Wednesday, April 1, 2020

மருத்துவத்தை மக்களை நோக்கி - டாக்டர் வெ.ஜீவானந்தம்
கடந்த வாரம் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, பேராசிரியர்கள் என பெயர்பெற்றவர்களை அதிக உரிமை எடுத்து விமர்சித்து முடித்து, என்னை தணித்துக்கொள்ள பாண்டிச்சேரிக்கு, திரும்பிக் கொண்டிருந்தேன். என் நண்பரும், தீவிர வாசிப்பாளருமாகிய தோழர் அமர்நாத் னக்கான மதிய உணவோடு நீண்டநேரம் காத்திருந்தார். அவர் வீட்டு எறா தொக்கும், மடவை மீன் குழம்பும், ணவாய் பொரியலும் எப்போதும் எனக்கு விருப்பமானவை. அதை அமர்நாத் றிமாறும் வித்தை ஒரு கவிதை. இளம்பச்சை நிற வாழையிலையில் ஆரம்பித்து, தண்ணீரை நிரப்பிவைக்க அவர் பயன்படுத்தும் கண்ணாடி டம்ளர்கள் ரை நம்மை அழகியலை நோக்கி ஈர்க்கும்.

உணவு முடித்து அவர் அறையில் உட்கார்ந்த போது சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஒயர் பின்னி கட்டிலை காண்பித்து, ‘இது என்னா சார் புதுசா இருக்கு என நான் என் சொல்லை முடிக்கும் முன்பே, ‘இது டாக்டர் ஜீவாவுக்கு என அவர் முடித்தார். டாக்டர் ஜீவா ஈரோடுதான் எனினும் பாண்டிச்சேரி அவருக்குப் பிடித்தமான ஊர். அவரும் நண்பர்களும் சேர்ந்து நடத்தும் புற்றுநோய் மருத்துவமனை அங்குதான் இருக்கிறது. எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு கேன்சர் தாக்கியிருக்கிறது என்பது முதல் முதலில் அங்குதான் காண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மருத்துவமனை டாக்டர் ஜீவாவுக்கு இரண்டாம் பட்சம் தான். அவருக்கு தன் நண்பன் அமர்நாத்தின் பதினைந்துக்குப் பத்து அறை போதும். இரவு முழுக்க பேசி தீர்க்க அவர்களிருவருக்கும் பல வாழ்வனுபவங்களும், இலக்கியங்களும், னிதர்களும் கூடவே இருந்தார்கள். இருந்தாலும் அவர்களின் உரையாடல் இன்னும் நிறைவடைந்ததேயில்லை. மனிதர்களின் பேச்சுச் சப்தம் கேட்கும் வரை அந்த இரு முதியவர்களின் வாழ்விலிருந்து சேகரிக்கப்பட்ட சொற்களும், அனுபவங்களும் மீதமிருக்கும்.
     
     டாக்டர் ஜீவாவுக்கான அந்த கட்டிலையே வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். இதில் படுக்க  வேறு யாரையும் அனுமதிக்கமாட்டீர்களா  அமர்நாத்? அவர் சிரித்துக் கொண்டார். அந்த சிரிப்பிற்கு அது என் நண்பன் ஜீவாவுக்கானது என்ற சொல் ஒளிந்துகொண்டது. நெல்லைக் கண்ணன், நாஞ்சில்நாடன், பிரபஞ்சன் என எல்லோருக்கும் அமர்நாத்தின் வீட்டில் ஒரு இடமுண்டு, மேசையில் உணவுண்டு, குவளையில் பாண்டிச்சேரி நீர் உண்டு, ஆனால் அந்த கட்டில் ஜீவாவுக்கு மட்டுந்தான். என் வயதான காலத்தில் எனக்கும் இப்படி ஒரு நண்பனின் அருகாமை வாய்க்கவேண்டும் என நான் உள்ளுர ஆசைப்பட்டேன்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலையில் தமு சார்பில் நாங்கள் முன்னெடுத்த ஒரு கருத்தரங்கிற்கு முதன் முதலில் கடிதம் எழுதி நான் ஜீவாவை அழைத்தேன். ’பசுமை இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து சுற்றுச்சூழலின் அவசியத்தையும், தண்ணீரின் முக்கியத்துவத்தையும் அவர் உயிர் போல தமிழக மக்களிடம் கவப் படுத்திக்கொண்டிருந்தார். ஒரு பழைய அம்பாசிடர் காரில் அவர் தன் அப்பா S.P வெங்கடாசலத்தோடும், இன்னும் சில நண்பர்களோடும், திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு வந்திங்கினார்.

ஒரு பெண் போல அழகாவைர் ஜீவா, குரலில் நியாத்திற்கு மென்மை இழையும். மயக்கமருத்து நியுணர் என அறிமுகப் படுத்தப்பட்டார். அவர் அதை விரும்பவில்லை. நான் ஒரு களப்பணியாளன்  பவா, அப்பா, S.P.V. ஈரோடு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் என என் கைகளை பற்றி அழுத்தினார். அத்தனை மென்மையான கரங்கள் ஜீவா உங்கள் கைகள்.

    அன்றைக்கு துவங்கிய நட்பு, இன்னும் இன்னும் இறுக்கமாகி இன்றுவரை நீடிக்கிறது. எதிர்பார்ப்புகளற்ற ட்பின் வலிமை சொல்லில் அடங்காதது. எழுத்தாளர் ஜெயமோகன் தன் புத்தகங்களை சமர்ப்பணம் செய்யும் போது மிகுந்த கவனமெடுத்துக் கொள்வார். ற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி, தியோடர் பாஸ்கரன் என்ற அவ்வரிசையில் ஒரு புத்தகத்தை அவர் ஈரோடு டாக்டர் வெ. ஜீவானந்தத்திற்கு சமர்பித்திருப்பார் அவர் மீதான மரியாதையைக் கூட்டிக் கொள்ளவும், அவரை எனக்கருகே இன்னும் நெருக்கமாக்கிக் கொள்ளவும் இச்சமர்ப்பணம் முக்கிய பங்கு வகித்தது. என் நண்பர்கள் ஆனந்த் ஸக்கரியா, வியர் காயத்தி கேம்யூஸ், னூப் ஸக்கரியா ஆகியோர் போர்ட் கொச்சினில் முன்னெடுத்த அம்மச்சி ஆலமர விழாவிற்கு டாக்டர் ஜீவாவை அழைத்தேன். தொலைதூர  பயணங்களை தன் நண்பர்களோடு கடப்பதில் எப்போதும் அவருக்கு விருப்பமுண்டு என்பதை அறிவேன்.

போர்ட் கொச்சினில், அரபிக்கடற்கரையில் நியாத்திற்கு வியாபித்திருத்த அந்த அம்மச்சி ஆலமரத்தடி வேரில் மனிதர்கள் குழுமியிருந்து, கலை, இலக்கியம், பாடல் கேட்டார்கள். ஒரு நாள் இரவு நானும், டாக்டர் ஜீவாவும் அதன் முக்கிய திதிகள். ஜீவா தன் இதயத்திலிருந்து உதடுகளுக்கு சொற்களை கொண்டுவந்து பேசினார். பழைய ஏற்பாட்டின் சங்கீதம் கேட்டது மாதிரியிருத்தது எனக்கு மொழிபெயர்ப்பு அவசியப் படவில்லை. இரவு ஒரே விடுதியில் தங்கியிருந்தோம். மார்க்சிய இயக்கங்கள் மீது மெல்ல விலகலும், விமர்சனமும் ஏற்பட்டிருந்தது அவருக்கு- நான் பிடி தளராமல் பெரும் நம்பிக்கையோடு இயங்கிக் கொண்டிருந்தேன்.அடுத்த நாள் காலை அவருடைய காரிலேயே ஈரோடு வரை பயணிப்பது என முடிவானது. அந்த நீண்ட பயணம் ஜீவா என்றொரு இன்னொரு மானுடனை முழுவதும் புரிந்துகொள்ள எனக்கு இயற்கை ஏற்படுத்தித் தந்த வாய்ப்பென கருதுகிறேன். நாங்கள் மகாத்மா காந்தி சாலையில் உள்ள நீதிபதி கிருஷ்ணய்யரை சந்திக்கப் போனோம். மூடப்பட்டிருந்த கேட்டிற்கருகே நின்று கிருஷ்ணய்யரின் புகழ்பெற்ற தீர்ப்புகள் குறித்தும், மனித உரிமை செயல்பாடுகளின் மீது அவருக்கிருந்த ஆதீத டுபாடுகள் குறித்தும் ஜீவா எனக்கு குப்பெடுத்தார்.  மூத்த அண்ணணின் பரிவும், அக்கறையும் மிகுந்த ச்சொற்களை இன்றளவும் அப்படியே சேகரித்து வைத்துள்ளேன்.
  
   கொச்சினைத் தாண்டி ஐம்பது கிலோமீட்டர் பயணத்தின்போது ஜீவா என் கைகளைப்பற்றி, ஏதாவதொரு   பாருக்குப்போய் கொஞ்சம் மருந்து சாப்பிடலாமா? என புன்னகைத்தபோது உண்மையில் எனக்குப் புரியவில்லை. லேசான மருத்து மிதமான போதை தந்தது. அதன்பிறகு ஜீவா என்ற  இந்த  மனிதனின் வாழ்வியலை நான் அருகிலிருந்து பருகத் துவங்கினேன். விட்டு விட்டு ஈரோடு வரை நீடித்த அவ்வாழ்வியல் திரவம் திகட்டாதது.

S.P.வெங்கடாசலம் என்ற அந்த இளம் கம்யூளிஸ்ட் தான் ஜீவாவின் அப்பா. அந்த காலத்தில் லூர்து சாமி என்ற பவானியை சேர்ந்த ஒரு கிறிஸ்துவ தோழர்தான் கலைஞர் கருணாநிதியின் எழுத்துக்களை முதன்முதலில் ச்சிலேற்றி அழகுப் பார்த்தவர். அதனால் ஈர்க்கப்பட்ட தோழர் SPV, அவரை அடிக்கடி சந்தித்து உரையாட பவானிக்கும் போவார். கூடுதுறை வரை நீடிக்கும் அவர்கள் நடை உரையாடல் தோழர் லூர்து சாமியின் குடும்பத்தின் மீது தீ பற்று ஏற்பட்டு, அவர் தங்கயை லூர்து மேரியை தந்தைப் பெரியார் லைமையில் திருமணம் செய்து கொள்கிறார் SPV.

தங்கள் சாதியிலிருந்து ஒருவன் ஒரு கிருஸ்துவப்பெண்ணைத் திருமணம் செய்ததை ஏற்காத ஆதிக்கம் அவர்களை ஊர் விலக்கம் செய்கிறது. அதை மனப்பூர்வமாக ஏற்கிறார் SPV.  தன் அண்ணனின் வாழ்வியல் மீது பெரும் மதிப்பும், பிரியமும் வைத்திருத்த தோழர் SPV-யின் தம்பி S.P.சுப்பிரமணியன் அண்ணோடே பயணிக்க விரும்பி, தன் சொந்த சமூகத்தை ஊர்விலக்கம் செய்கிறார். அதோடு அவர் ஆத்திரம் அடங்கவில்லை, எந்த கிருஷ்துவப்பெண்னை திருமணம் செய்ததற்காக தன் அண்ணன் அவமானப்படுத்தப்படடாரோ, அப்பெண்ணின் தங்கை, ஜோன் மேரி என்ற சிரியையை, சுப்ரமணியன் திருமணம் செய்துகொள்கிறார். சொந்த ஜாதியின் மீது அவர்கள் அப்போது பூசின ரும்புள்ளி, செம்புள்ளி காலத்துக்கும் அழியாதது.

ரஷ்யமொழி கற்று, அதிலிருந்து நேரடியாக ரம்சோவ்  சகோதர்களை தமிழ்ல் 1500 பக்கங்கள் மொழிபெயர்த்த அரும்பு அவர்களின் மகள்தான்ஜோன் மேரி வெறும் ஆசிரியை மட்டுமல்ல. வெறிகொண்டு பலமொழிகளை கற்றவர். டாக்டர் ஜீவாவை, அவர் தம்பி டாக்டர் மணியை என்று அக்குடும்பத்திலுள்ள எல்லோரையும் அவரே படிக்கவைத்தார். மயக்கவியல் நிபுராக தன் அக்கா மகன் உயர்ந்தெழுந்ததை, அவர் கனவில் ஒன்று நிறைவேறியதை, அவர் உயிருள்ளவரை கொண்டாடினார்.

நாங்கள் பாலக்காட்டில் வண்டியை நிறுத்தி முடித்தோம். திருவண்ணாமலையில் நடந்த எங்கள் கருத்தரங்தைப் பற்றி பேச்சைத் திருப்பினோம். வாய்க்கால் நீர் எங்கு மடை மாறினாலும் பாய்வதற்கு தயாராகவே இருந்தது. மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று நிகழுமாயின் ஆது தண்ணீருக்காகத்தான் இருக்கும். இருந்த நிந்தடி நீரை அறியாயத்திற்கு உறிஞ்சி அழித்துவிட்டோம். இயற்கையை அழித்த மனித மேம்பாடு எதற்கு? என ஜீவா அந்த கடையில் உயர்த்திய குலை பல மலையாளிகள் வேடிக்கைப் பார்த்தார்கள்.

எந்த மகத்தான படைப்பாளிக்கும் சில தருணங்களில் மட்டுந்தான் படைப்பு முகிழ்ந்து வரும், உரை உள்ள எழுச்சியோடு அமையும், ஜெயமோகனின் இன்றைய காந்தி வெளியீட்டு விழா ஈரோட்டில் நடந்தபோது நானும் ஜீவாவும் அதன் அழைப்பாளர்கள்.  ஜீவா அருமையானதொரு உரை நிகழ்த்தினார். அன்று ஜெயமோகன் நிகழ்த்திய ஏற்புரைக்கு நிகராக நான் பின் எப்போதும் அப்படியொரு ரையை ஜெயமோகனிடமிருந்து கேட்டதில்லை. அக்கூட்டநிறைவிலும் நான் எனக்கு பிடித்தமான ன் ஜீவாவிடம் நிறைய நேரம் உரையாடினேன். காலத்தின் பக்கங்களில் விட்டு விட்டு எங்கள் சந்திப்புகளும், உரையாடல்களும் தொடர்கின்றன.

திப்பு சுல்தானைப் பற்றி, நீலகிரி மாவட்டத்தின் உதகமண்டலம் பற்றி எனத் துவங்கி முட்டாள் வான் ரை, அவர் பல மொழி பெயர்ப்புகளை, தன் சொந்த படைப்புகளை, கால நெருக்கடிகளை பின்னுக்குத்ள்ளி தந்து கொண்டேயிருக்கும் ஒரு எழுத்து உழைப்பாளிதான். அவர் புத்தக பக்கங்களைப்பற்றியோ, அதன் நேர்த்தியைப் பற்றியோ என்றுமே கவனப்படுத்தமாட்டார். கருத்து, தர்க்கம் இவைகளே அவர் வாழ்வின் அடிநாதம்.

           பழங்குடி மக்களுக்கான மருத்துவம், பள்ளிகள் இவைகளின் போதாமைகள் குறித்த பெருங்கவலை அவருக்கு எப்போதும் உண்டு. அது குறித்து அவர் எடுத்த பல முயற்சிகள் பல வெற்றி பெற்றவைகளாகவும், தோல்வியில் முடிந்ததும் உண்டு.

அதனால் என்ன?

  அடுத்தது என்ன? அதுதான் அவர் தன் வாழ்வின் லட்சியவாத கனவென்று குத்துக்கொண்டது. தோழமையும் புரித்துகொள்ளலுமான வரையறுக்கப்பட்ட நண்பர்கள் அவருக்கு உண்டு. அவர்களோடு நிகழ்த்தும் தொடர் உரையாடல்கள், தான் எழுதியதை அவர்களோடு பகிர்ந்து கொண்டு அதை தர்க்கபூர்வமாக மேம்படுத்துவதில் டாக்டர் ஜீவாவுக்கு நிகர் வேரொருவர் இல்லை. என் மீதான னிப்பிரியமும் என் எழுத்தின் மீது பற்றும், என் கதைசொல்லல் மீது பெரும் காலும் அவருக்கு எப்போதும் உண்டு.

  கேரளாவில் அட்டப்பாடியில் முதன்முதலில் நிகழ்ந்த என் கதை சொல்லலுக்கு காரெடுத்துக் கொண்டு வந்தார். கோவையைக் கடக்கும்போது, அவர் பேரன் அழைக்கிறான்.

எங்க தாத்தா இருக்கிங்க?

கோயம்புத்தூரை கடக்கிறேன். அட்டபாடியில் பவா மாமா கதை சொல்கிறார்.

அதைக் கேட்கவா, ஈரோட்ல இருந்து இவ்ளோதூரம் போற?

ஆமாடா

நீ தண்டம் தாத்தா

 அவன் சிரிக்கிறான். அவர் ஆமாடா நான் தண்டம் தான் என அவனுக்கு பதில் சொல்கிறார். இந்த தலைமுறையின் பிரதிநிதி அவன்.
 தாத்தாவின் மதிப்பீடுகள், சமூகத்தின் மீதா அவரின் பற்றுதல்கள், அவர் கடந்து வந்த பாதை எதைப்பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பாத நவீன இளைஞன் அவன். வாட்ஸ்அப்பும், பேஸ்புக்கும் தான் அவன் வாழ்வு. மருத்துவ படிப்பை முடித்து, ஒரு முற்ற, அல்லது கணவனை இழந்த பெண்ணையோதான் மணந்து கொள்வது என்ற தன் தாத்தாவின் லட்சிவாத கனவை அறியாதவன் அவன். அதனால் என்ன? பிரபஞ்சன் சொல்வது மாதிரி, நம்பள மாதிரி நாலு தண்டங்கள் இருப்பதால்தான் இவர்களைப் போல நூறுபேர் வாழ்கிறார்கள்.

   டாக்டர் ஜீவாவை என் தோழனாக அடைந்த பெருமிதங்கள் என் வாழ்வையும் அர்த்தப்படுத்துகிறது.
No comments:

Post a Comment