Tuesday, March 14, 2017

நேர்காணல்







பால் சக்காரியா
நேர்காணல் : வெய்யில், பவாசெல்லதுரை, கே.வி.ஷைலஜா
எழுத்தில் உதவி : உத்திரகுமாரன்



கேள்வி : சென்னை புத்தகக் கண்காட்சி அனுபவங்கள் பற்றி?

புத்தகக் கண்காட்சி அனுபவம் மிகச் சிறப்பாக இருந்தது. காரணம் பெருந்தொகையிலான மக்கள் பங்கேற்பு. இவ்வளவு ஆட்கள் பங்கேற்பு சமூக வளர்ச்சியின் குறியீடு. நான் வருவது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் சில முறை வந்துள்ளேன். ஒவ்வொரு தடவையும் ஆட்கள்  கூடிவருவது சாதாரண நிகழ்வல்ல. அது தமிழக வளர்ச்சியின் குறியீடுதான் என்பதில் எனக்கு எவ்விதச் சந்தேகமுமில்லை. எதை வாசிக்கிறார்கள் என்பதல்ல - அவர்கள் இலக்கியம் வாசிக்கிறார்களா? பக்தி வாசிக்கிறார்களா என்பதல்ல - ஏதோ ஒன்றை வாசிக்கிறார்கள் என்பதே நல்ல அறிகுறிதான். மேலும் பெரும்பாலானோர் குடும்பத்துடன் வருகிறார்கள். அது பெரிய ஈடுபாடுதான். வாசிக்க விரும்பும் ஒரு சமூகத்தில், உதாரணமாக கேரளத்தில் அரசே நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கிறது அல்லது நிதி அளிக்கிறது. அவர்கள் தேவையானவற்றை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்கத்தில் அவ்வாறில்லையெனத் தோன்றுகிறது. அது விரும்பத்தக்கதல்ல. வாசிக்க விரும்புகிறவர்கள் பெருமளவில் இருக்கும்போது அரசே, நூலகங்களுக்கு புத்தகம் வழங்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். அதை அரசு அவசியமாகவும் உடனடியாகவும் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது.

கேள்வி : உங்களுக்குப் பிடித்த ஒரு கவிதையிலிருந்து தொடங்கலாம். உங்களுக்கு பிடித்த நினைவிலிருக்கும் ஒரு கவிதை சொல்லுங்களேன்?

எனக்குப் பிடித்த கவிதைகள் நிறைய இருக்கின்றன. ஒரு கவிதை சொல்லச் சொன்னால் நான் எதைச் செல்வது? அதை எப்படி நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் என்பதில் தயக்கமிருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் வைலோப்பள்ளி ஸ்ரீதர மேனோன். ஏராளமான கவிஞர் உள்ளனர். ஒரு கவிதை மட்டும் குறிப்பிடுவது சற்று சிக்கல்தான். ஆனாலும் வைலோப்பள்ளியின் சர்ப்பக்காவு என்ற கவிதையைக் குறிப்பிடலாம். மலையாளத்தின் மிகச் சிறந்த அழகிய கவிதைகளுள் அதுவும் ஒன்று. வைலோப்பள்ளி, நவீனத்திற்கும் கிளாசிக்கலுக்கும் இடைப்பட்ட கவிஞர். அதாவது இரண்டும் சந்திக்குமிடத்தில் நிலை கொள்ளும் கவிஞர் எனச் சொல்லலாம். ஆனாலும் அவர் முற்போக்குக் கவிஞராக இருந்தார். ஒரு வகையிலும் அடிப்படைவாதியாக இருந்ததில்லை. அதே சமயம் எழுதிய கவிதைகள் எல்லாம் விருத்தம் சார்ந்தவை. அவர் விருத்தத்தையே பின்பற்றினார்; ஆனாலும் அவர் முற்போக்குவாதிதான். அவர் இடதுசாரியாகவே இருந்தார் எனச் சொல்லலாம். அவர் கம்யூனிஸ்டாக இருந்தார் என்று சொல்ல இயலாவிட்டாலும் இடதுசாரியாக இருந்தார். எளியவர்களுக்காக குரல் கொடுத்தார். எளியவர்களின் பக்கம் நின்றார். ஆனால், இக்கவிதை காவிய அழகியலுடன் ஒரு சமூக நிகழ்வையும் குறிப்பிடுகிறது. அதாவது பழைய வசிப்பிடங்களில் பாம்புகளுக்காக ஒரு காடு, ஒரு புற்று இருக்கும். ஒரு நாகதேவதை சிலையும், கொஞ்சம் பாலும் இருக்கும். அதை அகற்றுவதென்பது பாரம்பரியத்திற்கு எதிரான ஒரு தாக்குதல். அதை அகற்றும்போது காடுகளையும் அகற்ற நேருகிறது. ஆனாலும் காட்டை அகற்றாமலிருக்க இயலாது. சமூக வளர்ச்சியில் அது இயல்பாக நேருவது. அவ்வாறு அகற்றுப்படும்போது பாம்புகள் வெளியேறுகின்றன. அது வெறும் பாம்புகள் அல்ல. அதுவரை பூஜிக்கப்பட்டுக் கொண்டிருந்தவை. பின்னர் அவ்விடத்தில் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அது ஒரு நீண்ட கவிதை. ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. அது ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டபோது சமூக அளவில் மிக முக்கியமான கவிதையாக இருந்தது. அது மட்டுமல்ல, அது அழகுடன், பொயட்டிக் இமாஜினேஷனுடன் இருந்தது.

கேள்வி : உங்களது மொழிநடை ஒரு கவிதைப் பாங்குடன் இருக்கிறது. அதை எவ்வாறு உருவாக்கிக் கொண்டீர்கள்? எப்படிக் கைக்கொண்டீர்கள்?

எனது மொழி நடை கவிதைத் தன்மையுடன் இருப்பதாக நான் கருதவில்லை. கவிதைக் கூறுகளை அது கொண்டிருக்கலாம். நான் எப்போதும் கூறுவது, உரைநடைக்கு உரைநடையின் மொழிதான் வேண்டும். கவிதைக்கு அதற்கேயுரிய மொழிநடைதான் தேவை. என் கதை, ஒரு கவிதை போன்று அழகியலுடன் இருப்பதாக யாராவது கூறினால் நான் அதை எதிர்ப்பேன். அவ்வாறிருக்குமெனில் நான் கவிதை எழுதினால் போதுமே? ஏன் கதையெழுத வேண்டும்? பொயட்ரி இஸ் ஹேவிங் வெரி லாஜிக்கல் அண்ட் மேட்டர். உண்மையில் அதுதான் உண்மையில் கவிதையின் மிகச் சிறந்த குணம். அதன் தாளம். அது பொருளை தன்னகத்தில் கொண்டிருக்க வேண்டும். வெளிப்படுத்தவும் வேண்டும். எளிமையுடனும் இருக்க வேண்டும். அலங்காரச் சொற்களை வலிந்து திணித்ததாக இருக்கக் கூடாது. அதே சமயம், நாம் ஒரு கதை எழுதும்போது அதனுள்ளே லிரிக்கல் என்று சொல்லப்படும் அம்சத்தின் தேவை இருக்கிறது. உதாராணமாக இரவை வர்ணிக்க வேண்டுமெனில், சூர்யோதயத்தை வர்ணிக்க வேண்டுமெனில் மக்கு லிரிக்கை பிரயோகிக்கத் தெரித்திருக்க வேண்டும். லிரிக்ஸிஸம் உரைநடையில் பயன்படுத்தப்படலாம்; ஆனால் அது கவிதையாக மாறக்கூடாது. மலையாளத்தின் சிக்கல், - அது தமிழிலும் இருக்கிறதா என எனக்குத் தெரியாது - கவிதையில் வலிந்து திணிக்கப்படும் சமஸ்கிருதச் சொற்கள். நாங்கள் அதை பைங்கிளி எனக் கூறுவோம். தாழ்ந்த தரத்திலுள்ள ரொமான்டிசம் நிரப்பப்பட்டிருக்கும். பொயட்டிக் ஆகக்கூட இருக்கலாம்; ரொமான்டிக் ஆக இருக்கவே கூடாது. நெவர் பி ரொமான்டிக், அன்லெஸ் யூ ஆர் டெலிபிரேட்லி யூஸிங் ரொமான்டிக் அண்ட் இஸ் எ மாஸ்டர் டெக்னிக்.

கேள்வி : அனைத்து மக்களுமே தன் தாய்மொழியின்மீது பற்றுடன் இருக்கின்றனர். குறிப்பாக தேசம் முழுவதிலுமிருப்போர். நீங்கள் அவ்வாறு மலையாள மொழிக்கென ஏதாவது சிறப்பம்சம் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

மலையாளத்திற்கு மட்டுமே உரித்தான ஒரு தனித்தன்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அனைத்து மொழிகளுக்கும் அதற்கேயுரிய குணங்கள் உண்டு. ஆனால் மலையாளத்திற்கு வரலாற்று ரீதியான ஒரு சாதகம் கிடைத்திருக்கிறது. ஹிஸ்டாரிக்கல் லக். சேர, சோழ, பாண்டிய சாம்ராஜ்யங்களின் போது, பல்வேறு பிரிவினூடாக மலைக்கு அப்புறமிருப்பது மலையாளமாகிப் போனது. ஒரு வகையில் அதுவும் தமிழ்தான். பின்னர் சமஸ்கிருதம் கலந்து மணிப்பிரவாளமாகி, இறுதியில் மலையாளமாகிப் போனது. இன்றும் தமிழ்தான் அடிப்படை. சங்க காலத்தில் உண்மையில் சங்ககாலப் படைப்புகள்தான் உண்மையான மலையாளம். அவ்வாறு உருவான மொழிதான் மலையாளம். அனேகமாக கன்னடமும் அவ்வாறு வந்ததுதான். இம்மூன்று மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து உருவானவைதான். வரலாற்று ரீதியாக மலையாளத்தில் சமஸ்கிருதம் கலந்ததால் மலையாளத்திற்குக் கூடுதல் வார்த்தைகள் கிடைத்தன. நாங்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டோம். அது பிராமணர்கள் வருகையால் நிகழ்ந்தது. அது மலையாளத்தை மேலும் செழுமையாகவும் பயன்பாட்டுக்கு எளிதாகவும் இருந்தது. ஆனால் தமிழில் சமஸ்கிருதக் கலப்பு அவ்வளவாக இல்லாததால் அல்லது அதற்கெதிராக நீங்கள் இயங்கியதால் தமிழ் மூலத்திலிருந்து புதிய சொற்களைத் தேடிக் கொண்டீர்கள். அதுவும் சிறப்பாகவே எனக்குத் தோன்றுகிறது. மலையாளத்தில் சமஸ்கிருதச் சொற்கள் வந்து மொழியில் ஒரு செறிவை உண்டாக்கியது. இரண்டாவதாக, ஸ்பைசஸ் டிரேடிங். சுகந்த திரவியங்கள் வணிகத்தால் மூவாயிரம் வருடங்களாக கிரேக்கர்கள், சீனர்கள், அரேபியர்கள், ரோமானியர்கள், போர்ச்சுக்கீசியர்கள், டச்வுக்காரர்களுடன் வணிகத் தொடர்புகள் இருந்ததால் ஏராளமான வார்த்தைகள் கிடைத்தன. அதை வேறொரு அடுக்காக மலையாளம் உட்கொண்டது. அது மிகப்பெரிய கொடுப்பினைதான். ஹிஸ்டாரிக்கல் லக் என நான் கூறியது அதைத்தான். அது யாரும் உருவாக்கியதல்ல. விச் இஸ் ஹேப்பண்ட், வீ ரிசீவ்ட் இட். அவ்வளவுதான். அதனுடன் ஆங்கிலேயர் வருகைக்குப் பின் ஆங்கிலமும் கலந்து மலையாளம் செழுமைப்பட்டது. ஆங்கிலேயர் வருகைக்குப் பின் மலையாளிகளில் ஒரு பிரிவினர் ஆங்கிலம் படித்தனர். விக்டோரியன் காலக்கட்டத்தில் தோமஸ் ஹார்டி, சார்லஸ் டிக்கன்ஸ் போன்றவர்களின் பெருநாவல்கள் வாசிக்கப்பட்டன. அது மலையாள இலக்கியத்தை மேலும் செழுமைப்படுத்தியது. அதையெல்லாம்விட முக்கியமானது இடதுசாரிச் சிந்தனைகளின் செல்வாக்கு. 1920 காலக்கட்டத்தில் இரஷ்ய இலக்கியங்களும் ஐரோப்பிய இலக்கியங்களும் மொழிமாற்றத்தின் வழியாக வந்தடைந்தன. ரஷ்யன், ஃப்ரென்ஞ்ச், ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து மொழியாக்கங்கள் வரத் துவங்கியபின் மலையாளம் மேலும் வலிமையானது. நவீன மலையாளத்தின் அடித்தளம் இவ்வகை மொழிபெயர்ப்புகள்தான். எம்மொழிக்கும் அவ்வாறுதான். தமிழிலும் அப்படித்தான்.

கேள்வி : திராவிட இலக்கியம் என்று ஒன்றிருப்பதாக நம்புகிறீர்களா? திராவிட தேசியம் என்ற கருத்துரு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

திராவிட இலக்கியம் என்ற ஒன்று இல்லை. காரணம், மொழியியலைப் பற்றி படித்தவர்கள் மட்டுமே திராவிடத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமே திராவிட தேசியம் நிலைகொண்டிருக்கிறது. தமிழகம்தான் திராவிட மக்களின் தாய்நாடு. அங்கிருந்து சிறிதளவு கன்னடத்திற்கோ, கேரளத்திற்கோ சென்றிருக்கிறதே தவிர, அது ஒரு தரப்பாக அங்கெல்லாமில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், எல்லாம் மொழியளவில் தனித்தே இயங்குகிறது. திராவிடம் என இயங்குவதாகத் தெரியவில்லை. திராவிடச் சிந்தனை, திராவிட அடையாளம், திராவிட ஆளுமைகளெல்லாம் தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கின். கேரளத்தில் தலித் ஐடியாலஜிக்கு இருக்கும் இடம்கூட திராவிடத்திற்கு இல்லை.

கேள்வி : இந்திய இலக்கியம் என்று ஒன்றிருப்பதாக நினைக்கிறீர்களா?

உண்டு. சாகித்ய அகாடெமியின் முதன்மைப் பட்டியலில் இருபத்துநான்கு வகையான இலக்கிய வகைமைகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. துணைப்பட்டியலில் மேலும் முப்பத்தைந்து வகைமைகள் இருக்கின்றன. அதனால் ஐம்பத்தொன்பது வகைமைகள். தே ஆர் அலைவ் அண்ட் ஆக்டிவ். ஸோ ஈச் ஒன் இஸ் அன் ஈச் லிட்டரேச்சர். அதனுள்ளேயே ஆங்கிலமும் அடங்கிவிடுகிறது. ஒரு வசதிக்காக நமது ஆங்கில இலக்கியத்தை அமெரிக்கவிலுள்ளவர்களோ இங்கிலாந்திலுள்ளவர்களோ இந்திய ஆங்கில இலக்கியம் என்றழைக்கிறார்களே தவிர, இவையெல்லாம் இண்டியன் லிட்டரேச்சர் என்ற குடைக்குள் அடங்கி விடுகின்றன. அதனால் குறிப்பாக இந்திய இலக்கியம் என்ற ஒன்றில்லை.

கேள்வி : நவீன சமூகத்தில் கதை சொல்லிக்கு என்ன தேவை இருக்கிறது? அவர் எவ்வாறு முக்கியமான ஆளாக இருக்கிறார்?

கதை சொல்லிகள் கட்டாயத் தேவைதான். காரணம், கதை மக்களை வசீகரிக்கும் வடிவம். கதை, கவிதை, நாடகம் எல்லாம். கதை என்று சொன்னால் நாவல், சிறுகதைகள் எல்லாம் அடங்கியதுதான். கதைகள் முற்காலம் தொட்டே கேட்கப்பட்டு வருகின்றன. அதனால் கதை கேட்பதற்கான விருப்பம் மனிதனின் ஜீனிலேயே அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பாவனைதான். கற்பனை வளரும்போது மூளை வளர்கிறது. அதனுடன் நாமும் வளர்கிறோம், கதை சொல்பவரும் வளர்கிறார், கதை கேட்பவரும் வளர்கிறார். கதைகள் முகவும் முக்கியம். தற்போது இன்டர்நெட் என்று வந்திருப்பினும், கதைகள் காகிதத்திலிருந்து ஐ-பேடுக்கு உருமாற்றம் அடைந்திருப்பினும் தொடர்ந்து கதைகள் இருக்கின்றன. கதைகளினூடாக கதாபாத்திரங்கள் உருவாகின்றன. நாம் கதைகளின் வழியாகவே தெய்வங்களை அறிந்திருக்கிறோம். ராமாயணத்திலும் மகாபாரத்திலுமுள்ள தெய்வங்களுக்கு, கதை சொல்லிகள் உருவாக்கிக் கொடுத்த உருவங்களே நிலைகொண்டிருக்கின்றன. ஸ்டோரி டெல்லர் கிரியேட்டட் ராமா அண்ட் கிருஷ்ணா. தட் இஸ் அமேஸிங் திங்க். காரணம், நம்முடைய தெய்வங்களெல்லாம் கதைகளிலிருந்து வந்தவர்கள்தான். இது வேறு  எந்த மதங்களிலும் நிகழவில்லை.  புத்தா வாஸ் எ ரியல் பெர்ஸன். ஜீஸஸ் இஸ் ஆல்ஸோ ஆர் சப்போஸ் எ ரியல் பெர்ஸன்,  முகம்மது நபி செர்டயின்லி இஸ் ஆல்ஸோ எ ரியல் பெர்ஸன். மற்றவர்களெல்லாம் கதைகளிலிருந்து வந்தவர்கள்தான். இந்து மதம் மட்டுமே இதைச் சாதித்திருக்கிறது. கதைகள் கடவுளை உருவாக்கியிருக்கின்றன. கதைகள் கடவுளை வடிவமைத்திருக்கின்றன. கதைகள் கடவுளுக்கு கடவுள் தன்மைவை வழங்கியிருக்கின்றன. கதைகள் கடவுளுக்கு தத்துவத்தை வழங்கியிருக்கின்றன. எல்லாம் வழங்கியிருக்கின்றன. பகவத்கீதை மிகப்பழமையான தத்துவ நூல்.  ஆனால் அதுகூட கற்பனைக் கதாபாத்திரமான கிருஷ்ணன் வழங்கியதுதான். ஸ்டோரி டெல்லிங் இஸ் ஃபண்டமென்டல் இன் சிவிலைசேஷன்.  

கேள்வி : நீங்கள் பிறப்பால் சிரியன் கிருத்தவர். ஆனால் நீங்கள் உங்கள் மொத்தப் படைப்புகளிலுமே கிரித்துவத்திற்கு எதிராகவே எழுதியிருக்கிறார்கள். ஆனால் உங்கள் படைப்பில் ஒரு பாரம்பரியக் கிருத்துவன், உங்கள் படைப்பால் கவரப்பட்டு ஆழ்ந்து செல்கிறான். அவன் தன் அடிப்படைவாதத்தை, தனது கடவுளை நீங்கள் கிண்டல் செய்வதாக உணர்வதில்லை. உங்களின் கதைகளின் சொல் நேர்த்தி அல்லது கலைத்திறன் உங்கள் கதைகளை வேறொரு உயரத்திற்கு நகர்த்திச் செல்கின்றன. ஆனால் உங்கள் அனைத்துக் கதைகளும் கிருத்துவத்திற்கெதிராகவே இருக்கின்றன? இந்த அனுபவங்கள் பற்றிக் கூறுங்களேன்.

இட் இஸ் நாட் அகென்ஸ்ட் கிரிஸ்டியானிட்டி. ஐ ஆம் நாட எ கிரிஸ்டியன். நான் ஒரு கிருத்துவக் குடும்பத்தில் பிறந்தேன். ஒரு பதினாறு, பதினேழு வயது வரை கிறிஸ்துவனாக இருந்தேன் எனச் சொல்லலாம். ஒரு சுதந்திரம் கிடைக்கும்வரை, அந்த வயதுவரை நான் கிரித்துவனாக இருந்ததாகச் சொல்லமாம். நான் என் குடும்பத்தை விட்டு விலகிப் படிக்கச் செல்வது வரை கிறித்துவனாக இருந்தேன் எனச் சொல்லலாம். அதன் பிறகு சுதந்திரமாக வாசிக்கத் துவங்கினேன். ஒருவன் சுதந்திரமாக வாசிக்கத்துவங்கி கிரித்துவத்தின் வரலாற்றைக் கண்டடைந்தபின்னர் அவன் கிரித்துவனல்ல. ஒருவன் மனிதநேயம் என்றால் என்ன என்பதை உணர்ந்தபின்னர் அந்த மனிதநேயத்தைத்தான் ஜீஸஸ் என அழைக்கிறான். ஹி வாஸ் அட் எக்ஸ்ட்ரா ஆர்டினர் பெர்ஸன். ஹி வாஸ் ரெவால்யூஷனரி. ஹி வாஸ் அன் ஐடியாலஜிஸ்ட். ஹி வாஸ் எ ரியலி கம்யூனிஸ்ட். ஹி வாஸ் ஆஸ்க்கிங் ஹூ சேஞ்ச். ஹி ஸெட் த ஜீவ்ஸ் டிரெடிஷனல் ரிலிஜன் அண்ட் காட் ஆல்ஸோ மஸ்ட் சேஞ்ச் (One he has known humanity that called Jesus. Jesus is the Icon and brand name. He was an extra – ordinary person. He was revolutionary. He was an ideologist. He was a man who wanted. He was a really communist. He was asking who change. He said the Jews traditional religion and god also must change.) பழைய ஏற்பாடில் காட் இஸ் எ ரிவஞ்ச்ஃபுல். ஹி இஸ் எ டெவில் ஆக்சுவலி. ஹி இஸ் வெரி ஆங்ரி மேன், ஹி வுட் கில் அட் த டிராப் ஆஃப் த ஹேட். (God is a revengeful. He is a devil actually. He is very angry man he would kill at the drop of the hate.) அப்போதுதான் ஜீஸஸ் சொன்னார். அதுவல்ல ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்ட வேண்டும். அது தான் என் தெய்வம். ஒரு கழுதையின் மேலேறி ஜெருசலேமில் கிராண்ட் டெம்பிளுக்குச் சென்று வணிகர்களை அடித்து விரட்டினார். இது எனது தெய்வம் வசிக்குமிடம். இங்கே வியாபாரம் செய்யக்கூடாது என வெகுண்டெழுந்தார். தட் ஃபீல்ட் இஸ் ஃபெயித். (That field is faith.) அது நிகழ்ந்து இரு தினங்களுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்டார்.  கிருத்துவத்தினுள் அவன் மட்டுமே மனிதமுகம். என்னைப் பொருத்தவரை ஒன்ஸ் ஹூ ரீட் நோண் த கிரிஸ்டியன் ஆஃப் கிரிஸ்டியானிட்டி, ஒன் ஹூ ரீட் த நியூ டெஸ்டமென்ட் அண்ட் ரீட் ஜீஸஸ் கிரைஸ்ட் அஸ் எ ஹியூமன் பியீங் நாட் அஸ் எ காட்: தென் ஹி வாஸ் ஃபிரீ ஃபிரம் கிரிஸ்டியானிட்டி. (Once who read known the Christian of Christianity one who read the New testament and read Jesus Christ as a human being not as a God; then he was free from Christianity.) அதுதான் விஷயம். நாம் ஒரு மனிதனாக கிறிஸ்துவைக் கண்டால், அவர் எவ்வளவு உயர்ந்த மனிதராக இருந்தார் என்பதை அறிவோம். காட் இஸ் யூஸ்லெஸ் திங்க். (God is a useless thing.) என்னுடைய கதைகளிலெல்லாம் ஐ மேட் ஃபன் ஆஃப் கிரிஸ்டியானிட்டி (I made fun of Christianity.) இன் மை ஆர்ட்டிகள் ஸைட், வெரி லாஜிக்கலி ஆர்கியூங் அகெய்ன் கிரிஸ்டியானிட்டி இன் வேரியஸ்…. எகானாமிக் அண்ட் சோ மெனி திங்க்ஸ். தட் இஸ் எ சோஷியல் இஸ்யு. (In my article side, very logically arguing again Christianity in various… economic and so many things. That is a social issue.)  ஆனால் புனைவில் உதாரணமாக, யார்க்கறியாம், கண்ணாடி காண்போளும் போன்றவற்றில் கிருத்துவை சாதாரண மனிதனாகத்தான் படைத்துள்ளேன். கிரித்து இப்போது ஷேவ் செய்யவேண்டுமா வேண்டாமா எனத் தயங்குபவராகப் புனைந்திருப்பேன்.   அவ்வாறுதான் நான் கிரித்துவைப் பார்த்தேன். நான் முதலில் கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறைத்தான் மலையாளத்தில் படித்தேன். அது மிகவும் சிறிய புத்தகம். அதில் கிறிஸ்துவை 33 வயது இளைஞனாகத்தான் கண்டேன். அவர் இறக்கும்போது அவருக்கு முப்பத்துமூன்று வயது.  தட்ஸ் ஆல்.

கேள்வி : உலகம் முழுக்க அதிகமாக அச்சடிக்கப்பட்ட புத்தகமாக பைபிளைக் கருதமுடியும். அதிலுள்ள கதைகளை ஒரு கதை சொல்லியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?

பைபிள் கதைகளால் நிறைந்தது. பழைய ஏற்பாடின் அனைத்துக் கதைகளும் கிரித்துவின் வரலாற்றைக் கூறுவன. ஜான்ஸன், டேவிட் அண்ட் கோலியாத், ஆதம் ஏவாள்… இராமாயணம், மகாபாரதம் போல கதைகளாலும் மித்துக்களாலும் நிரம்பியவை. அனைத்தும் அருமையான கதைகள்.  (Bible is full of stories. Old Testament is full of stories and Jesus history. Jhonson and …… David and Goliyath, like Ramayana and Mahabharatha and myth. Like Adam and eve. That full of fantastic stories.) ஆனால் புதிய ஏற்பாடில் உள்ளவையும்கூட கண்கவரும் கற்பனையுடன் கூடிய கதைகள்தான். யேசு ஒரு சிறந்த கதைசொல்லியாக இருந்தார். அவர் கூற நினைத்த எதையும் கதைகள் மூலமே சொன்னார். அவர் அற்புதமான மனிதன். உடனே கதைகளை உருவாக்குபவர். (But New Testament also that is a most fascianating part of thus. Jesus was a story teller. He whatever he says he presented through stories. He is an amazing person. Immediately he created stories.) கெட்டகுமாரன்… அவர் படைத்த மிகச்சிறந்த கதைகளுள் ஒன்று. அவர் அனைத்தையும் கதைகளாலும் உவமைகளாலும் விளக்கினார். இரண்டாவதாக அவர் தான் சொல்ல நினைத்தவைகளை  இயற்கையிலிருந்தும் தான் நேரில் கண்டவைகளிலிருந்துமே எடுத்தாண்டார். அவர் ஒரு அற்புதமான பேச்சாளராகவும் அற்புதமான கவிஞராகவும் அற்புதமான கதைசொல்லியாகவும் இருந்தார்.  (He was an amazing public speaker and amazing poet, and a story teller.)

கேள்வி : பைபிள் மட்டுமின்றி ராமாயணம், மகாபாரதம் எல்லாம் தற்போது ரீடோல்டு செய்யப்படுகின்றன. தமிழில் ஜெயமோகன் மகாபாரத்தை மறு ஆக்கம் செய்து தற்போது எழுதி வருகிறார். ரீடோல்டுகளின் தேவை, முக்கியத்துவம் பற்றி உங்கள் எண்ணம் என்ன? அதாவது புராண ஆக்கங்களான ராமாயணம் மகாபாரதம் ஆகியவற்றை மறு ஆக்கம் செய்வது ஒருவகையில் இந்துத்துவத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. அதுவும் தற்போதுள்ள நிலையில். அதனால் அது அவசியம்தானா?

ரீடோல்டுகளால் சிக்கல் ஒன்றுமில்லை. ஆனால் அது படைப்பூக்கம் மிக்கதாக இருக்க வேண்டும். உங்கள் அறிவால் நீங்கள் புதிய நோக்கில் கண்டடைந்ததை அதில் பதித்திருக்க வேண்டும்.  (Should be critically retold. You must apply your mind why retell you find new point of view.) இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சொன்னதையே திருப்பிச் சொல்ல வேண்டுமாயின் எதற்கு புதிதாக எழுத வேண்டும்? ஆனால் ஜெயமோகன் ஒரு முற்போக்குப் பார்வையும் விமர்சனப்பார்வையுமின்றி தொழுதல் மனப்பாங்குடன் (But Jeyamohan is bringing modern perspective a critical perspective இல்லாமல் reverential, worshipful) பக்தி பார்வையில் படைத்திருப்பாரெனில் அது எதற்கு? ஜெயமோகன் என்ன செய்திருக்கிறாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் எந்த புராதான புத்தகத்தையும் மறு ஆக்கத்திற்கு நீங்கள் தொடுவதாக இருந்தால், நீங்கள் விமர்சனப்பார்வையுடன்தான் தொட வேண்டும்; அது குரான், பைபிள், மகாபாரதம் எதுவாக இருப்பினும் (any ancient text of you are, you touching it, you touch critically only. Whether it is Quran, Bible and Mahabharata whatever otherwise.) பின் நமது இரண்டாயிரம் ஆண்டு அறிவுச்சேகரம் அதற்கு? தொழிற்புரட்சி, அறிவியல் புரட்சி ஆகியவற்றால் மக்கள் அதிகமும் தெரிந்துகொண்டவர்களாக மாறிவிட்டனர் (peoples known so much more.) நாம்  வரலாற்றின் மிக முக்கியமான, தீவிரமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதைப் படைப்பில் உபயோகிக்க வேண்டும்.  (We lived in very very essential and potential time of history. We applied that.) அதின்றி நாம் வாசித்துப் பயனில்லை.

கேள்வி : கடந்த 25, 30 ஆண்டுகாலமாக மலையாளத்தில் வரும் தினசரிகள் தங்கள் பெயரின்றி வருவதில்லை. ஏதேனும் ஓரிடத்தில் சக்கரியா பெயரை தொடர்ந்து காண்பதாக ஜெயமோகன் செல்கிறார். தமிழ்நாட்டில் அத்தகையவராக ஜெயகாந்தன் இருந்தார். சமூக நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்றுக் கொண்டே எழுத்திலும் இயங்கிக்கொண்டிருந்தார். நீங்களும் அவ்வாறே சமூகத்துடன் தொடர்ந்து உறவாடிக்கொண்டே இருக்கிறீர்கள். அவ்வாறு இருப்பதால் உங்களது கலைத் தன்மைக்கோ, இலைக்கியத்திற்கோ கொஞ்சமும் பாதிப்பேற்படவில்லை, மாறாக உச்சத்திற்கே சென்றுள்ளது. சமூகத்துடன் தொடர்பிலிருக்கும் போதுதான் ஒரு எழுத்து மேன்மையுறுகிறது. ஆனால் தமிழில் அத்தகைய இடையீடு தற்போது பெரும்பாலும் இல்லை. சமூகப் பங்கேற்பில் படைப்பாளி ஈடுபட்டால் அவனது கலைத்தன்மை குறையும் என நினைக்கிறீர்களா?

நிச்சயமாகக் குறையாது என்றே நம்புகிறேன். அது மட்டுமல்ல சமூகத்தின் அடித்தட்டு மக்களுடனும் அவர்களது பிரச்னைகளுடன் உரையாடும்போதுதான் எழுத்தாளன் மேன்மையடைகிறான். அவன் படைப்பு மேலும் உயரங்களை அடைகிறது. நான் ஒரு தங்கக் கோபுரத்திலிருந்து கொண்டு எழுதினால் எனக்கு சமூகத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. நான் சமூகத்தில் மக்களுடன் தொடர்பு கொள்பவனாக இருந்தால்தான் எனது படைப்பு செழுமையுறும். (When I am the middle of the society and interacting with the people. Then my writing must and will improve.) அதன் உள்ளடக்கம் செழுமையுறும்.  நான் அதில் தெளிவாக இருக்கிறேன். (I will more conscious.) என் எழுத்தில் ஒரு மதத்தைப் பற்றியோ, தெய்வத்தைப் பற்றியோ ஒரு வழிபாடைப் பற்றியோ சொல்ல நேருமெனில் இன்றைய காலத்தில் நான் சமூகத்துடன் கலந்திருந்தால்தான் முடியும். அதன் பாதகம் என்னவெனச் சொல்ல வேண்டுமெனில் நமது படைப்பாக்கதிற்கான நேரம் குறையும். சமூக நிகழ்வுகளில் பங்கேற்பு, பயணம், பத்தி எழுதுதல் ஆகியவையே சமூக ஊடாட்டம் என்பது. ஆனால், நமது நேரம் அதனால் குறைகிறது. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நான் சமூகப்பங்கேற்பால் சுமார் எட்டு ஆண்டுகளை இழந்திருக்கலாம். ஆனால் இப்போது இரண்டையும் கையாளுவதற்கான திறனைப் பெற்றிருக்கிறேன். எழுத்தாளன் சமூகத்துடன் ஊடாடுபவனாக இருக்கவேண்டுமெனவே நான் நினைக்கிறேன். (I lost may be 8 years, getting involved but now I am able to mix both. I think, a writer must interact society.) எழுதுவதற்கான திறன் உள்ளதால்தானே நாம் எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்கிறோம். இல்லையெனில் யாராவது நம்மை கண்டு கொள்வார்களா? எது சரி, எது தவறு என நாம் கூற வேண்டும். அதை தற்போது அரசியல்வாதிகள் மட்டுமே கூறுகின்றனர். எழுத்தாளனால்தான் உண்மையைக் கூறமுடியும். அரசியல்வாதிகள் எப்போதும் பொய் சொல்பவர்கள்.

கேள்வி : நீங்கள் நிறைய சிறுகதைகள் எழுதியுள்ளீர்கள், குறுநாவல்கள் எழுதியிருக்கிறீர்கள். ஒரு பெரு நாவல் எழுதுவதில் விருப்பமில்லையா?

எழுதுவதற்கு நேரமில்லை. பயணம் எனது பலவீனம். அதில் அதிக நேரத்தைச் செலவிடுகிறேன். நாவலை எழுதுவதற்கு ஒருவித தினசரி ஒழுக்கம், கட்டுப்பாடு தேவையாக இருக்கிறது. அந்த அடிப்படை ஒழுங்கை வைத்துக் கொண்டு ஒரு ஆங்கில நாவல் எழுதியுள்ளேன். அதற்கு ஏழெட்டு  ஆண்டுகள் செலவிட்டேன். என்னுடைய அபிப்பிராயத்தில் அது பெரிய வேலை. அது முக்கியமான வேலையா எனத் தெரியாது. என்னுடைய முதல் நாவல் ஆங்கிலத்தில் எழுதி தற்போதுதான் முடித்துள்ளேன். இன்னும் பிரசுரிக்கப்படவில்லை. மலையாளத்தில் ஒரு நாவலைத் தொடங்கியுள்ளேன். புனைவு எழுத்தாளனைப் பொறுத்தவரை நாவல் மிகவும் முக்கியம்.  சிறுகதையின் கேன்வாஸ் மிகவும் சிறியது. அதற்குள்தான் நீங்கள் ஏதாவது சொல்ல முடியும். ஆனால் நாவலின் கேன்வாஸ் மிகப்பெரிது. நாவல் இஸ் டெஸ்ட்டிங் பாயின்டு ஆஃப் ரைட்டர். ஒரு சேலஞ்ச்.  ஒரு 200, 250 பக்கத்திற்கு கட்டுக்கோப்பு சிதையாமல் எழுத்தைச் செலுத்த வேண்டும்.

கேள்வி : மலையாளத்தில் புனைவு, கவிதை, நாடகம், திரைப்படம் போன்ற துறையில் செயல்படுவோர் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படுகின்றனரா? அவர்களுக்கிடையேயான தொடர்புகள், தொலைவுகள் குறித்து?

இணைந்து செயல்படுவதாகவே நான் நினைக்கிறேன். ஒரு பிரச்னை வரும்போது அனைவரும் ஒன்று கூடுவர். தற்போது இயக்குநர் கமல், பா...வினரால் தாக்கப்பட்டபோது அனைவரும் கமலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். அனைத்து கலைஞர்களும் சேர்ந்து நாளை திருவனந்தபுரத்தில் கமலுக்கும், எம்.டி. வாசுதேவன் நாயருக்கும் ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கிறோம். அதை சி.பி.எம். சார்ந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம்தான் ஏற்பாடு செய்திருக்கிறது. இருந்தாலும் அனைவரும் கலந்து கொள்கின்றனர். பி.ஜே.பி.காரர்கள், இயக்குநர் கமலை பாகிஸ்தானுக்குச் செல் என்கின்றனர். எம்.டி.வி. பணமதிப்பிழப்பை விமர்சித்தார். நாங்கள் அவர்கள் இருவருக்கும் ஆதரவாக குரல் கொடுத்தோம்ஒரு பிரச்னையெனில் அனைவரும் ஒன்று கூடுகின்றனர். ஆனால், சிலருடன்மதச்சார்பு சக்திகளுடன் குறிப்பாக சங்பரிவாருடன் தங்களை இணைத்துக்கொண்டவர்களுடன்என்னால் எந்த மேடையிலும் பங்கேற்க இயலாது. அத்தகையவர்கள் இருக்கும் மேடையில் நான் பங்கேற்க விரும்பவில்லை. அந்த வகையில் இலக்கியம் எங்களைப் பிரிக்கவில்லை; ஆனால் அரசியல் பிரிக்கிறது.  அவர்கள் சிறந்த எழுத்தாளர்களாக இருக்கலாம்; ஆனால் அவர்கள் சங்பரிவாரத்துடன் இருக்கின்றனர். அக்கித்தம், சுகுதகுமாரி போன்றவர்கள் சங்பரிவாருடன் இணைந்து செயல்படுகின்றனர். அதனால் அத்தகையவர்களுடன் நான் எந்த நிகழ்விலும் பங்கேற்கமாட்டேன். நான் அதை விரும்பவில்லை. ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. அவ்வாறு ஐடியாலஜி மாறுபட்ட எழுத்தாளர்கள் உண்டு. ஆனால் பெரும்பாலும் அனைத்து படைப்பாளிகளிடமும் பரஸ்பர ஒத்துழைப்பு உண்டு. அனைவரும் பொது விஷயங்களில் குரல் கொடுக்கின்றனர்.

கேள்வி : உங்களது பெரும்பாலான குரல்கள் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி எதிர்த்தே உள்ளன. ஆனாலும் நீங்கள் இடது ஆதரவாளர் இல்லை. ஏனெனில் இடதுசாரிகளின் பல தவறுகளை எதிர்த்தும் குரல் கொடுத்துள்ளீர்கள். உதாரணமாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது காரில் உடனழைத்துச் சென்ற பெண் பற்றிய நிகழ்வில்கேரள மக்கள் உங்களை எத்தகைய அரசியல் சார்பு கொண்டவராகப் பார்க்கிறார்கள்?

அதை எவ்வாறு சொல்வது எனத் தெரியவில்லை. ஆனால் என்னை நன்கு அறிந்தவர்கள். என்னை ஒரு சுயாதீனமான சுதந்திரமான நிலைபாடு எடுப்பனாகவே நினைக்கின்றனர். எனக்கு எந்தவொரு கட்சியிடனோ, அமைப்புடனோ மந்திரியுடனோ செய்தி நிறுவனங்களுடனோ, தொலைக்காட்சியுடனோ, மத, சாதிய நிறுவனங்களுடனோ ஒரு விதத்திலும் நான் பிணைக்கப்பட்டவனல்ல. என் நிலைபாடு சுதந்திரமானது என மதிக்கின்றனர். நான் கூறுவது முட்டாள்தனமாக இருந்தாலும் எனது சுய அபிப்பிராயத்தையே கூறுவதாகவே நினைக்கின்றனர்.

கேள்வி : தமிழகத்திற்கும் கேரளத்திற்குமான மிக முக்கியமான பிணைப்புகளாக எதை குறிப்பிடுவீர்கள்? கலாச்சார ரீதியாக எவையெல்லாம் ஒத்துப் போகின்றன அல்லது முரண்படுகின்றன?

அதை எவ்வாறு கூறமுடியும்? தமிழில் சமீபகாலத்தில் - ஒரு 20, 25 ஆண்டுகளாக - வந்து கொண்டிருக்கும் முக்கிய இலக்கியப் படைப்புகள் மலையாளத்தை விடவும் மேம்பட்டவை. குறிப்பாக கவிதைகள் வெகு முன்னிலை வகிக்கின்றன. அசோகமித்ரன், பஷீரைவிடவும் மிகவும் முக்கியமானவர். அசோகமித்திரனை நான் கண்டடைந்தேன் எனச் சொல்லலாம். மொழியாக்கங்கள் வந்த பின்னர்தான் நாம் அதைத் தெரிந்து கொள்கிறோம். வாட்டர், நான் ஆங்கிலத்தில் வாசித்து நீண்ட வருடங்களுக்குப்பின்தான் சீனுவாசனால் மலையாளத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்திலோ மலையாளத்திலோ மொழிபெயர்க்கப்படவில்லையெனில் எனக்கு அசோகமித்திரனைத் தெரியாது. பெரும்பாலான மலையாளிகளுக்கு தமிழில் என்ன நடக்கின்றன என தெரியாது. அவர்களால் உணர்ந்து கொள்ளவும் அங்கீகரிக்கவும் இயலாது. கன்னடத்திலும் மேலான படைப்புகள் வெளிவருகின்றன.  மலையாளிகள் இதையெல்லாம் உணராமல் தங்களுக்குள் ஒரு சிறு வட்டத்திலேயே புழங்குகின்றனர். இருப்பினும் மலையாளத்திலும் நல்ல படைப்புகள் வந்திருக்கின்றன. உன்னி. ஆர், ரஃபீக் அஹமது, அனிதா தம்பி போன்றோர் உள்ளனர். ஆனால் ஒரு இன்டர் திங்க்கிங் இல்லை.

பிறமொழி எழுத்தாளர்களுடன் பெரும்பாலான மலையாள எழுத்தாளர்கள் தொடர்பு கொண்டிருக்கவில்லை. என்னைப் பொருத்தவரை நான் தொடர்பில் இருக்கிறேன். தமிழிலும் கன்னடத்திலும் என்ன நடக்கிறது என எனக்குத் தெரியும். நான் காலச்சுவடு கண்ணன், சுகுமாரன் போன்றவர்களுடன் நல்ல தொடர்பில் இருக்கிறேன்.

கேள்வி : எம்.டி. வாசுதேவன் நாயர் படைப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எம்.டி.வி. எங்களுக்கெல்லாம் ஒரு தந்தையைப் போன்றவர். மிகவும் சீனியர். புனைவெழுத்தில் அவர்தான் எங்கள் தலைமுறை எழுத்தாளர்களை உயர்த்திக் கொண்டு வந்தார். விஜயன், மாதவிக்குட்டி, குஞ்சப்துல்லா, சேது, முகுந்தன், ஆனந்த், நான், என பலரும் எம்.டி.வி.-ம், என்.வி. கிருஷ்ணவாரியாரும் கண்டுபிடித்தவர்கள் எனச் சொல்லலாம். ஆனால் அவருக்கு நாங்கள் அனைவருமே ஒரு தேர்ந்த போட்டியாளர்கள்தான். ஆனால், அவர் அவ்வாறு எங்களைப் போட்டியாளர்களாகக் கருதவில்லை. அவர் எங்களையெல்லாம் தூக்கிப் பிடித்தார். அதுதான் அவரது மேன்மை. எம்.டி.வி-க்கு மாடர்னிட்டி பற்றி நன்கு தெரியும். இருந்தாலும் அவர் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் எழுதினார். அவ்வாறு எழுதுவதை அவர்தான் தேர்வு செய்தார். இப்போதும் அவர் ஒரு புத்தகம் எழுதினால் உடனே விற்றுத்தீரும்.

கேள்வி : மூன்று தலைமுறை எழுத்தாளர்களுடன் நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்கள். உங்களுக்கு முன்பும் பின்பும். ஜெயகந்தன் 25 ஆண்டுகளுக்கு முன்னரே தான் படிப்பதை நிறுத்திவிட்டார். உடனே எழுதுவதையும் நிறுத்திவிட்டார். ஆனால் சுந்தரராமசாமி, இறுதிவரை எழுதியும் படித்துக் கொண்டுமிருந்தார். சுந்தர ராமசாமி, கி. ராஜநாராயணன், அசோகமித்ரன் போன்ற எழுத்தாளர்கள் வயது ஒரு பிரச்சினை இல்லை எனும் அளவுக்கு எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டுமிருக்கின்றனர். நவீன இலக்கியத்தில் இவ்வளவு காலமும் அவர்கள் தொடர்வதற்கு எது முக்கியக் காரணமென நினைக்கிறீர்கள்?

அது அவரவர்களின் சுயதேர்வு. எழுத்தாளன் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனும் தன்னை எவ்வாறு உருவாக்கிக்கொள்கிறான் என்பது முக்கியம். காரணம், நாம் நம்மை காலண்டரைப் பார்த்து நமது வாழ்வை அளக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் நாம் சிக்கலில் மாட்டிக் கொள்வோம். நாம் தந்தையாவோம்; தாத்தாவாவோம். அப்படியே போய்க்கொண்டிருக்கும். தட் மேக்ஸ் நோ சென்ஸ் டு மீ.  என்னைப் பொருத்தவரை நான் எங்கு இருக்கிறேன் என்பது முக்கியம். எனது துறை இலக்கியம். நான் அதிலேயே தொடர வேண்டுமெனில் நாம் தொடர்ந்து நம்மைப் புதுப்பித்துக் கொண்டும் தரப்படுத்திக் கொண்டுமிருக்க வேண்டும். அதற்கு வாசிப்பு மிக முக்கியம். மலையாளத்தில் மட்டுமல்ல பிற மொழிகளிலும் என்ன நடக்கின்றன என தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் தொடர்ந்து நீடிக்க முடியும்.

இரண்டாவதாக, இப்படி புதிய அறிவுகளும், புதிய கண்டுபிடிப்புகளும் கிடைப்பது நம்மை மாற்றுகின்றன. உலகம் வளர்கிறது. நாம் மாற்றமடைகிறோம்; நாம் கிழவனாகவில்லை. அதில் ஒரு காரியமுமில்லை. ஆனால் மாறிக் கொண்டிருக்கிறோம். முன்னர் என்னிடம் என்ன இருந்தது என்பதற்கு ஒரு மதிப்புமில்லை. இப்போது என்னிடமிருப்பது என்ன என்பதுதான் விஷயம். இப்போது நம்மிடம் எதுவுமில்லையெனில் ஒரு நாயும் நம்மைப் பார்க்காது. நீங்கள் துண்டிக்கப்படுவீர்கள்.  

கேள்வி : உங்களின் கதைகளின் வரும் பெண்களில் அடித்தட்டுப் பெண்களே இல்லை. பண்ணைக் கூலிகள், கூலித் தொழிலாளர்கள், வேசிகள், சாலைப் பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் என யாருமில்லை, நடுத்தர வர்க்க, உயர் நடுத்தர வர்க்கப் பெண்களே வருகின்றனர். அதற்கு ஏதேனும் காரணமிருக்கின்றதா?

எனக்குத் தோன்றுவது, நான் கேரளாவை விட்டு 1960களிலேயே வெளியேறிவிட்டேன். பின்னர் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னரே கேரளத்திற்கு வருகிறேன். இடைப்பட்ட காலத்தில் இரண்டு மூன்று ஆண்டுகள் வந்திருப்பேன் அவ்வளவுதான். சென்னை, பெங்களூர், கோவை பின்னர் டெல்லியில் இருபத்திரண்டு வருடங்கள். என் வாழ்க்கையில் என்னுடன் தொடர்புள்ள நான் அறிந்த ஒரே வர்க்கம் மிடில் கிளாஸ்தான். சிறு வயதில், பதினாறு, பதினேழு வயதில் அத்தகையவர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.  பிற வர்க்கத்தினரிடமிருந்து நான் முழுவதும் விடுபட்டவன். நான் அவர்களைப் பற்றி அதிகம் அறிந்தவனல்ல. அதனால் எனக்குத் தெரிந்த, எனது மனநிலைக்கு உகந்த மிடில் கிளாஸ் பற்றிதான் எனக்குத் தெரியும். அவர்களின் சைக்காலஜி தெரியும். மற்றவர்களை நான் நேரில் பார்க்கவில்லை; உணரவில்லை. மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ்-ல் உள்ள பெண்களின் வாழ்க்கையத்தான் நான் டெல்லியிலும் கேரளத்திலும் பார்த்திருக்கிறேன். அதனால் இயல்பாக அவர்கள் என் படைப்பிலும் வந்திருக்கின்றனர்.

கேள்வி : இங்கு நீங்கள், பஷீர், எம்.டி.வி. போன்றோர் தமிழில் வெகு பரிச்சயமான எழுத்தாளர்கள். நீங்கள், தமிழில் அதிகமும் வாசிக்கப்படும் மலையாள எழுத்தாளர்களுள் ஒருவர். அதே போல் மலையாளத்தில் அதிகமும் வாசிக்கப்படும் தமிழ் எழுத்தாளர் யார்?

மெளளி, லா..ரா., புதுமைப்பித்தன் ஆகியோருக்கு மலையாளத்தில் பாப்புலர் ரீடர்ஷிப் இல்லை. தே ஆர் நாட் வெல் நோண். பின்னர் சு.ரா.வின் ஜே.ஜே.சில குறிப்புகளும், ஒரு புளியமரத்தின் கதையும் மொழிபெயர்க்கப்பட்டு மாத்ருபூமியில் தொடராக வந்ததால் அவருக்கு ஓரளவு வாசகர்கள் உள்ளனர். இப்போதும் இரண்டு புத்தகங்களும் மலையாளத்தில் கிடைக்கின்றன. சோகமித்ரனின் தண்ணீர் வந்து இரண்டு வருடங்களே ஆகின்றன. சீனிவாசன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். எனது நினைவில் சுந்தர்ராமசாமிதான் முதலில் மலையாளத்தில் வாசிக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர். சோகமித்ரன் தேவையான அளவுக்கு கவனம் பெறவில்லை. ஜெயமோகனால் மலையாளத்தில் எழுதப்பட்டவை வாசிக்கப்படுகின்றன. ஆனால், ஜெயமோகனின் தமிழ்ப்படைப்புகள் மலையாளத்திற்கு வரவில்லை. நூறு சிம்மாசனங்கள் போன்ற ஒரு சில அவராலேயே மொழிபெயர்க்கப்பட்டவை. தமிழின் இருப்பு மலையாளத்தில் உணரப்படவேயில்லை. தமிழ்ப்படைப்புகள் மலையாளமாக்கப்படவில்லை. மலையாளப் படைப்புகள் தமிழுக்கு வந்திருக்கின்றனவேயன்றி தமிழ்ப் படைப்புகள் மலையாளத்திற்கு வரவில்லை.

கேள்வி : உங்கள் அபிப்பிராயத்தில் மலையாளத்திற்குச் செல்லவேண்டும் என என்னும் தமிழ்ப்படைப்புகள் எவை?

நான் முன்னரே குறிப்பிட்டது போல புதுமைப்பித்தனின் படைப்புகள், மௌனி, சோகமித்ரன், ஜானகிராமன் போன்றவர்கள். அவர்களின் ஒருசில படைப்புகள் மலையாளத்திற்கு வந்திருக்கலாம். ஆனால் அவையெல்லாம் என்.பி.டி., சாகித்ய அகாதமி மூலம் மொழிபெயர்க்கப்பட்டு வந்தவை. அது சந்தைக்கு வருவதில்லை. அவர்களது அலுவலகத்தில் மட்டுமே இருக்கும்.

கமெர்ஷியல் பதிப்பகங்கள் மூலமாக வந்தால்தான் அது வாசகர்களைச் சென்றடையும். டி.சி. புக்ஸ் போன்றவர்கள் தமிழிலிருந்து தேர்ந்த படைப்பாளிகளை மலையாளத்திற்குக் கொண்டு வர வேண்டுமெனத் தீர்மானிக்க வேண்டும். கே.வி. ஷைலஜா, கே.வி. ஜெயஸ்ரீ, சுகானா போன்றவர்கள், மலையாளத்திலிருந்து தமிழுக்கு இன்னின்னவை வரவேண்டும் எனத் திர்மானித்துச் செயல்பட்டதாலும் நீங்களே பதிப்பாளராக இருந்ததாலும் தமிழில் இவை நிகழ்ந்த. மலையாளத்தில் அவ்வாறு யாரும் தீர்மானிக்கவில்லை. மொழிபெயர்ப்பாளர்களுமில்லை.

கேள்வி : மலையாளத்திலிருந்து தமிழுக்கு இதுவரை வராத, வரவேண்டிய படைப்புகள் படைப்பாளிகள் என யார் யாரைக் குறிப்பிட முடியும்?

சிறுகதை, நாவல்களில் முகுந்தன், குஞ்சப்துல்லா, சேது, ஆனந்த், கல்பட்ட நாராயணன், சந்தோஷ் எச்சிக்கானம், சந்தோஷ்குமார், உன்னி.ஆர்., மனோஜ் குரூர், அசோகன் சருவில் என அனைவரின் படைப்புகளும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அதனால் சில தனிப்பட்ட படைப்புகள் எனப் பொறுக்கி எடுக்கலாமேயன்றி யாரையும் குறிப்படுவதற்கில்லை.

கவிதையில் கோபிகிருஷ்ணன் மிகச்சிறந்த கவிஞர். ஆனால் மலையாள மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கு தமிழில் வாசகர்கள் மிகவும் குறைவு. எனினும் அன்வர் அலி, அனிதா தம்பி போன்றவர்களைச் சொல்லலாம். இருப்பினும் தமிழ்க்கவிதைகள் மலையாளத்தைவிடவும் சிறந்த தரத்திலும் நவீனத்துடனும் இருக்கின்றன.  

இவையெல்லாம் பதிப்பகத்தார் தாங்களாகவே தீர்மானிக்க வேண்டும். இருப்பினும் தமிழ்நாட்டிலிருந்து ஒரு அழுத்தம் - அதை எப்படி என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை - இருந்தால் அது நடக்கலாம்.

கேள்வி : தற்போது கேரளாவில் இடது முன்னணி அரசு ஆட்சிப்பொறுப்புக்கு வந்திருக்கிறதே அவர்களும் அதைப் பொருட்படுத்தவதில்லையா? உதாரணமாக, தமிழ்நாட்டில் ஜெயமோகனை எந்த அரசியல்வாதிக்கும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அவர், அவர்களுக்குத் தேவையில்லை. ஆனால் ஒரு இடதுசாரி அரசு கேரளாவில் உங்களைப் போன்றவர்களை அங்கீகரிக்கிறார்களா? உரிய மரியாதை தருகின்றனரா?

இடதுசாரி அரசு என்றல்ல; யூ.டி.எஃப், எல்.டி.எஃப் என இரு அணியினருமே எழுத்தாளர்கள் தேவையென நினைக்கின்றனர். இருவருமே அங்கீகரிக்கின்றனர். இது இந்தியாவில் வேறு எம்மாநிலத்திலும் இல்லையெனினும் கேரளத்தில் உண்டு. பல விஷயங்களில் அவர்களது அபிப்பிராயங்களைக் கேட்கின்றனர். ஆனால், எல்.டி.எஃப்-ஐப் பொறுத்தவரை ஒரு சிறிய சிக்கல் என்னவென்றால், என்னைப் பொறுத்தவரை நான் ஒரு இடதுசாரி, ஆனால் எனது இடது சாரிச்சார்பு எல்.டி.எஃப்-க்குப் போதுமானதல்ல. இடது சார்பு என்பதை மீறி கட்சி சொல்வதைக் கேட்பவர்களாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். எல்.டி.எஃப்- க்கு இலக்கிய, பண்பாட்டுப் பார்வை என ஒன்று உண்டு. யூ.டி.எஃப்– என்பது தமிழகத்திலுள்ள தி.மு.க., அ.தி.மு.க. போன்றதுதான். சரி, எழுத்தாளர்களும் இருக்கட்டும் என நினைக்கின்றனர். அவர்களுக்கென்று ஒரு பார்வையில்லை. எல்.டி.எஃப், தங்கள் கட்சியுடன் தொடர்பு கொண்டிருக்கும் எழுத்தாளர்களையே தூக்கிப் பிடிப்பர். ஆனாலும் மற்றவர்களை நிராகரிப்பதில்லை. அவர்களது நிகழ்வுகளுக்கு அனைத்து எழுத்தாளர்களையும் அழைப்பர். இப்போது ஒரு அமைச்சர் இருக்கிறார். கலாச்சாரத்துரை அமைச்சர். அவருக்கு இலக்கியம் ற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அவர் ஒரு நல்ல கம்யூனிஸ்ட். ஊழல்கறை படியாதவர், திறமையானவர்.  ஆனால் கலாச்சாரம், இலக்கியம் ற்றியும் ஒன்றுமே அறியாதவர். அவர் ஒரு சிறந்த நிர்வாகி.  அவர், அவரது மற்ற துறைகளைப் போலவே இதையும் நிர்வகிக்கிறார். இடது முன்னணி கலாச்சாரச் செயல்பாடுகளின் மூலமாகவே ஆட்சிக்கு வந்தது. பாடல்கள், நாடகங்கள் மூலமாகவே அவர்கள் ஆட்சிக்கு வந்தனர். முன்பு கலை, இலக்கியம் ஆகியவற்றை மையமாக கம்யூனிஸ்ட் கட்சி வைத்திருந்தது. ஆனால் அதை தற்போது செகண்டரியாக வைத்துள்ளனர்.

கேள்வி : தமிழில் தற்போது இலக்கிய விமர்சகர்களே இல்லை. மலையாளத்தில் எப்படி இருக்கிறது? விமர்சகர்கள் உள்ளனரா?

மலையாளத்தில் மிகத் தீவிரமான காலக்கட்டம் ஒன்று இருந்தது. விமர்சகர்கள் இருந்தனர். ஆனால் தற்போது ஊடகத்தில் அதற்கான இடம் வழங்கப்படுவதில்லை. தற்போது வில்விட்டு எண்ணக்கூடியவர்களே உள்ளனர். உதாரணத்திற்கு டாக்டர். வி.ராஜகிருஷ்ணன் போன்ற மூன்று, நான்கு பேர் உள்ளனர். கிரிட்டிக்கல் வேல்யூ என்று சொல்வத்தக்க விதத்தில் மலையாளத்திலுமில்லை. அதனால் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. நல்லது எது தீயது எது எனத் தெரிவதில்லை. விமர்சகர்கள் சொல்வது அனைத்தும் நல்லது எனக் கொள்ளத் தேவையில்லை. ஆனாலும், ஒரு விமர்சகர் ஒன்றைச் சுட்டிக்காட்டும்போது வாசகனுக்கு படைப்பைத் தேர்வு செய்ய இலகுவாக இருக்கும்.

மறுபுரத்தில் பி.கே. ராஜசேகர் போன்று ஒரு சிலர் இருக்கின்றனர். வர்களெல்லாம் பழைய ஆளுமைகளைப் பற்றியே மீண்டும் மீண்டும் எழுதுகின்றனர். அவர்களையே ஆராதித்துக் கொண்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு பஷீர், விஜயன், மாதவிக்குட்டி போன்றவர்களைப் பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். அதை எழுதுவது சுலபம். காரணம், அது ஒரு வித ஆராதனை; மதிப்பிடுதல் என்பது அல்ல. புதிய எழுத்தாளர்களைப் பற்றிய உதாரணமா உன்னி.ஆர் பற்றியெல்லாம் மதிப்பிட வேண்டுமெல்லவா? அது நடைபெறவில்லை. அதுமட்டுமல்ல புதிய தலைமுறை எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம் வருவது மிகவும் குறைவு. மீறி வருவதும் ஆராதனைதான்; மதிப்பீடு அல்ல.

கேள்வி : உணவு சார்ந்து, உடை சார்ந்து கலாச்சாரத் தாக்குதல்கள் மத்திய அரசால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? உதாரணமாக ஜல்லிக்கட்டுத் தடை, பீப் சாப்பிடுவது, ஒரு மாநில கலாச்சாரத்தைப் பிற மாநிலங்கள் கேலியும் கிண்டலுமாகப் பார்ப்பது போன்றவற்றை?

தட் இஸ் டேஞ்சரஸ் திங்க்ஸ். மிகவும் ஆபத்தான ஒன்றாகவே நான் பார்க்கிறேன். காரணம், இங்கே ஜல்லிக்கட்டு வேண்டுமா வேண்டாமா என்பதை மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அது உச்சநீதிமன்றம் இடவேண்டிய ஆணையல்ல. மத்திய அரசு இடவேண்டிய ஆணையல்ல. மாட்டுக்கறி உண்ண வேண்டுமெனில் அதை உண்ணும் மக்கள், அவர்கள் இந்துக்களானாலும், முஸ்லிம்களானாலும் பழங்குடியினர் ஆனாலும் அவர்களே தீர்மானிக்க வேண்டியது. அதில் மத்திய அரசு தலையிட வேண்டியதில்லை. ஆனால் பப்ளிக் நியூசென்ஸ் ஏற்படும் விஷயங்களில், உதாரணமாக சுற்றுச்சூழல் மாசு போன்ற விஷயங்களில் அரசுத் தலையீடு இருக்கலாம். ஆனால் பண்பாட்டு விஷயங்களில் மத்திய அரசு தலையிடுவது ஃபாசிசம்.  

கேள்வி : நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கும் தீர்ப்புகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றவா?

நீதிமன்றங்கள்தான் நம்முடைய இறுதிப் புகலிடம். மாஜிஸ்திரேட் நீதிமன்றமானாலும், உச்ச நீதிமன்றமானாலும் அதுதான் ஃபைனல் ரிசார்ட். காரணம், அரசியல்வாதிகளிடத்தும் அதிகாரிகளிடத்தும் நம்பிக்கையற்ற மக்கள் நிறைந்து இருக்கின்றனர். ஆனால் நீதிமன்றங்கள் இன்று அரசியல்தலையீடுகளில் தனது நம்பிக்கையை இழந்திருக்கின்றன. ஈவன் கோர்ட்ஸ் ஆர் லூலிங் கிரிடிபிலிட்டி, ஐ ஹேவ் த ஃபீலிங் தி கோர்ட்ஸ் ஆர் நோ மோர் ஸ்டாண்டிங் ஃபார் த கான்ஸ்டிட்யூசன் ஆர் ஃபார் த ரைட்ஸ் ஆஃப் த சிட்டிசன். அனைவரும் அப்படித்தான் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனாலும் அந்நிலை இருக்கிறது. பிகாஸ் ஜட்ஜல் ஆர் பியிங் செலக்டட் ஆன் தி பேஸிஸ் ஆஃப் தெர் பொலிட்டிக்கல் அண்ட் கேஸ்ட் அண்ட் ரிலிஜன் அஃப்ளியேஷன்; நாட் ஒன்லி தே ஆர் லீகல் மெரிட் அண்ட் கிரேட்னெஸ். தாவது ஐ ஆம் செலக்டட் அஸ் எ ஜட்ஜ், பிலாங் ஐ ஆம் கிரிஸ்டியன், பிலாங் ஐ ஆம் எக்ஸ் ஆர் வொய் பார்ட்டி. தென் மை அஃப்ளியேஷன் இஸ் டு தட் த ரிலிஜன் அண்ட் தட் பார்ட்டி; நாட் டு த கான்ஸ்டிட்யூஷன், நாட் டு த பீப்பிள். அத்தகைதொரு நிலை உருவாகிக் கொண்டு வருகிறது. அந்நிலை பி.ஜே.பி. அரசில் அதிகரித்துக்கொண்டு வருகிறது. பி.ஜே.பி-க்கு ஒரு பிரச்னையாக இருப்பது நீதித்துறைதான். அதனால் நீதித்துறையைக் கைப்பற்ற அவர்கள் முயற்சிக்கின்றனர். அதில் வெற்றி பெறுவார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் முயற்சிக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை.

கேள்வி : கேரளத்தில் எப்படி இருக்கிறது.

கேரளத்திலும் அவ்வாறுதான். தே ஆர் ஹைலி பொலிட்டிஸைஸ்டு. ஜட்ஜஸ் ஆர் பொலிட்டிஸைஸ்டு. கேரளத்திலும் யூ.டி.எஃப், எல்.டி.எஃப் சார்பான நிதிபதிகள் உள்ளனர். அவர்கள் தீர்ப்புகள் ஒரு நாளிதழின் ரிப்போர்ட்டிங் போல் இருக்கும். நீதித்துறையை குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. காரணம் அதுதான் நமது கடைசிப் புகலிடமாக இருக்கிறது. ஆனால், அது சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

கேள்வி : தமிழில் சுதந்திரத்திற்குப் பின்பு உருவான முக்கியப் போக்குகளாக தலித்தியம், பெண்ணியம், போஸ்ட் மாடர்னிசம் ஆகியவை ஒரு பெரும்போக்காக உருவானது. வை மலையாளத்தில் எவ்விதம் பாதிப்பைச் செலுத்தியிருக்கின்ன?

பெண்ணியம் மிகத் தீவிரமாக இயங்கிய ஒரு காலகட்டம் இருந்தது. மாதவிக்குட்டியை ஃபெமினிஸ்ட் என்று விமர்சனர்கள் சொன்னர். ஆனால் மாதவிக்குட்டி, தான் ஒரு ஃபெமினிஸ்ட் அல்ல ஒன்லி ரைட்டர் என்றுதான் கூறினார். சாரா ஜோஸப் பெண்ணியத்திற்காக நிலைகொண்ட எழுத்தாளர். ஆனால் எனக்குத் தோன்றுவது இதெல்லாம் ஒரு படிநிலை. அனிதா தம்பி பெண்ணியக்கவிஞர் என்பதை விட அவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதுதான் சரி. கமலாதாஸும் அவ்வாறுதான். எனது பார்வையில் தமிழ்நாட்டைவிடவும்  கேரளம், ஆணாதிக்கம் நிறைந்த இடம். இட் இஸ் ஃபியூடல், மேல் பவர்.  கேரளப் பெண்கள் இதை அங்கீகரிக்கின்றனர்; அதற்கு அடிபணிக்கின்றனர். ஆனாலும் சிறிதளவு முன்னேற்றமாவது ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், இதைப்பற்றிய விவாதங்கள்தான்.

தலித் இலக்கியம்கேரளத்தில் முன்னரே இடதுசாரிகள் செல்லாக்குடன் இருப்பதால் தலித் முன்னேற்றம் ஓரளவு நடைபெற்றிருக்கிறது. இட ஒதுக்கீடு மூலம் அனைத்துத் துறைகளிலும் அவர்கள் ஓராளவுக்கு பங்கு பெற்று இருக்கின்றனர். கல்வி கிடைத்தவர்களெல்லாம் மேலேறி வந்தனர். ஆனாலும் தலித் என்பவர்களுடன் மேல்சாதியினரிடம் ஒரு விலகல் இருக்கிறது. ஒரு தலித் கிரைஸஸ் கேரளத்தில் இல்லை. கிரைஸஸ் உள்ளது, பழங்குடிகளிடம்தான். அவர்களைத் தலித் என்று கூறவியலாது. பழங்குடியினரும் கடலோர மக்களும்தான் சிரமப்படுகின்றனர். பணமின்றி, கல்வியின்றி, வசதி வாய்ப்புகள் இன்றி மலை வாழ்மக்களும் மீனவர்களும்தான் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்காக ஒரு பெரிய நடவடிக்கை நடைபெறவில்லை. இலக்கியத்தில் இது பிரதிபலித்திருக்கிறது. ஆனால் தேவையான அளவுக்கில்லை.

கேள்வி : தற்போது மலையாளப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றபோது நாங்கள் உணர்ந்தது, மலையாளப் பெண்கள், தங்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது குரல் கொடுப்பதில்லை; தமிழகத்தில் கூட குரல்கள் எழுகின்றன. முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளம் இருந்தாலும் அது எங்ஙனம் நிகழ்கின்றது?

அதைத்தான் நான் குவிமையப்படுத்தினேன். இவ்வளவு கல்வி பெற்றிருந்தும் கேரளப் பெணகள் அநீதியை எதிர்க்கும் மனநிலையைப் பெறவில்லை. பல்கலைக்கழக மாணவிகளுக்குக்கூட அந்த தைரியமில்லை. ஆணாதிக்கத்திற்கும், கல்விக்கும் ஒரு தொடர்புமில்லை. அது மதம்சார்ந்த பண்பாட்டின் ஒரு பகுதி. இந்துக்கள், கிருத்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் சிறு வயதிலிருந்தே குடும்பத்திலேயே எதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையிலேயே வளர்க்கப்படுகின்றனர். ணாதிக்கம், இன் ஈக்வலிட்டி எல்லாம் இந்த மூன்று மதத்தினரும் ஒருபோல ஏற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு பயிற்றுவிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. அதனால் பெண்களும் அதை ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது பெண், வேலைச் செல்பவளா, சம்பாதிப்பவளாக இருந்தாலும். ஆணாதிக்கத்தை எதிர்த்துக் கேள்வி கேட்பது சுலபமல்ல. அவள் வெளியேற்றப்பட்டால் எங்கு செல்வாள்? தான் பிறந்த குடும்பத்திற்குச் சென்றால் அவர்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அவள் தனியாக வாழத்தீர்மானித்தால் பல சந்தேகங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது; அவர் காவல்துறையிலிருந்தாலும். இதெல்லாம் தட் த மேன் இஸ் த சுப்ரீம் தென் த உமன் என்பது குடும்ப மதிப்பீடாக வந்திருப்பது. இதை சிறு வயதிலேயே மாற்றியமைத்தால்தான் உண்டு. நர்சரி லெவலிலிருந்தே துவங்க வேண்டும். அவ்வாறுதான் அமெரிக்காவில் ஐரோப்பாவில் நிகழ்ந்தது. சிறு வயதிலேயே மேன் அண்ட் உமன் ஆர் ஈக்வல், பயாலாஜிக்கலி தே ஹேவ் சம் டிபரன்ஸ் அதர்வைஸ் நோ டிபரன்ஸ் அட் ஆல்  என்று உணர்ந்து கொள்கின்றனர். நாம் அதைச் செய்வதில்லை.

கேள்வி : மலையாளிகள், தமிழ்களைத் தாழ்வாகவே மதிப்பிடுகின்றனர். அது ஏன்?

இது ஒரு மேல்ஜாதி மனோபாவம். ஃபியூடலிசம். அவர்கள் தங்களை உயர்வானவர்களாக எப்படியோ நம்புகின்றனர். அதற்குக் காரணம் தமிழகத்தைவிடவும் வெகு முன்னரே அவர்கள் கல்வியில் முன்னேறிவிட்டனர். தமிழர்கள் தற்போதுதான் கல்வி கற்று வருகின்றனர். தமிழகத்திலிருந்து கூலிவேலைக்கு வரும் தமிழர்களையே மலையாளிகள் அதிகமும் கண்டுள்ளனர். அவர்களை பாண்டி என்றே அழைப்பர். பாண்டி மீன்ஸ் பாண்டியன் கிங்டம் என்பதை அவர்கள் அறிவதில்லை. ங்கு முதலில் கூலிவேலைக்கு வந்த அடித்தட்டு மக்களைப் பார்த்து அவர்களைவிட தாங்கள் மேலானவர்கள் என்று எண்ணிக் கொள்கின்றனர். அதே சமயம், மலையாளிகள் எல்லாம், மதுரை, கோவை, சென்னை போன்ற இடங்களில் வேலை செய்தே சம்பாதித்துச் செல்கின்றனர். அதை மறந்து விடுகின்றனர். சென்னை போன்ற ஒரு மாநகரம் கேரளத்தில் இல்லை. தற்போதுதான் கொச்சி வளர்ந்து வருகிறது. தமிழகத்திலிருந்து இரண்டாயிரம் பேர் கொச்சி வந்துள்ளனரெனில் இரண்டு லட்சம் மலையாளிகள் சென்னையிலுள்ளனர். இது ஒருவகை முரண்.

கேள்வி : தற்போது காந்தியை இடதுசாரிகளும், சங்பரிவார் கூட முன்னிறுத்துகின்றனர். இரு முரண்பட்ட தரப்புகளும் காந்தியை முன்னிறுத்துகின்றன. தற்போது காந்தியின் தேவை என்னவாக இருக்கிறது.

நாம் முன்பு ஜீஸஸ் பற்றிப் பேசினோமே? அதைப் போன்றவர்தான் காந்தியும். காந்தி தன்னளவில் போராடி மகாத்மா ஆனவர். அதுதான் நிகழ்ந்தது. யூ கேன் நாட் இமிட்டேட் ஜீஸஸ். யூ கேன் நாட் இமிட்டேட் புத்தா. ஃபார் எக்ஸாம்பிள், யூ கேன் நாட் இமிட்டேட் காந்தி  ஆல் ஸோ. பிகாஸ் இட் இஸ் இம்பாஸிபிள். நோ ஆர்டினரி ஹியூமன் பியிங் கேன் டு வாட் காந்தி டிட் ஆர் வாட் ஜீஸஸ் டிட். காந்தி எத்தகையவராக இருந்தார். காந்தி என்ற பேருரு உண்டாக்கிய கவர்ச்சி, கரிஷ்மா, ஹி இஸ் அன் ஐகான். ஹி இஸ் ஃபாதர் ஆஃப் த நேஷன். வரது பிம்பத்தையே பங்கிட முயற்சிக்கின்றனர். தே வாண்ட் டேக் ஆன் தட் மான்டில். நாங்கள் காந்தியைப் போன்றவர்கள். நாங்கள் காந்தி போன்று ஆடை அணிபவர்கள். நாங்கள் காந்தியத்தைப் பின்பற்றுபவர்கள் என்று பொய் கூறிக் கொண்டு நடக்கின்றனர். காரணம், மக்கள் காந்தியை மதிக்கின்றனர். காந்திக்குள் சனாதன இந்து இருந்தாலும் அவர் உண்மையானவராக இருந்தார். உண்மையிலிருந்து அவர் விலகிச் சென்றதில்லை. ஆனால் உண்மை என்பதின் பொருளைக்கூட அறியாதவர்கள் காந்தி பிம்பத்தைக் களவா முயற்சிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் காந்தியைக் கொன்றவர்கள். அவர்கள்தான் சாவர்க்கர், கோட்ஸேதான் கொன்றனர். ஆனால் தற்போது வெட்கமின்றி காந்திதான் தங்கள் ஐகான் என்று கூறுகின்றனர். காந்திய மதிப்பீடுகளை அவர்கள் பின்பற்றுவதில்லை; அவர்களுக்கு அது தேவையுமில்லை. ஆனால் காந்தியின் கரிஷ்மா அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அவரை வைத்து மக்களை ஏமாற்றுவது எளிதாக இருக்கிறது. அதனால் காங்கிரஸும், பி.ஜே.பி.-யும் ஒருபோல காந்தியைக் களவாட முயற்சிக்கின்றனர்.

கேள்வி : குடி கலாச்சாரம், தமிழ்நாட்டில் தற்போது பரவலாகப் பரவியிருக்கிறது. ஆனால் கேரளாவில் கொண்டாட்ட மனநிலையுடன் குடியை ணுகுவதாக எண்ணப்படுகிறது. நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கேரளத்தில் கள் என்பது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. நல்ல கள் முன்பிலிருந்தே கிடைத்துக் கொண்டிருந்தது. சிலர் குடிப்பதில்லை. பெரும்பாலானோர் குடிப்பார்கள். பீஃப்பும் அவ்வாறுதான். பின்னர் கள்ளை அரசு விநியோகிக்க ஆரம்பித்த பின்னர், அரசியல்வாதிகளின் கைகளுக்குச் சென்று  ஊழல் நிகழ்ந்தது. கலப்படம் நிகழ்ந்தது. உணவு என்பதிலிருந்து மாறியது. போதை தலைக்கேறியவுடன் அவன் மற்றவர்களுக்கு உபத்திரமாவைனாக மாறினான்.

எனக்குத் தோன்றுவது கேரளத்தின் ஜனத்தொகையில் பத்து, பதினைந்து சதவிகிதத்தினரே குடிக்கின்றனர். என்னிடம் புள்ளி விபரமெல்லாமில்லை. ஆனால் நான் அவ்வாறே நினைக்கிறேன். பத்து, பதினைந்து சதவிகிதத்தினர் முன் காலத்திலிருந்தே குடித்துக்கொண்டு இருக்கின்றனர். அதை மேலும் குறைக்க முடியும். ஆனால் தமிழகத்தைப் போலவே, கேரளாவிலும் அரசின் கணிசமான அளவு வருமானம் குடிகாரர்கள் கொடுப்பதுதான். குடியிலிருந்து வருவதுதான். பேட் டிரிங்கர்ஸ் ஆர் ருயின் தெர் ஃபேமிலிஸ். அது ஒரு சென்ட்ரல் இஸ்யு. ஒருவன் குடிக்கு அடிமைப்பட்டால் அது அவன் குடும்பத்தில் குழப்பத்தையே விளைவிக்கும். துவிலக்கு சிக்கலைத் தீர்க்குமென நினைக்கின்றனர். ஆனால் மது விலக்கு என்பது தீர்வாவாது. குடிப்பதற்கான தனிமனிதனின் சுதந்திரத்தில் நாம் தலையி முடியாது. அதை அனுமதிக்கத்தான் வேண்டும். ஆனால் குடிப்பவன் பிறருக்குத் தொந்தரவாக இருக்கக்கூடாது. குடி நுகர்வு கூடியிருந்தாலும் குறைந்திருந்தாலும் அந்த பத்து, பதினைந்து சதவிகிதத்தினர்தான் குடித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களால் குடியை நிறுத்த இயலாது, ஒரு மதமும் இந்து, முஸ்லிம், கிரித்துவம் எம்மதமாக இருந்தாலும் அவர்கள் குடிக்கெதிரான நிலையை தீவிரமாக எடுக்கவில்லை. உதாரணமாக, கிருத்தவர்கள் குடிக்கின்னரெனில் அவனது மதம் அதில் தலையிட வேண்டும். அரசுக்கு மட்டும்தான் பொறுப்பிருக்கிறதா என்ன? குடிகாரனுக்கு மாமுதீஸா செய்ய முடியாது, திருமணம் நடத்தித்தர முடியாது என்று சர்ச் முடிவெடுத்தால் குடியைப் பெருமளவு தடுக்கலாம். அதைச் சொல்லக்கூடிய தைரியம் இல்லை.

கேள்வி : இலக்கியத்திற்கும் கேரள சினிமாவுக்கும் உள்ள தொடர்புகள் எத்தகையது? தமிழகத்தில் இலக்கிய ஆளுமைகளுக்கும் திரை ஆளுமைகளுக்கும் ஒத்துப் போவதேயில்லை. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. வணிகரீதியான வெற்றி என்பதேயில்லை. கேரளத்தில் இலக்கிய ஆளுமைகளுடன் இனைந்து திரை ஆளுமைகள் இயங்குகின்றனரா? அத்தகைய படங்கள் வெற்றி பெறுகின்றனவா?

மிகவும் குறைவே. 1950-1970 காலகட்டங்களில் மலையாளத்தில் இனைந்து வேலை செய்தனர். பஷீர், தகழி, எம்.டி.வி., சுரேந்திரன் போன்றவர்கள்தான் திரைப்படத்திற்கு கதைகளை வழங்கினர். திரைக்கதையிலும் பெரும் பங்களிப்பைச் செய்தனர். ஆனால் அது தற்போது மாறியிருக்கிறது. ஒரு சிறு குழுவினர் கதை விவாதத்தில் பங்கேற்று கதைகளையும் காட்சிகளையும் உருவாக்குகின்றனர். எனது பிரைஸ் ஆஃப் தி லார்ட் சினிமாவாக உருவாகியிருக்கிறது. அதில் மம்முட்டி நடித்தார்; அது வணிகரீதியாக வெற்றி பெற்ற படம். ஒரு குழுவினரால் கதைவிவாதம் என்ற பெயரில் திரைக்கதை உருவாக்கப்படுவதால் அதற்கு இலக்கிய மதிப்பு என்பது இல்லை. ஒரு படைப்பு திரைப்படமாக உருவாவதில்லை. மலையாளத்தில் குறிப்பிடத்தகுந்த சில இளம் இயக்குநர்களுக்கு போதுமான வாசிப்பு இருக்கிறது. அவர்கள் கிளாசிக்குகளை வாசித்திருப்பார்களா என்று தெரியாது எனினும் வாசிக்கிறார்கள். ஓரளவு இசை பற்றியும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்களுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள். இயக்குநர்கள் மட்டுமல்ல, நடிகர், நடிகையர்களும் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள். ரீமா கல்லிங்கல் போன்றவர்கள் எல்லாம் அப் டு டேட். தே ஹேவ் கிளியர் பொலிட்டிகல் ஸ்டாண்ட். ஆனால் மூத்த தலைமுறை நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் போன்றவர்கள் அப்படியல்ல. அவர்களிடம் இந்தியப் பிரதமர் யாரென்று கேட்டால் கூடத் தெரியுமா எனத் தெரியவில்லை.

கேள்வி : மம்முட்டி கூடவா?  

மம்முட்டிக்கு இந்தியப் பிரதமர் யாரென்று தெரியும். அவ்வளவுதான்.

கேள்வி : இல்லை அவர் தெரிந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறதே?

எங்கே? அவர்களுக்கு அதற்கான நேரமில்லை. ஸ்கிரிப்ட்டைக்கூட பார்க்கவே செய்வர். அதை வாசிப்பதற்குக்கூட நேரமிருப்பதில்லை. கதையைச் சொல்லும்படிக் கேட்பர். அவ்வளவுதான். அவர்களது கடின உழைப்பை மதிக்கிறேன். அவர்களுக்கு வாசிப்பதற்கான நேரமோ ஓய்வோ கிடைப்பதில்லை.  காலையில் நான்கு மணிக்கும் மூன்று மணிக்கும் எழுந்திருக்க வேண்டும். படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்ல வேண்டும். அவர்களது வாழ்வு லக்ஸுரி என சொல்கின்றனரெனினும் இவர்கள் வாழ்க்கை மிகவும் டைட். வாழ்க்கை ஒரு போர். டென்ஷன். முன்பு பிரேம் நசீர் இருந்த காலத்தில் மதியம் வரை ஒரு ஸ்டுடியோவில் காதலன்; அதற்குப் பின்பு வேறொரு ஸ்டுடியோவில் வில்லன்; இரவில் வேறொரு ஸ்டுடியோவில் வேறொரு கதாபாத்திரம். இவ்வாறு சென்று கொண்டிருந்தவர்கள் அவர்கள். இன்று ப்படி இல்லையென்றாலும்கூட நம்முடைய நாளைப் போன்றதல்ல அவர்களுடையது.

கேள்வி : நீங்கள் எழுதிய படைப்புகளில் உங்களுக்குத் திருப்தி தந்த படைப்பு எது? உங்கள் படைப்பில் நீங்கள் திருப்தியடைந்திருக்கிறீங்களா?

ஐ ஆம் நாட் ஸாடிஸ்ஃபைட். ஒரு சில படைப்புகளில் வடிவமும் உள்ளடக்கமும் சிறப்பாக வந்திருப்பதாக நினைத்திருக்கிறேன். ஆனால் அதை இப்போது மீண்டும் எடுத்து வாசித்தால் திருத்தத் வேவையில்லை எனத் தோன்ற வேண்டும். அவ்வாறு சில படைப்புகளே உள்ளன. தேன் போன்ற கதை எழுதியபோது ஐ ஃபீல் குட். என் அனைத்துப் படைப்புகளிலிருந்தும் விலகி ஒரு புதிய வடிவத்தை உருவாக்க முடிந்தது. பழையதிலிருந்து விலகி புதிய ஒன்றைப் படைக்கும்போதுதான் திருப்தி கிடைக்கும்.

கேள்வி : உங்கள் கனவுத்திட்டம் என்று ஒன்றிருக்கிறதா?

அப்படியொன்றுமில்லை. வேண்டுமானால் மலையாளத்தில் ஒரு நாவல் எழுத வேண்டும் என்று சொல்லலாம்.

கேள்வி : எழுதுவதற்கிடையில் பிளாக் ஏற்படுமல்லவா? அப்படி உங்களுக்கு நேர்ந்திருக்கிறதா?

இல்லை. துவக்கத்தில் இருந்தது; இப்போது இல்லை. இப்போது நாம் தீர்மானித்து எழுதினால்தான் எழுத்தாளனாகத் தொடர முடியும் என்று நமக்குத் தெரியும். நாம் அதிலிருந்து தப்பிக்க முடியாது. என் படைப்பை நான் தானே படைக்க முடியும்? மற்றவர்களிடம் ஒப்படைக்க முடியாது. நானேதான் எழுத வேண்டும். ஒரு மணி நேரம் கடந்தும் ஒன்றும் எழுத இயலவில்லையெனினும் காத்திருக்கத்தான் வேண்டும். கீப் வெயிட்டிங்.

கேள்வி : உங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்து கூறுங்களேன்?

ஐ ஆம் எ லேஸி மேன். எழுதுவதில் நான் ஒரு சோம்பேறியாக இருந்தேன்.

கேள்வி : ஒரு விளையாட்டுத்தனமாக கேள்வி. ஆளே இல்லாத இடத்திற்கு ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்லச் சொன்னால் எந்தப் புத்தகத்தை எடுத்துச் செல்வீர்கள்?

ஆலிஸ் இன் த வொண்டர்லேண்ட்.

கேள்வி : ஒரு கால இயந்திரத்தில் பயணிக்கச் சொன்னால் எந்தக் காலத்திற்குச் செல்வீர்கள். எதையாவது மாற்றுவீர்களா?

அரிஸ்டாட்டில், பிளாட்டோ காலகட்டத்தைய கிரேக்கத்திற்குச் செல்வேன். ஏனெனில் நாலாயிரம் வருடங்களுக்கு முன்பே நவீனமானவர்கள் அவர்கள். அவர்கள் அதை எப்படிச் சாதித்தார்கள். அவர்கள் எவ்வாறு சிந்தித்தார்களோ அப்படித்தான் நவீன சமூகத்தில் இன்றும் சிந்திக்கப்படுகிறது. குறிப்பாக தத்துவத்துறையில். அதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

கேள்வி : புதியவர்களுக்குச் சில வார்த்தைகள்?

நான் சொல்ல ஒன்றே இருக்கிறது. புதிய எழுத்தாளர்களுக்கு என்றில்லை அனைத்து எழுத்தாளர்களும் அவரவர் சமூகத்துடன் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். சோஷியல் கமிட்மெண்ட் உள்ளவனாக இருக்க வேண்டும். சமூகப் பொறுப்பில்லாதவன் எழுத்தாளனாக மாட்டான். மலையாளிகள் வாசிக்கவில்லையெனில் நான் ஒரு எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதில் ஒரு பொருளுமில்லை. அப்போது எனக்கு அந்தப் பொறுப்புணர்வு மலையாளிகளிடம் இருக்க வேண்டும். மலையாளிகளுக்கு எது நல்லது என்று நமது புத்தி கொண்டு சொல்ல வேண்டும். நாம் அறிந்ததைச் சொல்ல வேண்டும்.

என் அபிப்பிராயத்தில் மலையாளிகளுக்கும், ஏன் இந்தியர்களுக்கும் இப்போது அத்தியாவசியத் தேவை 1. டெமாக்ரஸி, 2. செக்யூலர் பாய்ன்ட் ஆஃப் வியூ, 3. சையன்டிஃபிக் தாட்ஸ் அதாவது புராணம், பௌரீணீசம் என்று சொல்லிக் கொண்டு நடக்காமல் அறிவியல் பார்வையுடன் விஷயத்தை அனுகத் தெரிய வேண்டும். 4. அவேர்னஸ் ஆஃப் ஹிஸ்டரி. இது மிகவும் முக்கியமானது. நாம் யார் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். பின்னர் பாலின பாகுபாடற்ற தன்மை. ஒரு ஆண் எழுதத் துவங்கினால் அவன் தலையில் முன்னரே ஏற்றப்பட்ட ணாதிக்க மனோபாவம் இருக்கிறது. அதிலிருந்து அவன் விடுபட வேண்டும். படைப்பில் பாலினப்பாகுபாடு தலைகாட்டக்கூடாது. அதேபோல் மதம் பற்றியும் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். அதை விமர்சனக் கண்ணோட்டத்துடன்தான் ணுக வேண்டும். எந்தப் புனித நூல்களையும் ஆராதனை மனோபாவத்துடன் அணுகக்கூடாது. அப்படி ஆராதித்தால் எழுத்தாளன் முடிந்து விடுவான். ஒரு அரசியல் பார்வையுடன் ணுகவேண்டும். அதற்கு அவன் ஒரு அரசியல் கட்சி சார்ந்தவனாக இருக்கத் தேவையில்லை. ஆனால் அரசியல் விமர்சகனாக இருக்க வேண்டும்.





கேள்வி : தங்களது பெரும்பாலான கதைகளை மொழிபெயர்த்திருக்கிறோம். நான் வாசித்திருக்கிறேன். இதல் மிகவும் பிடித்த கதை என்றால் தேன் தான். அதில் நூறு வருட சரித்திரம் உள்ளது. அக்கதை தமிழுக்கு வரும்போது மலையாளம் வாசிக்கத் தெரியாத பவா, தன் கேள்வியறிவில் அதை மொழிபெயர்த்தார். அதில் உங்களுக்கு ஏதேனும் மனச்சங்கடம் உள்ளதா?

இல்லை. ஒரு சங்கடமுமில்லை. காரணம் ஜெயஸ்ரீயும் ஷைலஜாவும் அங்கு இருக்கிறார்கள். புரிதலில் ஏதேனும் சிக்கல் இருந்திருப்பின் பவாவுக்கு உதவியிருப்பார்கள். மேலும் பவாவும் ஒரு எழுத்தாளர்.   அதனால் பவாவால் எளிதாகவும் சிறப்பாகவும் செய்திருக்க முடியும்.

கேள்வி : இயக்குநர் மிஷ்கினுடன் நேற்று 2, 3 மணிநேரம் செலவிட்டீர்கள். அதை எப்படி உணருகிறீர்கள்?


ஹி இஸ் வெரி இன்ட்ரஸ்ட்டிங். ஹி இஸ் ஃபாஷநாட்டிக் பெர்சனாலிட்டி. ஹி இஸ் அன் எக்ஸன்ட்ரிக் ஃபிலிம் மேக்கர், வெரி ஒரிஜினல் அண்ட் எக்ஸ்ட்ரீம்லி டிஃபரண்ட் ஃபிரம் மோஸ்ட் ஆஃப் த ஃபிலிம் மேக்கர்ஸ் இன் இண்டியா, நாட் ஒன்லி டமில். ஹி ஹேஸ் அட் எக்ஸப்ஷன், பிகாஸ் ஹி ரீட் லாட் ஆஃப் புக்ஸ். நான் எனது சஹிருதனாக அவரை உணர்ந்தேன். நிறைய படிப்பவராக இருப்பதால் அவர் தான் படித்த நிறைய விஷயங்களை திரைக்குக் கடத்துவார் என நம்புகிறேன்.



- நன்றி
தடம் 
மார்ச் 2017