Monday, December 2, 2013

மனப்பிழற்வின் மீதேறி நின்றுகதை எனக்கு சொன்ன கதை

-என்.சீனிவாசன்

சொல்லபடும்வார்த்தையின் மூலமாக, பெயர், பொருள், செயல், என்று அவனால் புரிந்து கொள்ள முடிகிறது.இந்த புரிந்து கொண்டதை, வைத்து கொண்டு, அவனால் ஒரு முடிவு எடுக்க முடியும் அப்படி என்றால்,பவா செல்லதுரை தன்னுடைய அம்மாவிடம் கேட்ட கதைகள், கதைசொல்லி என்னும் ஆவணப்படத்தில்பார்த்தேன்.

அம்மாவிடம்ஒரு குழந்தை, செவிவழியாக, ஒரு கதையை, ஒரு மொழியில் கேட்டுவளர்ந்த விதம், என்பது, அதேகுழந்தை, தன்னுடைய, பால்ய பருவத்தில், தான் கேட்டு வளர்ந்த விசயங்களை, பார்க்கனும்அப்படின்னு நினைக்கிறது, அதன்பின் பார்பதற்கான முயற்சியை எடுப்பது, அந்த இடத்தில் போய்பார்ப்பது, அப்போ இந்த கதையில் சொல்லபட்ட விசயங்களை தேடி போன அந்த பால்ய வயது பிள்ளைக்கு,அங்கு என்ன கிடைத்தது? சரி, இப்படி ஒரு கதை கேட்டு வளர்ந்த பிள்ளையுடைய கதைதான், தான்எதிர் கொள்கின்ற தன்னுடைய அண்ணன் மார்களாகவோ, தன்னுடைய ஆதர்சங்களாக சந்திக்க கூடியநபர்களிடத்தில், இந்த குழந்தையாக இருந்து பால்ய பருவத்தை எட்டியபிள்ளை, அவர்களை சந்திக்கும்பட்சத்தில்,அவர்களிடம் போய், இது மாதிரி இங்க ஒன்னு இருந்துதாமே, இது மாதிரி நடந்துதாமே, அப்படின்னுகேட்கும் பொழுது, அவங்க இவருக்கு கொடுத்த பதில் என்ன அப்படின்னா, இவர் அறியாத ஒரு சூட்சமத்தை,அவருக்கு செய்றாங்க

பால்யகாலத்துக்கே உறிய ஒரு முறுக்கும், ஒரு முனைப்பும், நம்பிய விஷயங்களின் மேல் கொண்ட கொள்கைபிடிப்பும், நிச்சயமா கதைசொல்லியை பார்த்து கதையானது கேட்பது போல, இந்த கதைசொல்லி கொண்டபிடிப்புக்கு, விசுவாசமாகவும், நம்பிக்கையும், மிக பெரியது. அந்த படத்துல சந்துரு அப்படின்னு,ஒருவர் பேசற மாதிரி, ஒரு ஊருக்கு அந்த இயக்கம் , மாநாடு போட்டா, அந்த மாநாட்டில் பேசப்பட்டபல விசயங்களை தாண்டி, அந்த ஊர் மக்கள், அந்த மாநாட்டிற்காக வைக்கப்பட்ட பதாகைகள் பற்றிபேசுவதாக சொல்லும் இடம், மிக நுட்பமானது, ஒரு மாநாடு ஊர் மக்களால் பேசப்படுவது என்பது,மாநாட்டினுடைய தீர்மான நகல்களை படித்தோ, மாநாட்டினுடைய தீர்மானம், என்ன விளைவுகளை,தாக்கத்தை, இந்த மாநாட்டில் கொண்டுவரும், என்பதை பற்றிய  விவாதமோ அற்று, மாநாடு பற்றிய அறிவிப்புகளை தெரிந்துகொண்டு மாநாட்டில் பேசுகின்ற நட்சத்திரங்களை அறிந்து கொண்டு, அவர்களை, பிடித்திருந்தால்,பிடித்த விதத்தில் பாராட்டி, பேசி, மகிழ்ந்து, பிடிக்கவில்லை என்றால் சாடி, திட்டிதீர்த்து, பேசக்கூடிய ஊர் மக்களுடைய மனநிலை என்பது, இவை எல்லாவற்றையும் தாண்டி, வைக்கப்படும்பதாகைகளை பற்றி பேசுவது, அதன் அழகில் மெய் மறந்து போய் கிடப்பது, எந்த கொள்கை சார்புடையவர்களாகஇருந்த போதிலும் தன்னுடைய கொள்கை சார்புடைய இயக்கங்களை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும்என்கின்ற, முன் முடிவுகளை எடுக்கக்கூடிய விதத்தில் அந்த பதாகைகள், அமைவது , நான் முன்புகூறியது போல, பால்ய காலத்தின் முறுக்கும், கொண்ட கொள்கையின் பால் வைத்த விசுவாசமும்அதை முன்னெடுத்து செல்லகூடிய, திடமும், தைரியமும், திண்தோள், வலிமையும் கொண்ட வாலிபர்கள்நிறைந்த நாடு. ஆக இப்படி வாலிப பருவத்தை எட்டும் பொழுதும், சிறு வயதில் தன் அம்மாவிடம்கேட்ட கதைகளை, நம்பி இந்த கதைகளத்தில் இருக்க கூடிய புணைவுகளை, உண்மை என்று என்னி அதுதேடி திரியும் காலம், அங்கே தேடி திரிந்த அந்த இடத்தை அனுகும் பொழுதும், அங்கே எதிர்கொண்டுஅழைக்கும் அண்ணன் மார்கள், சொல்லும், சொல்லிய செய்திகளை நம்பி, திரும்பவும், இப்படியாகஒரு சமூகத்திற்காக நாம் போராடுகிறோம், ஒரு சமூகத்தை மேம்படுத்த போராடுகிறோம், எளியமக்களை வருமையில் இருந்து காப்பாற்ற போராடுகிறோம், எல்லாருக்கும் உதவி செய்கின்றோம்,விசுவாசமாக இருக்கின்றோம், கொள்கையோடு இருக்கின்றோம், என்ற மிகப்பெரிய நம்பிக்கையில்திலைத்து, அதில் அன்றாடம் கிட்டும் கைத்தட்டல்கலும், விசில் சத்தங்களும், ஆராதனைகளும்,ஆர்பரிப்பும், மன மகிழ்வை உண்டாக்கி, அந்த மயக்கத்திலே திலைத்து, இயக்கத்திற்காக தன்னைஅற்பனித்து கொண்ட ஒரு வாலிபன், பின்னாலில் இலக்கியம் சார்ந்து இயங்க ஆரமித்து, எழுத்துலகிற்குவந்து எழுத ஆரப்பித்து இந்த மக்களுக்கான பிரச்சார யுக்தியாகவோ, பரப்புறையாகவோ, இல்லாமல்,முக்கியமாக, வட்டார வழக்குகளை, இயல்பாக கையாண்டு, ஒரு கதைசொல்லியாக, நான் இருப்பதுதவறா கதையே என்று கதையிடம் கேட்கின்றான்.

கதைஅவனிடம் சொல்கிறது, நீ ஒரு தனி மனிதன், உனக்கு ஏற்படும் உணர்வுகள், உண்மையானது, நீஉணரும் உணர்வுகளும் உண்மையானது, ஏற்படும் உணர்வுகளுக்கும், உணரும் உணர்வுகளுக்கும்அதிக வித்தியாசம் இல்லை, ஒரு வித்யாசத்தை தவிர, உன் அண்ணன் மார்கள் சுற்றி நின்று கைதட்டியதுஉனக்கு மகிழ்வு என்றால், அது ஏற்படுத்தபட்டது. நீ யாருக்கேனும் யாரும் பரிந்துரைக்காதவிதத்தில் உதவி செய்து நீ உணர்ந்த மகிழ்வு என்பது, நீ அடைந்த மகிழ்வு. உன் உள்ளுணர்வுஉனக்கு சுட்டிகாட்டிய, அறிவும், தெளிவும், மகிழ்வும் நீ உணர்ந்தவை, உன் அண்ணன் மார்கள்உனக்கு ஏற்படுத்தியது ஏற்படுத்தப்பட்டவை. ஏற்படுத்தபட்டவை பலராலும், பல விதத்தில்,பல நேரங்களிலும், பல வகைகளை உன்னிடம் ஏற்படுத்த முடியும், ஆனால் உன் உள்ளுணர்வு உனக்குஉணர்த்துவது என்பது, கதையாகிய நான், கதைப்பவனாகிய உனக்கு ஏற்படுத்துவது, உணர்த்துவது,இவ்வாறான சுயபரிசோதனையின் உச்சத்திலே, நீ ஒரு கதை சொல்பவனாக, எனக்கு தெரிகின்றாய்.சொல்லப்பட்ட கதையாகிய நான், உன்னிடத்தில் என்ன எதிர்பார்கின்றேன், நான் எதிர் பார்ப்பது,என்னவெண்பது உனக்கு தெரிந்துபோன தருணத்தில் நீ உன் அண்ணன் மார்களை விட்டு பிரிந்தாய்,உனக்காகவும், உன்னுடைய முன் முடிவுகளுக்காகவும், நீ உணர்ந்த எளிய மக்களுக்காகவும்கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறாய், அப்படி நீ சொல்லப்பட்டகதைகள்தான் உன்னுடைய கொண்டாட்டமான மனநிலையின் உச்சத்தில் இருக்கும், தருணங்களிலே நீஎளிய மக்களை பற்றி பேசுகிறாய், எளிய மக்களின் வறுமை பற்றி கதை சொல்கின்றாய், எளிய மக்களின்துயரங்களை பற்றி பேசுகிறாய், இது ஏற்படுத்தபட்டது அல்ல, உணர்ந்த ஒரு விசயம்.

தனிமனிதனாகிய உனக்கு உன்னுடைய உள்ளுணர்வும், கதையாகிய நானும், உணர்த்திய விஷயம், இந்தஉணர்வின் உச்சத்திலே நின்றுதான் நீ எளிய மக்களை பார்க்கின்றாய், கருணையோடும், அன்போடும்அவர்களை, அறிவோடும், செறிவோடும், வளமையோடும், வாழ்வியலை வைத்துக்கொள்ள ஆசைபடுகிறாய்,நீ எதை கடத்த முற்பட்டாயோ, அதை கடத்தும் கருவியாக என்னை பயன்படுத்திகின்றாய், கதையாகியஎன்னை பயன்படுத்துகின்றாய், உன் அம்மா உனக்கு சொன்னது போல.

………………………………….....................................................................................................................
                                                                                    
ஷைலஜா இப்படி சொல்றாங்க பவாவை பற்றி, அவர்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சதே அப்ரிசிஷியேஷன் தான்,பிடித்திருந்தால் கொண்டாடுவார் பிக்கவில்லைனா இனிமே நான் பேனாவே எடுக்க முடியாதபடிகிழிச்சி மூஞ்சில போட்டு விடுவார், அப்படின்னு ஷைலஜா சொல்றாங்க.

எனக்குதெரிந்து அது தான் இந்த கதைப்பவனுக்கும் கதைக்குமான உரையாடல் தொடங்குகின்ற இடம் அப்படின்னுநான் நினைக்கின்றேன். ஆனா ஜே.பி கதைசொல்லியை பத்தி சொல்லும் போது விஷ்வல் தான் கதைசொல்லியைமுதல்ல இம்பரஸ் பன்னி இன்ஃபுலுயன்ஸ் பன்னி அதிலிருந்து பவாவிற்கான ஒரு டூல் பவா தேர்ந்தெடுத்துஎழுத ஆரம்பிச்சதா ஜே.பி. இங்க ஒரு பதிவை சொல்லியிருக்காரு.

ஜெயமோகன்பவாவை பற்றி பேசும் போது இப்படி சொல்றாரு பவாவின் வாழ்வியல் அப்படிங்கறது ஒரு கொண்டாட்டமானமனநிலை ஒரு நெருக்கடி அற்ற வாழ்வியலாக இருக்கின்றதாகவும், அவருடைய எழுத்து என்பது அல்லல்படும்எளிய மனிதர்களை அவர்களுடைய துயரங்களை கருணையோடு பார்க்கக் கூடிய, அவருடைய துயரங்களைஎழுதகூடிய எழுத்தாகவும், இருக்கிறதா ஜெயமோகன் பதிவு பன்றாறு, இந்த இடத்தில் இருந்துதான்பவா செல்லதுரையின் படம் மூன்று விதமா நான் பிரிக்கின்றேன்,
ஒன்றுபவா செல்லதுரையின் விமர்சனம் அப்படிங்கிறது, ஷைலஜா பதிவு பன்னியிருக்கறதாகவும், பவாசொல்லதுரையின் உள்வாங்கள் அப்படிங்கிறது, விஷ்வல் மீடியமா எடுத்துகிட்டா, பவாசொல்லதுரையின்மனநிலையில் பேசனும் அப்படின்னா, ஜெயமோகன் சொன்ன கருத்தை, எடுத்து பார்த்தோம் அப்படின்னாஇந்த படம் ஆரம்பிக்கின்ற இடம், என்பது சிங்காரக்குளம்.


சிங்காரக்குளம்கதைபத்தி பவா பேசும் போது அந்த சிங்காரகுளம் இருந்த ஜமின் பற்றியும், அதனுடைய அமைப்புபற்றியும்  விரிவாக சொல்கின்றார், அந்த ஜமின்நிலைமை இன்றைக்கு என்னவாக இருகின்றது என்பதை விஷ்வலாக காட்டுகின்றார்கள், அப்பறம் அந்தகுளத்தை காட்டுகின்ற பொழுது பவா சொல்கின்றார், இந்த குளத்தினுடைய ஒரு பகுதி இயற்கைஅறன் பாதுகாத்ததாகவும், இன்னொரு பகுதி ஜமின் அப்படிங்குற முதலாளித்துவ மனோபாவம் பாதுகாத்ததாகவும்சொல்லிவிட்டு, அப்படி இரண்டு விஷயங்களால் பாதுகாக்கப்பட்ட அந்த  நீர்நிலை என்பது, ஒரு சிறு வயதிலிருந்து, செவிவழிசெய்திகளாக, கேட்டு கேட்டு, பார்காமல் அனுபவிக்காமல், அனுபவிக்கவும் , பார்க்கவும்தூண்டப்பட்ட  ஒரு மிகப் பெரிய சமூகம் அதை பார்ப்பதற்கும்,அதை சுகிப்பதற்க்கும், அனுபவிப்பதற்கும், ஒரு இயக்கத்தை முன்னெடுத்து அந்த இயக்கமானதுவெற்றி கொள்ளப்பட்டு இயற்கை அறன் அப்படியே விடப்பட்டு, இந்த முதலாளித்துவ மனோபாவம்பாதுகாப்பதிலிருந்து  அந்த நீர்நிலை விடுவிக்கப்பட்டு,அது அதுவாகவே தன்னை விடுவித்துக்கொண்டு இந்த எளிய மக்களுக்காக வரும் பொழுதுஅது தேன் சொட்டும் தண்ணீராக இல்லாமல் போனது அதுதான்என்னுடைய மிகப்பெரிய சோகம் என்று கதைசொல்லியாகிய பவா செல்லதுரை சொல்கின்றார். இதைத்தான்கதைப்பவனுக்கும் கதைக்குமான உரையாடல்களாக நான் பார்க்கின்றேன்.

ஒருகதை சொல்லி தன்னுடைய கதையினிடம் மிகவும் மனம்திறந்து மனம்விட்டு பேசக்கூடிய இடமாக நான்நினைக்கின்றேன் இந்த ஆவணப்படம் என்பது ஏதோ ஒரு கதைசொல்லி பற்றிய ஆவணப்படமாக எனக்குதோன்றவில்லை. கதைசொல்லிக்கும், கதைக்குமான இரண்டுபேரும் மனம் திறந்து பேசிக்கிற ஒருவிஷ்வலாதான் இதை நான் பார்க்கின்றேன். இந்த கதைசொல்லி கதைகிட்ட என்ன பேசறாரு எதைபத்திஆதங்கபடுகின்றார் அப்படின்னு பார்த்தோமானால் தன்னுடைய பால்ய காலத்துல தன்னுடைய அம்மா,குழந்தை பருவத்தில் தன்னுடைய அம்மா தனக்கு சொன்ன பல செவிவழி கதைகள் மூலமாக தூண்டப்படுகின்றார்.இந்த கதைசொல்லி அப்படி தூண்டபட்ட கதை சொல்லி அதை உண்மை என்று நம்புகின்றார், அதில்வந்த அந்த இடையனும், ஆடுகளும் கல்லா சமைஞ்ச இடத்தை சொல்லும் பொழுது அது நமக்கு புரியுது,அப்படி உண்மையிலேயே அது எப்படி இருக்கும் அப்படின்னு பார்க்கனும் அப்படின்னு நினைக்கிறதுஅவர் ஒரு பால்ய பருவத்தை எட்டும் பொழுது, அதை பார்க்கனும் அப்படின்னு நினைக்கின்றாரு,அதை பார்க்க கூடிய தருணத்தில் அங்க பல விஷங்கள் குறியீடுகளாக சொல்லபட்டிருகின்றதும்,என்ன சொல்லியிருக்கு அப்படிங்கறதும் அவருக்கு புரியுது, புரியவருது.

அப்படிபுரியவரும் பொழுதுதான் ஒரு விஷயத்தின் மீது நம்பிக்கை வைத்து அந்த நம்பிக்கையை எட்டுவதற்கானஒரு இயக்கத்தை முன்னெடுத்து அந்த இயக்கம் வெற்றி பெறும் பட்சத்தில் எந்த நோக்கத்திற்காகஅந்த இயக்கம் நடத்தப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறி அது, அவர்கள் இடத்தில் வந்து சேர்ந்ததாஅப்படிங்கிற மிகபெரிய கேள்வி வச்சியிருக்கார், ஒரு வேளை பவா செல்லதுரை தன்னுடைய கதையினிடத்தில்கேட்டுவிட்ட கேள்வியாகவே அல்லது கேட்டு நமக்கு தெரியாமல் போன கேள்வி இதுவாக இருக்குமாஅப்படிங்கிற யூகம் எனக்கு இருக்கு.

அந்தகேள்வி என்ன அப்படின்னா ஒரு வேளை இப்படியான ஒரு குளத்தை பற்றி கேள்வி பட்ட சமூகம் என்பது, தன்னிடம் இருந்த ஒரு குளதையோ, குட்டையையோ சிங்காரகுளத்துக்கு இணையாக மாற்றி அது சம்மந்தமானஒரு செவிவழி செய்தியை நாம் பரப்புரை செய்திருந்தால் ஒரு வேலை சிங்காரகுளமும் காப்பாற்றபட்டுஅதே போன்று இன்னொரு அருமையான குளமும் கிடைதிருக்கும் நீர் நிலைகளை பாதுகாப்பதற்கானஅறிவும், செறிவும், பெற்ற ஒரு மேம்பட்ட சமூகத்தை உருவாக்கி இருக்க முடியுமோ, ஒரு வேளைமேம்பட்ட சமூகம் என்று சொல்லிக்கொள்ளகூடிய முதலாளித்துவ மனோபாவம் உடைய, ஒரு சமூகம்குளத்தை வைத்திருப்பதாக நம்பிய விஷயத்தின் மீது ஆர்வத்தின் பால் ஒரு இயக்கம், முற்பது, நாற்பது வருடங்களாக, முன்னொடுத்துகுளத்த போயி எட்டி பார்க்கின்றான். எட்டி  பார்த்தாஅந்த குளம் யாராலும் பயன்படுத்த முடியாத யாருக்கும் பயனற்ற ஒரு நீர் நிலையாக இருப்பதைகண்ணுரும் பொழுது இந்த நீர் நிலையை பாதுகாப்பது, இதே போன்று இன்னொரு நீர் நிலையை உருவாக்குவதுஅதே போன்ற சமூகத்தை உருவாக்குவது, அப்படியான விஷயங்களில் முற்பது வருடமாக கவனம் செலுத்தாமபோனது, அதை பத்தி பவா தன்னுடைய கதைகிட்ட கேட்டு ஆதங்க பட்டு கேள்வி எழுப்புகின்றாராஅப்படின்னு எனக்கு தோன ஆரமிச்சது, ஒரு சமூக மாற்றம் என்பது, அறிவையும் அறிவு சார்ந்தவிசயங்களையும் ஊட்டி ஒரு சமூகத்தை அறிவின் உச்சதுக்கு கொண்டு போறதுக்கு பதிலா ஏதோ அறிவோடுவாழ்ந்த ஒரு சமூகம் இருந்ததா நம்பி அந்த இடத்தில் கொண்டு போய் மனிதர்களை குடியேற்றிவிட்டால்அல்லது இவர்களை அங்கே போய் இருக்க செய்து விட்டால் இவர்களுக்கு அறிவு வந்து விடும், பாஞ்சாலங்குறிச்சி என்ற நிலப்பரப்பில் நின்றால் வீரம் வந்துவிடும் என்கின்ற ஒரு மித்துக்குஇணையாக ஒரு நம்பிக்கை இன்னமும் நிலவுகிறது. அப்படி சினிமா நட்சந்திரங்களுடைய கட் அவுட்டுகளுக்குபக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டால் நாமும் சினிமா நட்சத்திரம் ஆகிவிடலாம்என்ற நம்பிக்கையையோ, தேன் சொட்டும் அருவி தேனாருவி என்கின்ற நம்பிக்கையையோ, இது போன்றவிஷயங்களின் மீது நம் ஆர்வத்தொடு சொயல்பட்டு அதை எதிர்த்து, அதை அடைவதற்கான ஒரு மிகப்பெரியஒரு இயக்கத்தை நடத்தி அந்த இயக்கம் அந்த இலக்கை அடையும் பட்சத்தில் அங்கு. அவர்களுக்குகிடைகின்ற ஏமாற்றம் அந்த ஏமாற்றத்தின் வலி, அந்த வலியின் வெளிப்பாடு இந்த சமூகத்தின்மேல் பவா செல்லதுரை எவ்வளவு அன்போடும், கருணையோடும், சைலஜா சொன்னதை போல மிகபெரிய விமர்சனத்தைமுன்வைக்கின்றார் அப்படிங்கிறது இந்த படம் மூலமா எனக்கு கிடைத்ததாதான் நான் நம்புகின்றேன்.

……………………….............................................................................................................................

அஜித்தன்கூடவும், வம்சி கூடவும் நான் கதைசொல்லியை பற்றி அடுத்த நாள் காலையிலா நிறைய பேசிகிட்டுஇருந்தேன், அப்போ எங்களுக்கு ஒரு விசயத்தை அஜித்தன் சொன்ன மாதிரி, எல்லா கதைகளிலும்,ஒரு கதையில கன்னி வைப்பதை பற்றி சொல்றாரு, இன்னொரு கதையில ஒரு கூண்டுக்கூல் அடைபட்டமனிதனை பற்றி சொல்றாரு, இன்னொரு கதையில எலிகளை எப்படி புடிப்பாங்கனு, எல்லா வலைகளையும்அடைத்துஅப்படிங்கறத பத்தி பேசுவாறு, இதுல இருந்து என்னனா பவா செல்லதுரை என்கின்றமனிதனுக்கு உள்ளே இருந்து புகைமூட்டத்தில் வேகிற வேதனையும் தெரியும், வெளியில் வந்துநிலபிரபுத்துவ தன்மையினுடைய மனோ பாவத்தினுடைய கொண்டாட்டமும் தெரியும், ஆகவே இந்த நிலப்பிரபுத்துவமனப்பான்மையில் உள்ள காபந்துசெய்யபட்ட கொண்டாட்டம் என்கின்ற மனோபாவத்தை, மனநிலையைஅவர் உடைத்து வெளியில் கொண்டுவந்து எளிய மக்களுக்கு கிடைக்க செய்யும் ஒரு மனிதராக பவாசெல்லதுரை தன்னை உருவக படுத்திக்கொண்டதன் விளைவு பவா செல்லதுரை தன்னுடைய கதையுடன் பவாசெல்லதுரை என்கின்ற கதைசொல்லி ஆதங்க படுவது, பேசுவது, கேள்வி கேட்பது, கதைசொல்லி கதையிடம்கேட்கும் கேள்விகள் என்பது என்னனா?

உள்ளஇருந்து அனுபவித்த வேதனையைதாண்டிஅவர் எளிய மக்களுக்கு இந்த கொண்டாட்டமான மனநிலையை கொண்டுசேர்க்கும் பொழுது அவர் அனுபவிக்கும்வேதனை என்பது அலப்பரியதாக இருப்பதாக தான் இந்த கதைசெல்லி பவா செல்லதுரை தன் கதையினிடத்திலேஅதங்கப்படுகிறார். சூழலை முன்நிறுத்தி ஆதங்கபடுகிறார்.இந்தசுற்று சூழல் என்பது இன்றைக்கு இவ்வளவு கேடு கேட்டுபோய்விட்டதே. இப்போ இந்த விஷ்வல்ஸ்இல்லாம ஜே.பி சொன்ன மாதிரி இந்த கொண்டாட்டமான மனநிலையை இந்த எளிய மக்களிடம் எப்படிகொண்டுபோவது. என்கின்ற ஆதங்கத்தின் உச்சம் தான் அவர் கதையினிடத்தில் அவர் பேசும் பொழுதுஎழுப்பும் கேள்வியாக எனக்கு படுகின்றது.

கதைஅவருக்கு திரும்பவும் ஒரு கேள்வியையும் எழுப்பி பதிலையும் சொல்வதாக இந்த படம் முடிவடைகின்றது.கதை கதைப்பவனிடத்தில் கேட்கும் கேள்வி, எளிய மக்களிடத்தில் கொண்டாட்டமான மனநிலையை கொண்டுசேர்ப்பதற்கு சூழல் சார்ந்த, மனோபாவம் சார்ந்தம், அறிவு சார்ந்த விசயங்களை அவர்களுக்குசெரிவூட்டி இருந்தால் இந்த முற்பது நாற்பது அண்டுகளில் செரிவூட்டியிருந்தால் தாங்கள்கேட்ட, தாங்கள் செவிவழியாக அடைந்த செய்திகளின் உண்மை தன்மை அறியாமல் அதன் மீது போர்தொடுத்து அதற்கு இயக்கம் கண்டதுக்கு பதிலாக அதை போன்ற இன்னொரு சாம்ராஜ்ஜியத்தை நாமேஇந்த முற்பது நாற்பது வருடத்தில் உருவாக்கி இருப்போமேயானால் அது தாங்கள் இயக்கம் காணவேண்டியஅவசியத்தையும், எதற்காக கண்டிருக்க வேண்டும் என்கின்ற அவசியத்தையும், அப்படியாக ஒருஇயக்கம் பேர்லல் பாடியாக முன்னெடுக்க பட்டிருந்தால், பழமையும் காப்பற்றபட்டிருக்களாமே,புதுமையும் மிக அழகாக தங்களுக்கான அடையாளமாக வாழ்வியலின் கொண்டாட்டமாக உண்மையிலேயேஇருந்திருக்குமோ அப்படியான கேள்வியைதான் அந்த கதை கதைசொல்லியான பவாசெல்லதுரையிடம் எழுப்பி,இன்றைக்கு தனிமனிதன் தான் இயக்கம் அப்படி தனி மனித இயக்கத்தினுடைய முன்னோடியகவும் தனிமனிதன் தான் இயக்கம் என்பதை வருங்கால இளைய தலைமுறைக்கு நிதர்சனமாக உணர்த்துபவனாகவும்நீ இருக்கிறாய். உன்னை பார்த்த இளைஞர்களும், உன்னை பார்த்த இன்றைய சமூதாயமும் உன்னைபோன்ற தனிமனித எழுச்சியும், கொண்டாட்டமும், மனநிலையிலும், வாழ்வியலும் கொண்டு இயங்கஆரம்பித்து, இனிவரும் காலங்களில் அடுத்த முற்பது நாற்பது ஆண்டுகளில் நீ நினைக்கும்உலகத்தை உன் கண்முன்னலாயே சிரிஷ்டிக்கும் ஒரு கதை சொல்லியாக இந்த சமுதாயத்திற்கு நீகிடைத்திருக்கின்றாய். நீ அறிவானவன், நீ அன்பானவன், you are the man of love என்றுசொல்வதாகத்தான் இந்த படம் எனக்கு தெரிகின்றது.

வம்சி: பவா  வெறும் கதை சொல்லியா ?

பல இடங்களில் சாப்பாட்டை பத்தி இந்த ஆவணப்படத்தில்சொல்லப்பட்டிருகின்றது. பவா விருந்திற்க்கு அழைப்பதாகவும், விருந்து முடிந்த பின், மிக சிறந்த விருந்து இது என்வாழ்நாளில் அப்படின்னு நண்பர்களிடத்தில் சொல்வதாகவும். அர்த்தபடும்படியான காட்சிகள் இந்த படத்தில் இருக்கு. நீங்க கேட்ட பவாவேரும் கதை சொல்லியா பதிலுக்காக நான் இந்த ஆவணப்படத்துல இருந்து இந்த காட்சிகளைஎடுத்துகிறேன். பவா ஏன் கதைகளை சொல்லனும் பவா என்கிறகதைசொல்லி ஏன் கதைகளை சொல்ல வேண்டும் கதைசொல்லி கதைகளை யாரிடத்தில் சொல்லுகின்றான்,தனக்கு முன்னால் தன்னைவிட தொலைதுரத்தில், தொடர்புக்குஅப்பால் இருக்ககூடியவர்களிடம் தன்னை சந்திக்க வரும் நபர்களிடத்தில், தன்சந்திப்பே இல்லாமல் தொடர்புகொள்ளும் பல பேரிடத்தில், பேச்சின் மூலமாக ஒரு தொடர்பைஅந்த பேச்சின் மூலமாக பேச்சின் எல்லையை விரிவுபடுத்துவதற்காக ஒரு  கதையின் மூலமாக, கதைகதைசொல்லி இரண்டுமே ஒன்றுபோல் அமைந்த வேவ்வேறான வடிவங்கள், கதை சொல்லிக்கு புறஉலகம் என்பது கொண்டாட்டம் மகிழ்வு, அக உலகம் என்பது வலியும்வருத்தமும். கதைக்கு அகம் என்பது கொண்டாட்டம், மகிழ்ச்சி, புறம் என்பது,வலியும்வருத்தமும். ஆக கதை சொல்லி கையாளும் யுக்தி கதைக்கு நேர்எதிர்மாறானது. கதை கையாளும் யுக்தி கதைசொல்லிக்கு நேர்எதிர்மாறானது. இப்போ கதையை பார்த்து கதைசொல்லி கேட்பதுமாதிரியான கேள்வி. நான் வேறும் கொண்டாட்டமான மனநிலையைமட்டும் எளிய மக்களுக்கு கடத்த நினைத்தேனா இல்ல. அப்போ எளியமக்களை மேம்படுத்த, எளிய மக்களை சமூகத்தின் உயர்ந்தஅந்தஸ்தில் நிறுத்த, அதுதான்  அவங்க பள்ளி தோழி முதல் காட்சியில் சொல்லுவங்கசமுகத்தில் நாங்க நிக்கனும் அப்படின்னா, அப்படிங்குறவார்த்தை இருக்கு சமுகத்தில் இவர்களை இவர்கள் மேம்படுத்திக்கொள்ள எப்படிபொருளாதாரரீதியாகவா, அறிவிலா, எந்தவகையில நாகரிகத்திலா, காலச்சாரத்திலா, எந்தவகையில இப்படி பல வடிவங்கள் இருக்கு, ஆக இந்த எளிய மக்கள்தன்னுடைய சமூகத்தை மேம்படுத்த செழுமைபடுத்த, செம்மையடையசெய்ய ஒரு பிம்பம் தேவைபட்டிருக்கின்றது அந்த பிம்பம் தான் ஜே.பி சொன்ன மாதிரி விஷுவல் இன்ஸ்பரேஷன் அந்த விஷ்வல் தான் அம்மா சொன்னகதைகளில் இவருக்கு உருவான பிம்பம், அந்த விஷ்வல் தான் இவர் தேடி போர தேடல்,அந்த விஷ்வல் தன் இவருக்கு உள்ள இருந்து வெளிப்படுகின்றவெளிப்பாட்டு வடிவமான கதை. கதைசொல்லி யாருக்காக கதை சொல்கிறன்,கதைசொல்லி தனக்காகத்தான் கதை சொல்கின்றான் கதைசொல்லியால் சொல்லப்பட்ட கதை, கதைசொல்பவனுக்கு சொல்லப்பட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்து, தினந்தோறும் ஒவ்வொருமுறையும் ஒரு கதையை கதை கதைசொல்லிக்கு சொல்கிறது,இப்படி இருபது ஆண்டுகளுக்கு முன்போ எப்போதோ சொல்லப்பட்ட ஒரு கதைசொல்லப்பட்டவனுக்கு அதன் பின்னர் தினந்தோறும் கதைசொல்லிக்கொண்டே இருக்கிறது,இவ்வாறான கதை கதைசொல்லியினிடத்திலே சொல்லப்பட்ட கதையாகத்தான் நான் பவாசெல்லதுரையின் இந்த படத்தினை பார்க்கின்றேன், பார்த்தேன்.இப்படித்தான் நினைத்து பவா செல்லதுரை வாழ்ந்திருக்கின்றார, இப்படித்தான் நினைத்து ஆர்.ஆர். சினிவாசன் பதிவு செய்தாரா. இப்படித்தான் நினைத்துஅவர்கள் எங்களுக்கு திரையிட்டார்களா, இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். மிக சாதாரன ஒரு எளிய மனிதனாகஎன் முன்னே அந்த படம் கதை சொல்லியும் கதையும் சொன்ன கதையைத்தான் நான் உங்களுக்குஅல்ல எனக்கு கதையாக சொன்னேன். கதை எனக்கு சொன்ன கதை.


நன்றி: அஜிதன், வம்சி, பாவேந்தன்No comments:

Post a Comment