Thursday, November 29, 2012

ட்ரம்ஸ் சிவமணி




ட்ரம்ஸ் சிவமணி.

தீபத்தன்று வழக்கம் போல் காலையிலிருந்தே வீட்டிற்கு நண்பர்கள் வந்து கொண்டிருந்தார்கள். சந்தோஷமாக இருந்தது. ஆறு மணிக்கு தீபம் ஏற்றி முடிந்தப்பிறகு எட்டு மணிக்கு வீட்டு மொட்டை மாடியில் தரையிலமர்ந்து இலை போட்டு பரிமாற ஆரம்பித்தார்கள் ஷைலஜாவும் குழந்தைகளும்.

எனக்கும் ஒரு இலை போடுங்க என்று பெரும் குரலெடுத்து உள்ளே 
நுழைந்தவர்

ட்ரம்ஸ் சிவமணி.

எல்லோரும் ஒரு நிமிடம் ஆச்சர்யத்தால் உறைந்தோம்.

சாப்பிட்டு முடிந்து, இத்தனை நல்ல சாப்பாடு கொடுத்த உங்களுக்கு ஒரு கலைஞனா என்னால முடிஞ்சது இவ்வளவுதான் என சொல்ற தான் மூன்று நாட்களுக்கு முன் டென்மார்க்கில் வாங்கின ஒரு புது கருவியால் (முழுக்க மரத்தாலானது) வாசிக்க ஆரம்பித்தார்.

கண்களை மூடி ஒரு தவம் மாதிரி அதை நிகழ்த்தினார்.

என்னை என்னாலயே நம்ப முடியாத அந்நிமிட பகிர்வு உங்களுக்கு...






5 comments:

  1. கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் கியைக்காத வாய்ப்பு! பவா! நீங்களும் உங்கள் நண்பர்களும் பாக்கியவான்கள்! ---காஸ்யபன்

    ReplyDelete
  2. டிரம்ஸ் சிவமணி அற்புதமா வாசித்தார், அருகிலிருந்து ரசிக்க கிடைத்த வாய்ப்பு அவ்வள்வு நன்பர்களை சம்பாதித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Very Nice Sir! Its very natural that Good Music will come and join Good People at Good Times.

    ReplyDelete