புகள்

மலையாள மூலம் : பால்சக்கரியா
                      தமிழில் : கே.வி.ஜெயஸ்ரீ


üüராதாகிருஷ்ணா, கொஞ்சம் அவசரமா என் ஆபீஸ்க்கு  வந்திட்டுப் போறியா? ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்ýý
 சந்தீபனின்  குரல் தொலைபேசியிலும் லேசாக நடுங்கியது.
  டெல்லியில் அவன் பிரபலமானவன் மட்டுமல்ல, அதிகாரம் நிறைந்தவன். அவனைத் தெரியாதவர்கள்  இங்கு யாருமில்லை. ஆனால் எப்போதும் எதற்கும் அவனுக்கு நான் வேண்டும். அதை உள்ளூர நான் விரும்பவும் செய்தேன்.
üüஎன்ன விஷயம் அவ்வளவு அவசரம்?ýý
üüபோன்ல சொல்ல முடியாதுடா, நேர்ல வாýý குரலில் தெறித்த பதட்டம் உணர்ந்தேன். 
அலுவலக நேரத்திற்குச் சற்று முன்னமே அங்கிருந்து வெளியேறி கன்னாட்பிளேசில் இருக்கும் அவன் அலுவலகம் சென்றேன்.
அவனுடைய ரிசப்ஷனிஸ்ட், ப்யூன், செக்ரட்டரி  என்று எல்லோருக்கும் என்னையும், எங்கள் நட்பையும் தெரியும். அதனால் மற்றவர்களைப் போல வரவேற்பறையில் காத்திருக்கத் தேவையில்லை. அவனுக்காக நெடுநேரம் காத்திருக்கும் பல பெரிய மனிதர்களிடையே நுழைந்து நான் மட்டும் கம்பீரமாக நடந்து போனேன்.
மல்லப்பள்ளி செயின்ட் மரியாள் பள்ளியில் நாங்களிருவரும் ஒன்னாம் வகுப்பிலிருந்து ஒரே பெஞ்ச்சில் உட்கார்ந்து படித்து வந்தவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. வாழ்வின் சுழற்சியில் அவன் இத்தனை பெரிய மனிதனாகவும் நான் அலுவலக குமாஸ்தாவாகவும் ஆக முடிந்தது.
சந்தீபனின்  அலுவலக அறை ஒரு கால்பந்தாட்ட மைதானம் போல் விரிந்திருந்தது.  தரையில் விரிக்கப்பட்ட  கம்பளம் கால்களின் நடையை இதமாக்கியது. அப்படியும் அவன் இருக்கையை அடைய நேரம் எடுத்தது.
üஇதெல்லாம்தானேடா நம் டெக்னிக்ஸ். ஷோ காமிக்காம இங்க ஒன்னுமில்லý என்பான் எப்போதும்.
üஇனி பத்து நிமிஷத்துக்கு போனை கனெக்ட் பண்ணாதேவிசிட்டர்ஸ் இருந்தா வெயிட் பண்ணச் சொல்லுý என்று தன் செகரட்டரிக்கு இன்டர்காமில் ஆணையிட்டான்.
மெல்ல என் பக்கம் திரும்பி,
üராதாகிருஷ்ணா, மாதுரிக்கு முறை தவறிப் போயிடிச்சிடா, எனக்கு எல்லாமே ரொம்ப குழப்பமா இருக்குý என வார்த்தைகளில் தடுமாறினான்.
மாதுரி அவன் காதலிகளில் ஒருத்தியெனத் தெரியும்.
üஎன்ன முறை தவறிடுச்சி?ý உண்மையிலேயே புரியாமல்தான் கேட்டேன்.
üடேய், தரித்திரமே, மாதமுறைடா, அவ கர்ப்பமாயிட்டாý
ü...ஙுý
üஎன்னடா இப்படி இதை சாதாரணமா எடுத்துக்கறý  
üகர்ப்பமானா ஆகட்டும், அதுல என்ன பிரச்னை, இதுல இதுக்கு மேல எனக்கு எதுவும் தெரியல.ý
சந்தீபனுக்குக் கோபம் வந்தது.
 üடே, உன்னைப் பொறந்தப்பவே கொன்னிருக்கனுன்டாஅவளுக்கும் எனக்கும் காதல்தான்டா இருக்கு, அவ எப்படி கர்ப்பமாக முடியும், குழந்தை பெத்துக்க முடியும்? உனக்கும் லௌகீக வாழ்க்கைக்கும் ஏதாவது தொடர்பிருக்காடா? இதுவரையிலும் ஏதாவது பெண்ணைத் தொட்டிருக்கியா?ý
üதொட்டிருக்கேன். என் அம்மாவý
üý என்று முகம் வியந்து அவன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
üஇப்ப உடனே மாதுரிக்கு அபார்ஷன் பண்ணணும், அதை நான் ஏற்பாடு பண்ணிட்டேன். கரோல்பாகில் உள்ள ஒரு லேடி டாக்டரோட ரெசிடென்சில வச்சு. என்னால அங்க தனியாப் போக முடியாது. நீ எங்ககூட வரணும். இவ்வளவும் அரேஞ்ச் பண்ணாலும் மாதுரி அழுதுகிட்டேதான் இருக்கா! அவளுக்கு இந்தக் கொழந்த வேணுங்கிறாý
üநீ அவள காதலிக்கும்போதே இதெல்லாம் யோசிச்சிருக்கணும். பின்ன அவளுக்கு அவ குழந்தை மேல ஆசையிருக்காதா?ý
அவன் பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை எதிரிலிருந்த ஆஷ்ட்ரேயில் ஒரு புழுவைப்போல அழுத்தித் திருகினான்.
üராதாகிருஷ்ணா,நான் இன்னும் ரெண்டு மூனு பேரைப் பாக்க வேண்டியிருக்கு. நீ ஒரு சுத்து சுத்திட்டு வா, நான் அதுக்குள்ள ரெடியாயிடுறேன். லேட்டா வந்து என்னை ஏமாத்திடாதý
üஓ.கேý  
நான் அருகிலிருந்த சென்ட்ரல் பார்க்கிற்கு நடந்து சென்று அங்கிருந்த ஒரு பெருமரத்தடியில் சாய்ந்துகொண்டு, போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருந்த மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அந்த பார்க்கில் அணில்கள் விளையாடிக்  கொண்டிருந்ததையும், காக்கைகள் கூட்டில் அடைவதையும்  கவனித்தேன். ஆகாயத்தில் பெயர் தெரியாத பறவைக் கூட்டங்கள் கடப்பதைப் பார்த்துச் சில்லிட்டேன்.
பரந்திருந்த அப்புல்வெளியில் அப்படியே மல்லாந்து படுத்து ஆகாயத்தையும் நிலவையும் பார்த்தேன். நிலவின் தூசிப் படலத்தினூடே உதித்துயரும் பூமியைப் பார்த்தபடியே நடக்க வேண்டுமென ஒரு நிமிடம் தோன்றியது. அதை அப்படியே நிறுத்தி மணி பார்த்தபோது அது இரவு எட்டைக் கடந்திருந்தது.
என்னைக் காணாத பதைப்பில் சந்தீபன் அவன் காருக்கருகில் நின்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருக்கையில்
üஎன்னடா, நான் வராமப் போயிடுவேன்னு பயந்திட்டியா?ý  எனக் கேட்டுக் கொண்டே அவனைச் சமீபித்தேன்.
அரண்மனை போன்ற அந்தப் புதுரகக் காரைப் பார்த்து வியந்து, üஇது என்ன காரு? புதுசா இருக்கேý என விசாரித்தேன்.
üடேய், காரப் பத்திக் கேக்க இதுவாடா நேரம், மாதுரி டாக்டர்  வீட்ல ரொம்ப நேரமா நமக்காகக் காத்திருக்கா. என் மனப் பதட்டம் உனக்குப் புரியலையாடா, நாம பின்பக்கமா நுழைஞ்சு டாக்டர் வீட்டுக்குள்ள போயிடலாம்ý
üடேய், அபார்ஷன் பண்ணப் போறது உனக்கா? அவளுக்கா? அப்புறம் ஏண்டா இப்படி பதைக்கற? பணச்செலவு பயமுறுத்துதா?ý
üபணம் என்னடா பணம். அது எவ்வளவானாலும் பரவாயில்லை. ஆனா உள்ளுக்குள்ள ஏற்படற பயமும்,நடுக்கமும் என்னால முடியலடா ராதாகிருஷ்ணாý
நான் அமைதியாயிருந்தேன்.
டாக்டர் வீட்டுக்கு ரொம்பத் தள்ளியே காரை நிறுத்திவிட்டு இருளை ஒட்டி நடந்தோம். அப்படியும் நான்கைந்து பேர் சந்தீபனைத் திரும்பிப் பார்த்தபடியே போனார்கள்.
üஇவங்களெல்லாம் எதுக்குடா இப்படிப்  பாக்குறாங்க?ý
üநீ பிரபலமாவதற்கு முன்ன இதையெல்லாம் யோசிச்சிருக்கணும்ý
எங்களைப் பின்வாசல் வழியே ஒருவன் டாக்டர் வீட்டிற்குள் அழைத்துப் போனான். அந்த அறைக்குள் நுழைந்ததும் இருவருமே திடுக்கிட்டோம்.அந்த லேடி டாக்டரோடு அவள் கணவன், குழந்தைகள் மட்டுமின்றி அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து பத்துக்கும் மேற்பட்டவர்கள் சந்தீபனை வரவேற்றார்கள். அந்தப் பரபரப்பினூடே ஒரு குழந்தை முன்னால் வந்து சந்தீபனிடம் ஒரு ரோஜாப்பூவை நீட்டினாள்.
அவன் முகம் பயத்தால் வெளிறியிருந்தது. ஆனாலும் அதை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு கையில் ரோஜாப்பூவுடன் நின்றிருந்தது, பார்க்கப் பரிதாபமாயிருந்தது. சூழலறியாமல் இன்னொரு குழந்தை கையில் ஆட்டோகிராப் நோட்டுடன் அவனை நெருங்கியது. மற்ற எல்லோரும் அவனிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தனர்.
உள் கதவைத் திறந்தபடி ஒரு நர்ஸ், அந்த லேடி டாக்டரை அழைத்தாள். டாக்டர் அவளிடம் காதைக் கொடுத்தபடி,
üஓ.கே. நாம இனி நேரத்த வீணாக்க வேணாம். ப்ளீஸ் எக்ஸ்கியூஸ் அஸ்ý என அவளின் அழகான ஆங்கில உச்சரிப்புக்கு மற்றவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.
üடோன்ட் ஒர்ரி, அபார்ஷன்றது இப்பல்லாம் ரொம்ப சகஜம்ý என சந்தீபனின் முதுகில் ஆதரவாகத் தட்டினார்.
பிறகு நாங்கள் மூவரும் அவ்வறைக்குள் நுழைந்தோம். அக்குளிர்ந்த அறையில் நீண்ட மேஜையின்மேல், ஓரிரண்டு ஸ்பாட் லைட் வெளிச்சத்திற்குக் கீழ் மாதுரி அங்கியுடன் படுத்திருந்தாள். ஒரு தொலைக்காட்சித் தொடரின்  படப்பிடிப்பு போல் அக்காட்சிப் படிமம் என்னுள் உறைந்தது.
 எங்களைப் பார்த்ததும் அவள் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள். அதில் அதிர்வுற்ற சந்தீபன் அக்கதவருகில்  அசையாமல் நின்றான். 
üபோங்க, போங்க, பக்கத்தில போங்க. ஒரு பிரச்னையும் இல்லý டாக்டர் சொன்னார்.
ஆப்ரேஷன் டேபிளின் மீதிருந்த மரியாதை நிமித்தம் சந்தீபன் தயங்குவதாக நினைத்த அந்த லேடி டாக்டர்,
üஒண்ணுமில்ல சந்தீபன், ஷி ஈஸ் எமோஷனல், தட்ஸ் ஆல். பக்கத்துல போங்கý என அவனைத் துரிதப்படுத்தினார்.
அவன் நடுங்கும் கையால் என் தோள்களைப் பற்றினான். மாதுரியால் என்னையும் அவனையும் சரியாய்ப் பார்க்க முடியாமல் தேம்பியபடி,
üசந்தீபா சந்தீபாý எனப் பிதற்றினாள்.
சூழலின் கணம் தாள முடியாவிட்டாலும்கூட நான், üகிட்டப் போயி ஆறுதலா ஏதாவது பேசுடாý என எனக்கே இரகசியமான குரலில் சொன்னேன்.
üகூட யாரு, ராதாவா?ý என என்னை அடையாளம் கண்டு நகர நாகரிகத்தின்படி பெயர் சுருக்கிக் கேட்டாள்.
என்மீது ஏதோ அடி விழுந்த வலியில், üஆமாம்ý என்றேன். அருகில் நின்ற சந்தீபனை முன்னுக்குத் தள்ளிவிட்டேன். அவன் அணிவகுத்துச் செல்லும் படைவீரனை மாதிரி ஆப்ரேஷன் மேஜை நோக்கி நகர்ந்தான்.
மாதுரியை நோக்கி அவன் கைகள் ஒரு மெஷின் மாதிரி நீண்டது. அவள் ஆதரவாய் அதைப் பற்றிய அடுத்த நிமிடம் ஒரு கைக்குலுக்கலுடன் அதிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டான்.
ஒரு மிலிட்டரிக்காரனைப் போலவே திரும்பி நடந்து  கதவைத் திறந்து வெளியேறினான். நானும் அவனைப் பின் தொடர்ந்தேன்.
üஎல்லாம் முடிஞ்சதும் கூப்பிடறேன்ý என்ற அந்த லேடி டாக்டரின் குரல் எங்கள் முதுகுக்குப் பின் ஒலித்தது.
காலியாய்க் கிடந்த வரவேற்பறை சோபாக்களில் நானும்  சந்தீபனும் தனித்தனியே அமர்ந்தோம். யாருக்கும் பேச எதுவுமற்றது போல அவ்வரவேற்பறை மௌனத்தால் உறைந்திருந்தது. ஒரு பிணம் மாதிரி உட்கார்ந்திருந்த அவனைப் பார்க்கச் சகிக்கவில்லை எனக்கு. ஓரிரு முறை புகைக்கவென எடுத்த சிகரெட்டை புகைக்காமலேயே வைத்துக் கொண்டான்.
உள்ளறையிலிருந்து ஓரிரு முறை சின்னச் சின்ன கேவல்கள் கேட்ட மாதிரியிருந்தது. அப்போதெல்லாம் அவன் என்னைப் பயத்துடன் ஏறெடுத்தான். ஒரு தெளிவான சத்தமான கூக்குரலை நாங்களிருவரும் சேர்ந்து கேட்டோம்.
சட்டென எழுந்து அவனருகில் நான் சென்றேன். üராதாகிருஷ்ணா, நீ இங்கேயே உட்காரு. தோ வந்திடறேன்ý என்ற அவன் வார்த்தைகளை இடைமறித்து,
üடேய் வேணான்டா, இப்ப நீ தண்ணி அடிக்காம இருக்கறதுதான் நல்லது. நீ இப்ப இருக்கற நெலமையில குடிச்சிட்டு அப்படியே எங்கயாச்சும் போயிட்டா, என்னால இத தனியா சமாளிக்க முடியாது. சொன்னாக் கேளு, எங்கயும் போகாதý
மீண்டும் சோபாவில் சரிந்தான். நன்றாகச் சாய்ந்து கண்களை மூடி தியானிப்பது மாதிரியிருந்தான். நான் என்ன செய்வதெனத் தெரியாமல் அங்கிருந்த கண்ணாடி அலமாரியில் தெரிந்த மருத்துவ நூல்களின் பெயர்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அதிலும் மனம் லயிக்காமல் அங்கு கிடந்த பழைய கிழிந்துபோன சினிமாப் பத்திரிகையை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன். அதன் கடைசிப் பக்கத்துக்கு நான் வந்தபோது உள்ளறை கதவு திறந்து வேர்க்கும் உடலோடு அந்த லேடி டாக்டர் வெளியே வந்தாள்.
இன்னமும் சந்தீபன் கண்களை மூடியபடியே உட்கார்ந்திருந்தான். நான் அவனை உலுக்கி அழைத்தேன். டாக்டர் கை அசைவு புரிந்து அவன் உள்ளே நுழைந்தான். அடுத்த விநாடி உள்ளிருந்து நீண்ட விசும்பல்கள் கேட்டன.
போன சில நிமிடங்களில் சந்தீபன் வெளியே வந்தான். வேறெப்போதும் இல்லாத அளவுக்கு மனத்துயரத்தில் இருக்கிறான் என்பது அவன் முகத்தில் தெரிந்தது. என்னை இன்னும் நெருக்கமாய்ச் சமீபித்து,
üராதாகிருஷ்ணா, இதுக்கு மேல ஹாஸ்டலுக்குப் போக முடியாதுன்னு மாதுரி அழறா. அதில்லாம இன்னக்கி ராத்திரி அவளோட இருக்கணுன்னு அடம் பிடிக்கறா. எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை, நீ வேணா அவகிட்ட ஒரு தடவை பேசிப் பாக்கறயா?ý
நான் கொஞ்சம் யோசித்து,
üசந்தீபா, நீ ஒரு நல்ல ஹோட்டல்ல ரூம் போடு.  இன்னைக்கு ராத்திரி அவளைக் கொஞ்சம்  ஆறுதல் படுத்தி, தேத்தி நாளை காலைல அவ ஹாஸ்டல்ல கொண்டுபோய் விட்டுடுý  
üஹோட்டலில் ரூமா?ý அவன் லேசாக அதிர்ந்தான்.
 üநீ அதுக்கு மட்டும் விதவிதமான ஹோட்டல் அறையா  தேடல. இப்போ இதுக்கு நல்ல ஒரு ரூம் போட்றாý
üசே, அதில்லடா, அவகூட இப்ப இருக்கவே எனக்குப் புடிக்கலை. என்னைப் புரிஞ்சுக்கோý
üஎன்னடா பயம்? அவ உன்னை ஏதாச்சும் செஞ்சுடுவான்னு பயப்படுறியா? இல்லை இப்ப நீங்க கலைச்சீங்களே அந்தக் குழந்தை... அதோட ஆவி வந்து உன்னைப் புடுச்சுக்கும்னு பயப்படுறியா? அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடா, ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சி படுத்துக்குங்க. அவளோட வெதுவெதுப்பான கண்ணீர்த் துளி ரெண்டு மூனு சொட்டு உன் முதுகிலப் படும். அவ்ளோதான், எல்லாத்தையும் மறந்துடலாம்ý
üஅவளைக் கட்டிப் புடிக்கறத விட்றா. அவளப் பாக்கவே தோணலைன்றேன். எப்படி ஒரு ராத்திரி முழுக்க அவ கூட இருக்க முடியும்?ý என அவன் தலையில் அடித்துக் கொண்டான். கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு,
üநீயும் எங்ககூட வாý என்றான்.
üஎங்க?ý
üரூமுக்கு. கொஞ்ச நேரம் எங்களோட இரு. அப்புறம் நீ போயிடலாம். ஆனா நீயும் வரணும்ý
எனக்குச் சத்தம் போட்டுச் சிரிக்கணும் போலிருந்தது.
 üடேய், இதுவரைக்கும் ஒரு பெண்ணோட நான் தூங்கினதில்ல. இப்ப உங்க ரெண்டு பேருக்கும் இடையில நான் எதுக்கு? நான் என் ரூமுக்குப் போய், üநமக்கு வசிக்க முந்திரித் தோப்புகள்ý படம் பாத்தாகணும்ý
சந்தீபன் மிகுந்த கலக்கமுற்றது அவன் முகத்தில் தெரிந்தது. நானே எதிர்பார்க்காமல்,
üடே உன் கால்ல வேணா விழறேன்டா. என்னைத் தனியா விட்டுட்டுப் போயிராதý என்றான்.
üசரி உன் இஷ்டம்ý
பிறகு அவன் துரிதமாய் இயங்கினான். ஹோட்டலுக்கு போன் பண்ணி அறை சொன்னான். அந்த ஹோட்டலின் பேரைக் கேட்டதுமே üமூவாயிரம் போயிடுச்சேý என என் குமஸ்தா  மனம் பதறியது. அபார்ஷனுக்கு எப்படியும் ஒரு இருபத்தஞ்சாயிரம் ஆயிருக்கும். அவளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்து ஆறுதல்படுத்த ஒரு பத்து. எப்படிப் பாத்தாலும் இன்னைக்கு நாப்பது அம்பது காலி. இதுக்கெல்லாம் காரணம் வெறுமனே காதலா?
அடுத்த காட்சிகளை சந்தீபன் எனக்கு நுட்பமாய் விவரித்தான்.
üநாங்க ரூம் புக் பண்ணும்போது நீ லாபியில் வெயிட் பண்ணு. லிப்டில எங்களோட யாரோ மாதிரி சேந்துக்க, ரூம்பாய் போனவுடனே நீ ரூமுக்குள்ள வந்துடு. ஏதாவது சொதப்பிடாதý
üநான் என் மனசறிய இதுவரை எந்த மனிதர்களையும் ஏமாத்தினதில்லý
அவன் மௌனமாய் இருந்தான். மாதுரி மிகுந்த துக்கத்தோடு சுவரைப் பிடித்தபடி நடந்து வந்தாள். மேக்கப்பை மீறி கறுத்த முகமும், கலங்கிய கண்களும் இம்சித்தன. ஒரு நர்ஸ் அவளுடைய சூட்கேசோடு வந்தாள்.
üசந்தீபா, நீ போய் அவளைத் தாங்கி நடடாý 
அவன் விருப்பமற்று எங்கேயோ பார்த்தபடி நடந்து  மாதுரியின் கைப்பிடித்து நடத்தினான். அவள் என் பக்கம் திரும்பி, üஹலோ ராதாý என்றாள் ஒரு செத்த வார்த்தையில்.
சந்தீபன் பின்பக்கமாகக் காரைக் கொண்டு வந்தான். மாதுரி  அதில் ஏறி அமர்ந்து முடியாமல் படுத்துக் கொண்டாள். நான் முன்சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். யாரிடமும் பேசிக்கொள்ள சொற்களற்ற தருணமது.
எந்தப் பிரச்னையுமின்றி நாங்கள் மூவரும் ஹோட்டல் அறையை அடைந்தோம். சோபாக்கள் போட்டிருந்த வரவேற்பறைக்கு உள்ளடங்கி படுக்கையறை. மாதுரி கட்டிலில் ஏறி கவிழ்ந்து படுத்தாள். நான் அறைக்குள் வந்ததும் சந்தீபன் üடூ நாட் டிஸ்டர்ப்ý போர்டை மாட்டி கதவை அடைத்தான். அவசரமாய் விளக்குகள் அணைக்கப்பட்டன.
üஎன்னடா வெளயாட்டு இது. இந்த இருட்டுல நான் எப்படி தனியா இருப்பேன். டி.வி. கூட அந்த ரூம்லதான்  இருக்கு. இங்க வராட்டி இந்நேரம் üநமக்கு வசிக்க முந்திரித் தோப்புகள்ý படம் பாத்துக்கிட்டு இருந்திருப்பேன்ý
அவன் அமைதியாய் இருந்தான். திடீரென எழுந்தபடி, üராதாகிருஷ்ணா, எங்கயும் போயிடாதý என்றான்.
அவன்  இருட்டில் என் காலை மிதித்தபடி தட்டுத் தடுமாறி படுக்கையை நோக்கிப் போனான். என் கால்  வலித்தது. üஇத்தனை வலி நிறைந்ததா இந்தக் காதல்ý நான் உள்ளூர நினைத்துக் கொண்டேன். இதிலெல்லாம் மாட்டிக்கொள்ளாத என் நிலைமையை எனக்குள் மெச்சினேன்.
படுக்கையறையிலிருந்து, சின்னச் சின்ன  விசும்பல்களும் தேம்பல்களும், என்னால் புரிந்து கொள்ள முடியாத  சத்தங்களும் ஒரு  பிரளயம் போல வெளிவந்தது. இருட்டில் அவை ஒவ்வொன்றும் தனித்தனி உருவமெடுத்து என்னை நோக்கி வருவதாக பயந்தேன்.
சந்தீபனின் ஆறுதல் வார்த்தைகளை மீறி மாதுரியின் அழுகை ஒலி உயர்கிறது. üஅழுகை பஞ்சாபிப் பெண்களின் தனித்துவம் போலý
 மாதுரியின் கண்ணீர் பெருக்கெடுத்து அறையை மீறி வருவதாகப் பாவித்து என் இரு கால்களையும் எடுத்து டேபிளின் நடுவில் வைத்தேன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு எல்லாம் தெளிவடைந்தது போலிருந்தது. மனித மற்றும் மிருக உருவங்கள் மிக அருகிலும் மிகத் தொலைவிலுமாகத் கண்ணுக்குத் தெரிந்தன. 
என் காதுகளை நுட்பமாக்கினேன். உள்ளறையில் சாந்தம் நிலவியது. அவ்வறை நிசப்தத்தால் நிறைந்திருந்தது. நான் ஒரு பெருமூச்சு விட்டேன். அவ்வளவுதான். எல்லாம் நிறைந்தது மாதிரியிருந்தது. சந்தீபன் அவ்வறையிலிருந்து வெளியே வந்தால், அவனிடம் சொல்லிவிட்டுக் கிளம்பலாமென நினைத்த கணத்தில், என் தோளில் விழுந்த கைகள் என்னைத் திடுக்கிட வைத்தது. சந்தீபன் மிக ரகசியமான குரலில்  üராதாகிருஷ்ணா, அவ தூங்கறா. கொஞ்ச நேரம் இங்க இரு, இப்ப வந்தர்ரேன்ý என அவசரம் காட்டினான்.
üசந்தீபா, ஒரு ஸ்மாலை மீறாதே. நான் உனக்காக இங்க இருக்கறதையும் மறந்துடாத, நீ வந்தாலும் வராட்டாலும் முப்பத்தஞ்சாவது நிமிஷம் நான் போயிடுவேன்ý
சரி என்ற வார்த்தையோடு அவன் இருட்டில் வெளியேறினான்.
நான் மேசையின் நடுவே கால்களை வைத்துக் கொண்டு, சோபாவில் நன்றாய் சாய்ந்து படுத்துக் கொண்டேன். 
இந்நேரம் üநமக்கு வசிக்க முந்திரித் தோப்புகள்ý முடிஞ்சிருக்கும்.
என் நினைவுகளை ஊடுருவி üராதாý என்ற மாதுரியின்  குரல் உள்ளிருந்து என்னை அழைத்தது.
என்ன சொல்வதெனத் தெரியாமல் üஹலோý என்றேன்.
üகொஞ்சம் உள்ள வாங்க ராதாý
அவள் தூக்கத்தில் உளறுகிறாள் என நினைத்து நான் அசையாமல் உட்கார்ந்திருந்தேன்.
இப்போது மாதுரியின் குரல் தெளிவாகக் கேட்டது. 
üராதா, உள்ள வாங்கý
என் உடல் நடுங்கியது. என்னவோ பிரச்னை அவளுக்கு. இந்த நேரம் பாத்து இவனும் தண்ணியடிக்கப் போயிட்டான். அந்த டாக்டர் நம்பரும் என்கிட்ட இல்ல.
நான் மெல்ல அவள் கட்டிலருகே போனேன். உள்ளூர என்னென்னமோ நினைத்தேன். அவ தற்கொலை பண்ணியிருப்பாளோ!
üஇங்க உக்காருங்கý என்ற குரலின் வாஞ்சை நான் அதற்கு முன் கேட்டிராதது. ஸ்கிரீன் வழியே வழிந்த வெளிச்சத்தில் அவள் முகம் ஒரு வெண்பேரொளி மாதிரி ஜொலித்தது.
 üஎன்னை நல்லா கட்டிப்பிடிச்சுக்கோ ராதாý என முனகினாள். என் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டன.
üப்ளீஸ் என்னைக் கட்டிப்புடிý அவள் வார்த்தைகளை மீற முடியாமல் நான் கட்டிலை இன்னும் சமீபித்து அவளைக் கட்டிப் பிடித்தேன். உடன் அதிலிருந்து விடுபட்டு எழ முயன்றேன்.
üப்ளீஸ் வேணாம்ý என்று குழறினாள்.
üஎன் முலைகளைத் தடவுý   
என் கைகள் அவள்  முலைகளின்மீது படர்ந்தது.
üஎன் அடிவயிற்றில் தடவுý 
நான் அவ்விதமே செய்தேன்.
üஇங்கý என என் கைகளைப் பற்றி அழுத்தினாள்.
அவள் கூந்தல் என் வாயிலும் அதிலிருந்து எழுந்த சுகந்த மணம் என் நாசியையும் நிறைந்தது.
üஎன் தொடையில் ரத்தப் பிசுபிசுப்பு இருக்கான்னு பாருý
நான் தடவிப் பார்த்து,
üஇல்லையேý என்றேன்.
üஎன் குழந்தையின் முகச்சாயல் யார் மாதிரி இருந்திருக்கும் ராதா?ý
எனக்குள் பெருகிய பெரும் துக்கம் அடங்கி அப்படியே நின்றேன்.  என் கைகளை எடுத்து,
üஎன் கண்களைத் துடை ராதாý
நீரின் படிவில் குளிர்ந்து போயிருந்த அக்கண்களின் ஈரத்தை என் கரங்களால் துடைத்தேன். 
üஉன் இதழ்களால் என் வாயை மூடு ராதாý
என் உதடுகளால் அவள் இதழ்களில் முத்தங்கள் பதித்தேன்.
üரொம்ப தேங்ஸ் ராதாý
நானும் அதையே சொன்னபடி எழுந்து நின்றுகொண்டேன். அவள் தூங்க ஆரம்பித்தாள். அவள் முகம் நிம்மதியால் நிறைந்திருந்தது.
நான் திரும்பி வந்து வரவேற்பறை சோபாவில் சாய்ந்தபோது, சந்தீபன் மெதுவாக நுழைந்தான்.
மதுவாடை அவ்வறையை நிறைந்தது.
üசந்தீபா, அவளை எழுப்பாத. இங்கயே படுý என்றேன்.
üசரிý அவன் üøýவைக் கழற்றினான்.
üநாளைக்கு மறுபடி உன்னைக் கூப்பிடுவேன்ý என்றான்.
கால்காஜிக்கான கடைசி பஸ் கிடைத்தது.   தூக்கமேறிய என் கண்களைக் கசக்கியபோது என் கைகளிலிருந்து ஒரு புது வாசனை என்னை நிறைத்தது.
திடுக்கிட்டு, யாரும் பார்த்துவிடாத முன் என் கைகளை என் பாண்ட் பாக்கெட்டுகளுக்குள் நுழைத்துக்கொண்டேன்.